சினிமாவில் நீடிக்க எது அவசியம்? நடிகை ராகுல் பிரீத்சிங் பேட்டி

அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு அழகு வந்தது. ஆனாலும் சினிமாவில் நிலைத்து நிற்க, திறமை ரொம்ப முக்கியம். திறமை இல்லாத நடிகளை ஒதுக்கிவிடுவார்கள்.

சினிமாவில் நீடிக்க திறமை மிகவும் அவசியம் என நடிகை ராகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராகுல் பிரீத்சிங், இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என சுழன்று சுழன்று நடித்து வரும் ராகுல் பிரீத்சிங் ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

நடிகைகள் எந்த மொழி படத்தில் நடிக்கிறாரோ, அந்த மொழியையும், அதன் கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும். மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. நான் தமிழையும் கற்று வருகிறேன்.

இந்தி படத்தில் நடித்து வருவதால், எனக்கு தென்னிந்திய மொழிகளில் படங்கள் குறைந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தென் இந்திய மொழி படங்களுக்குதான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை தமிழ் பெண்ணாக பார்க்கிறார்கள். தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கு பெண்ணாக பார்க்கிறார்கள். கதாநாயகிகளுக்கு அழகு ரொம்ப முக்கியம்.

அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு அழகு வந்தது. ஆனாலும் சினிமாவில் நிலைத்து நிற்க, திறமை ரொம்ப முக்கியம். திறமை இல்லாத நடிகளை ஒதுக்கிவிடுவார்கள். முன்பெல்லாம் கதைகளில் நான் ஈடுபாடு காட்டுவது இல்லை. வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டு நடித்தேன். இப்போது கதை தேர்வில் அக்கறையோடு இருக்கிறேன்.’’

இவ்வாறு ராகுல் பிரீத் சிங் சொன்னார்.

×Close
×Close