சன்னி லியோன் வாழ்க்கையில் நடந்தது என்ன? வெளிச்சத்திற்கு வரும் ஒரு உண்மை கதை!

இந்த வரிசையில் வெளியான படங்கள் தான் எம்எஸ் தோனி, சச்சின் மில்லியன் ட்ரீம்ஸ், நீரஜா, சஞ்சு போன்றவை

By: Updated: July 7, 2018, 03:34:39 PM

சன்னிலியோனின் வாழ்க்கையை நடந்த உண்மைக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘கரேன்ஜித் கவுர்: த அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் இயக்குனர்களுக்கு இருக்கும் அதீதமான தைரியம் என்னவென்றால் பிரபலங்களின் வாழ்க்கை கதையை பயோக்ராபியாக எடுப்பது. வாழும் அல்லது மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பது பாலிவுட்டில் ஒரு ஃபேசனாகவே மாறிவிட்டது. இந்த வரிசையில் வெளியான படங்கள் தான் எம்எஸ் தோனி, சச்சின் மில்லியன் ட்ரீம்ஸ், நீரஜா, சஞ்சு போன்றவை

இப்படி வெளியாகும் படங்கள் ரசிகர்களை வெகுளவில் கவர்ந்துள்ளது. தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் வாழ்க்கை கதையை திரைப்படமாக பார்ப்தை ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். சமீபத்தில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பயோ கிராபியும் இணைந்துள்ளது. ஆபாச நடிகையாகவும், பாலிவுட் பிரபலமாகவும் இவரைப்பார்த்த ரசிகர்களுக்கு அவரது மற்றொரு முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன், வாடகைத்தாயின் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாகியது கூட அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த பின்னரே எல்லோருக்கும் தெரிய வந்தது.

இந்நிலையில் கரேன்ஜித் கௌராக பிறந்து வளர்ந்தவர் எப்படி சன்னி லியோனாக மாறினார் என்ற உண்மை பக்கத்தை கூறும் படமாக கரேன்ஜித் கவுர்: த அன்டோல்ட் ஸ்டோரி தயாரியுள்ளது. இப்படம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சன்னி லியோன், நான் இந்த படத்தில் நடிக்கவில்லை , நானே இருக்கிறேன் என்றும் என் வாழ்க்கை சுருக்கத்தை இதில் கூறியுள்ளனர் என்றும் இதில் என்னை பற்றி தெரியாத சில செய்திகளும் உள்ளன என்றும் பதிவிட்டுள்ளார்.

ஜீ டி.வி தயாரித்திருக்கும் இப்படம் வெப் சீரியஸாக வெளியாகவுள்ளது. நேற்று மாலை வெளியான இந்த படத்தின் ட்ரைலர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Watch sunnys documentary trailer traces rollercoaster journey of karenjit kaur

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement