சூர்யாவின் அடுத்த பட இயக்குநர் யார்னு தெரியுமா?

சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவனும், அதற்கடுத்த படத்தை லோகேஷ் கனகராஜும் இயக்க உள்ளனர்.

சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவனும், அதற்கடுத்த படத்தை லோகேஷ் கனகராஜும் இயக்க உள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், கலையரசன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், நந்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. ரகுல் ப்ரீத்சிங் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கலாம் எனத் தெரிகிறது.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினி, நந்திதா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸாக முடியாமல் தவித்துவரும் நிலையில், சூர்யாவை வைத்து அடுத்த படத்தைத் தொடங்குகிறார் செல்வராகவன்.

அதற்கடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் சூர்யா என்கிறார்கள். ‘மாநகரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். ஸ்ரீ, சந்தீப் கிஷண், ரெஜினா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதையால் இந்தப் படம் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close