சம்பளத்தை செட்டில் செய்யாததால் டப்பிங் பேசாத அரவிந்த் சாமி

தன்னுடைய சம்பளத்தை செட்டில் செய்யாததால், ‘சதுரங்க வேட்டை 2’ படத்துக்கு டப்பிங் பேசாமல் இருக்கிறாராம் அரவிந்த் சாமி.

தன்னுடைய சம்பளத்தை செட்டில் செய்யாததால், ‘சதுரங்க வேட்டை 2’ படத்துக்கு டப்பிங் பேசாமல் இருக்கிறாராம் அரவிந்த் சாமி.

‘சைத்தான்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சதுரங்க வேட்டை 2’. அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்க, த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் இயக்குநர் வினோத், இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். மனோபாலா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், ஸ்ரீமன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, அஷ்வமித்ரா இசையமைக்கிறார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லாப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படத்துக்கு, அரவிந்த் சாமி இன்னும் டப்பிங் பேசவில்லையாம். பேசிய சம்பளத்தை இன்னும் செட்டில் செய்யாததுதான் காரணம். அதை செட்டில் செய்த பிறகே டப்பிங் பேசுவார் அரவிந்த் சாமி என்கிறார்கள்.

×Close
×Close