விக்ரம் மகனுக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்?

‘வர்மா’ படத்தில், த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘வர்மா’ படத்தில், த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
varma

‘வர்மா’ படத்தில், த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவர்கொண்டா ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ‘அர்ஜுன் ரெட்டி’, 41 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. எல்லா இடங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய பலர் போட்டி போட்டனர்.

கடைசியாக, நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் ரீமேக்கை பாலா இயக்குவதாகவும் தெரிவித்தனர். தனக்கு ‘சேது’ மூலம் வாழ்க்கை கொடுத்த பாலாவை, செண்டிமெண்ட் படி தன் மகனையும் இயக்கச் சொல்லியிருக்கிறார் விக்ரம்.

Advertisment
Advertisements

தமிழில் இந்தப் படத்துக்கு ‘வர்மா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம் என பல தேடல்களுக்கு மத்தியில், கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள். உதவி இயக்குநரான அக்‌ஷரா ஹாசன், அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் நடித்துள்ளார்.

Arjun Reddy Tamil Cinema Dhruv Vikram Bala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: