Advertisment

அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா

அஜித் நடிப்பில் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா

சிவாவுடன் ‘தல’

அஜித் நடிப்பில் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா, அடுத்ததாக அஜித்தை வைத்து ‘வீரம்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் ஹிட்டாக, அடுத்ததாக ‘வேதாளம்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் வழங்கினார். அந்தப் படமும் ஹிட்டாக. ஹாட்ரிக்காக ‘விவேகம்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் வழங்கினார்.

ஆனால், ‘விவேகம்’ படம் எதிர்பார்த்தபடி சரியாகப் போகவில்லை. கதையில் கோட்டைவிட்ட சிவா, கலெக்‌ஷனிலும் கோட்டை விட்டார். ஆனாலும், அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் நான்காவது முறையாக வழங்கியிருக்கிறார் அஜித். ‘விவேகம்’ படத்தில் விட்டதை, இந்தப் படத்தில் பிடிக்கும் வெறியோடு உழைத்துக் கொண்டிருக்கிறார் சிவா.

‘வேதாளம்’, ‘விவேகம்’ இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் அனிருத். சிவாவைப் போலவே அவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் தருவார் அஜித் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. ‘ஆலுமா டோலுமா’ ஹிட் கொடுத்த அனிருத்துக்குப் பதிலாக, யுவன் சங்கர் ராஜா அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கப் போகிறார்.

அஜித் நடித்த ‘தீனா’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட அஜித்தின் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. சில வருட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அஜித்தின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு யுவனுக்கு கிடைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Tamil Cinema Ajith Yuvan Shankar Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment