OTT: ஆசை ஆசையாய் இருக்கிறதே... குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஃபீல்குட் படங்கள்; பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

வீக் எண்டில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய ஃபீல் குட் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

வீக் எண்டில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய ஃபீல் குட் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
tahdiya

வீக் எண்ட் ஆனாலே ஓ.டி.டி-யில் குடும்பத்துடன் படம் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அப்படி இந்த வாரம் ஓ.டி.டி-யில் பார்க்கக் கூடிய ஃபீல்குட் படங்கள் குறித்த பட்டியலை பார்க்கலாம்.

Advertisment

கோம்

கடந்த 2021-ஆம் ஆண்டு மலையலத்தில் வெளிவந்த தரமான ஃபீல் குட் திரைப்படம் ’கோம்’ (Home). இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

கப்பி

2016-ஆம் ஆண்டு இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கப்பி’ (Guppy’. இந்த படத்தில் டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சிறுவர்களை சுற்றி நடக்கும் சுவாரசிய கதைக்களம் கொண்ட இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்து மகிழலாம்.

நீலாகாஷம் பச்சக்கடல் சுவன்ன பூமி

இயக்குநர் ஷமீர் தஹிர் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நீலாகாஷம் பச்சக்கடல் சுவன்ன பூமி’ (Neelakasham Pachakadal Chuvanna Bhoomi). இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அட்வென்ச்சர், திரில்லர், ரொமான்ஸ் கலந்த இந்த ஃபீல் குட் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

Advertisment
Advertisements

1983

கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘1983’. இந்த படம் இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டு அதனை சுற்றி நடக்கும் சுவாரசிய கதைக்களத்தை கொண்டதாகும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் குடும்பத்துடன் பார்த்து வீக் எண்டை எஞாய் பண்ணுங்க.

டா தடியா

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ‘டா தடியா’  (Da Thadiya). காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.

ஜாக்கோப்பின்டே சொர்க்கராஜ்யம்

இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘ஜாக்கோப்பின்டே சொர்க்கராஜ்யம்’ (Jacobinte Swargarajyam). இந்த படத்தில் நிவின் பாலி, ரெபேக்கா மோனிகா ஜான், ரென்ஜி பனிக்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அசத்தலான இந்த ஃபீல் குட் படத்தை மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி-யில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

OTT Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: