பெண் பைக் ரேசர் அலிசா அப்துல்லா பாஜகவில் இணைந்துள்ளதாக வெளியான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் பைக் ரேஸ’ விளையாட்டு வீராங்கனையாக அறியப்படும் அலிசா அப்துல்லா தனது 8 வயதில் இருந்து பைக் ரேசில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தொடர்ந்து 2014-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான இரும்புக்குதிரை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் நெருங்கிய தோழியாவார்.
இதனிடையே தற்போது அலிசா அப்துல்லா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை முதன்மை அரசியல் கட்சியாக கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலை நாட்டில் பிரபலமாக உள்ள பலரையும் பாஜகவில் இணைந்து வருகிறார்
இந்த முயற்சியில் ஏற்கனவே நடிகர் ராதாரவி, கௌதமி, உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து தற்போது அலிசா அப்துல்லாவும் இணைந்துள்ளார். சென்னையில் நந்த ஒரு விழாவில் அலிசா பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் பாஜக பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், பாஜகவில் இணைந்தது குறித்து பைக் ரேசர் அலிசா அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜகவில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணாமலை மற்றும் அமர் பிரசாத் ரெட்டி அளித்த மரியாதை காரணமாகவே பாஜகவில் இணைந்துள்ளேன். பாஜகவில் இணைந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் 25-வருடமாக பைக்ரேசில் இருந்தும் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. மற்றவர்கள் போல் பாஜகவில் பதவியோ அல்லது சீட்டோ தருவதாக கூறியதால் நான் சேரவில்லை நானாகத்தான் வந்து சேர்ந்துகொண்டேன். மாட்டு இறைச்சி அரசியல் பற்றி பேசுகிறார்கள். மொத்த இந்தியாவும் சைவமாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“