ரஜினி நடிக்கும் படம் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாறு அல்ல... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்து படம் எடுத்தால் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்

மும்பையில் பிரபல தாதாவாக விளங்கியவர் ஹாஜி மஸ்தான். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையிலான படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஹாஸி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் இதற்கு எதிர்பு தெரிவித்து, ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினார்.அதில், ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்து படம் எடுத்தால் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 161” திரைப்படம் குறித்து ஊடகங்களில் பல விதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, இந்த படம் ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், இது மும்பை பின்னணியை கொண்ட கற்பனை திரைப்படமே தவிற, யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை அல்ல என விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கம்,

 

×Close
×Close