வி.இஸட்.துரை இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஏமாலி’. சமுத்திரக்கனி, அறிமுக நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷிணி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பக சிறுவர்களுடன் ‘ஏமாலி’ படக்குழு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியது. சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷிணி மூவரும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும், அவர்களுக்குத் தேவையான பண உதவிகள் செய்தும் கொண்டாடினர்.