தனுஷின் ‘மாரி 2’ படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா

தனுஷின் ‘மாரி 2’ படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இதன்மூலம் தனுஷும், யுவனும் 10 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.

happy birthday yuvan shankar raja
யுவன் ஷங்கர் ராஜா

10 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து  ‘காதல் கொண்டேன்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘ட்ரீம்ஸ்’, ‘புதுப்பேட்டை’, ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, ‘யாரடி நீ மோகினி’ ஆகிய தனுஷ் படங்களுக்கு இசையமைத்தார்.

அதன்பிறகு ‘3’ படத்தின் மூலம் அனிருத்தை இசையமைப்பாளராக்கிய தனுஷ், அவர் மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், டி.இமான், ஷான் ரோல்டன் ஆகிய இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றியுள்ளார்.

ஆனால், அனிருத் அளவுக்கு சமீபத்தில் யாரும் தனுஷுக்கு ஹிட் கொடுக்கவில்லை. எனவே, தன்னுடைய நீண்டகால நண்பரான யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய முடிவு செய்துள்ளார் தனுஷ். பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’, கெளதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் தற்போது பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yuvan shankar raja music for dhanushs maari

Next Story
அர்ஜுன் இயக்கத்தில் ‘சொல்லி விடவா’ இசை வெளியீட்டு விழா ஆல்பம்solli vidava
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X