அவருடைய நண்பர் அதை வாட்ஸ் அப்பில் பகிர, அந்தப் பெண்ணின் அண்ணனுக்கும் அந்த வீடியோ சென்றிருக்கிறது. இதனால் வீட்டில் பிரச்னை வெடிக்க, அந்தக் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
எக்ஸ் வீடியோஸ் என்றாலே, எல்லோருக்கும் ‘அந்த’ மாதிரியான படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த மாதிரியான படங்கள் வேண்டாம் என்று சொல்வதற்காக ‘எக்ஸ் வீடியோஸ்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் சஜோ சுந்தர். புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
எக்ஸ் வீடியோஸ் பார்ப்பதில் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இயக்குநரின் நண்பர் ஒருவருக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. தான் பார்ப்பது மட்டுமல்லாமல், அந்த வீடியோக்களை நண்பர்களிடமும் காட்டி சந்தோஷப்பட்டிருக்கிறார். அப்படி ஒருநாள் இயக்குநருக்கு சில வீடியோக்களைக் காட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு வீடியோவைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார் இயக்குநர். காரணம், அந்த வீடியோவில் இருந்தது வேறொரு நண்பரின் மனைவி.
அதுமட்டுமல்ல, இயக்குநருக்குத் தெரிந்த ஒருவருக்கு, கல்லூரிக்குச் செல்லும் பெண் இருந்திருக்கிறார். அவருடைய ஆண் நண்பனுடன் அப்படி இப்படி இருக்கும்போது, அதை வீடியோவாக எடுத்திருக்கிறார் அந்த ஆண் நண்பர். அவர் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறார். ஆனால், அவருடைய நண்பர் அதை வாட்ஸ் அப்பில் பகிர, அந்தப் பெண்ணின் அண்ணனுக்கும் அந்த வீடியோ சென்றிருக்கிறது. இதனால் வீட்டில் பிரச்னை வெடிக்க, அந்தக் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
இந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட இயக்குநருக்கு, இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவுதான் இந்தப் படம். “அடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப் பார்க்கும் செயலின் நாகரிக வளர்ச்சிதான் இது” என்கிறார் இயக்குநர் சஜோ சுந்தர். ‘அந்த’ மாதிரி வீடியோக்களைத் தடுக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குநர், ‘எக்ஸ் வீடியோஸ்’ இணையதளத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் கூறியதில் முக்கியமான விஷயம், ‘இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுப்பேன்’ என்பதுதான். விஜய் சேதுபதி, காயத்ரி, மகிமா நம்பியார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புரியாத புதிர்’ படமும் இந்தக் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.