Advertisment

சங்கமித்ராவில் இருந்து ஏன் விலகினார் ஷ்ருதி?

படப்பிடிப்புக்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனால்.....

author-image
Anbarasan Gnanamani
May 30, 2017 13:20 IST
சங்கமித்ராவில் இருந்து ஏன் விலகினார் ஷ்ருதி?

ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருந்த திரைப்படம் 'சங்கமித்ரா'. இப்படத்தின் நாயகியாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. அப்போது ரெட் கார்ப்பெட்டில் ஷ்ருதி முதன்முறையாக நடந்து வந்தார்.

Advertisment

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜெயம் ரவி, ஆர்யாவும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக ரசிகர்களிடையே உருவானது.

இந்நிலையில், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஷ்ருதி ஹாசனுடன் இப்படத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டது" என குறிப்பிட்டது.

இதையடுத்து, ஷ்ருதி தரப்பில் இருந்து அவரது மக்கள் தொடர்பாளர் மூலம், ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஷ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள், படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே அவர் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்புத் தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்குத் தெரியும்.

படப்பிடிப்புக்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனால், 'சங்கமித்ரா' படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.

ஷ்ருதி தற்போது நடித்துள்ள ’பெஹன் ஹோகி தேரி’ பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ’சபாஷ் நாயுடு’ படத்துக்காகத் தயாராகிவருகிறார்.' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Sangamithra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment