Advertisment

தீபாவளி தினத்தில் பெண் குழந்தைக்கு தந்தையான யோகி பாபு..

யோகி பாபுவின் முதல் குழந்தையான விசாகனும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத திங்கள்கிழமையில் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

author-image
Jayakrishnan R
Oct 24, 2022 22:45 IST
Yogi Babu Blessed with Girl Baby

நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபுக்கு இன்று அதிகாலை 3.14 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிப்பராக பயணிப்பவர் யோகி பாபு. சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்த பிரபலம் இவர்.

Advertisment

ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் தவிர, சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நாயகனாகவும் நடித்துவருகிறார்.

இவரின் நடிப்பில் மண்டேலா, கூர்கா உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் யோகி பாபுவுக்கு 2020ஆம் ஆண்டு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்தத் தம்பதிக்கு விசாகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பார்கவி மீண்டும் கர்ப்பமுற்றார். தற்போது யோகிபாபு-பார்கவி ஜோடிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை திங்கள்கிழமை (அக்.24) அதிகாலை 3.14 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளது.

யோகி பாபுவின் முதல் குழந்தையான விசாகனும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத திங்கள்கிழமையில் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment