அமைதியா இரு, இல்ல கொன்னுடுவேன்; போலீஸ் தங்கையை மிரட்டும் எம்.எல்.ஏ மனைவி: பக்தி சீரியலாக அண்ணா!

ஜீ தமிழின் அண்ணா, கெட்மேளம், மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் அண்ணா, கெட்மேளம், மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
D. Elayaraja
New Update
Anna Serial Kani

கனிக்கு என்னாச்சு? பதறி தவிக்கும் ஷண்முகம் குடும்பம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனி காணாமல் போன விஷயம் அறிந்து குடும்பத்தினர் பதறிய நிலையில் இன்று, சண்முகம் பரணி இளநீர் குடிக்க கீழே இறங்குகின்றனர், அப்போது ஒரு பைத்தியக்காரன் இந்த பக்கமா போகாதீங்க, வந்த வழியே திரும்பி போங்க என்று சொல்ல இருவரும் ஏன் இப்டி சொல்றாரு என்று குழப்பம் அடைகின்றனர். 

அடுத்து கனி அவ அண்ணன் கூட போய் இருக்கணும் என்று பாண்டியம்மா கிளப்பி விட ரத்னா போன் போட்டு விசாரிக்க கனி எங்க கூட வரல, அங்க தான் இருப்பா என்று ஷாக் கொடுக்கின்றனர். உடனே பாண்டியம்மா சரி விடுங்க எங்க போய் இருக்க போறா? இங்க தான் எங்கயாச்சும் பக்கத்துல போய் இருப்பா என்று சொல்கின்றனர். 

மேலும் வைஜெயந்தி கனியை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எல்லாருக்கும் எழுகிறது. வைஜெயந்தியை சந்தித்து விசாரிக்க அவள் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறாள். இங்கே எம்.எல்.ஏ-வின் மனைவி கனியிடம் அமைதியா இரு. இல்லனா உன்னை கொல்ல கூட தயங்க மாட்டோம் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

லட்சுமியை தட்டி கழிக்கும் ரகுவரன்.. கடையில் காத்திருந்த அவமானம் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவராமனின் இன்சூரன்ஸ் பணத்தை பிறகு ரகுவரன் ஆட்டையை போட்ட நிலையில் இன்று, லட்சுமி வீட்டில் சமைக்க தேவையான பொருட்கள் எதுவும் இல்லாததால் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வருகிறாள். அப்போது ரகுவரன் எல்லாருக்குமே வீடு கிரகப்பிரவேச பத்திரிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறான். 

லட்சுமி ரகுவரனிடம் பணம் கிடைத்து விட்டதா என்று கேட்க ரகுவரன் ஒரு இடத்துல சொல்லி வைத்திருந்தேன் கிடைத்துவிட்டது என்று சொல்கிறான். பிறகு அவனது மனைவி அத்தைக்கும் கொடுக்கலாம் என்று சொல்ல இப்போ பாட்டிக்கு உடம்பு முடியாம இருக்கு அதனால அவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம் என்று சொல்லி தட்டி கழிக்கிறான். 

பிறகு லட்சுமி மளிகை கடைக்கு செல்ல மளிகை கடைக்காரர் கொடுக்க வேண்டிய பாக்கியம் கேட்க லட்சுமி இப்ப கையில் பணம் இல்லை சீக்கிரம் கொடுத்து விடுகிறேன் இப்போதைக்கு கொஞ்சம் மளிகை சாமான் வேண்டும் என்று கேட்கிறாள். ஆனால் கடைக்காரர் மளிகை சாமானை தர முடியாது என்று மறுத்து விட லட்சுமி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள். 

அந்த சமயத்தில் அவளது தோழி ஒருவர் அந்த பக்கமாக வர லட்சுமி அவரிடம் கடனாக 2000 ரூபாய் கேட்க, அந்தப் பெண் பணம் இல்லை என சொல்லி விடுகிறார். மேலும் கேட்டரிங் வேலை ஒன்று இருப்பதாகவும் அதை செய்தால் நீ கேட்ட பணம் கிடைக்கும் என்று சொல்ல லட்சுமி கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்கிறாள். பிறகு லட்சுமி திரும்பி பார்க்க முருகனின் அம்மா அங்கே நிற்க என் புள்ளைங்க 30 வருஷமா நீ வளர்த்து இருக்க உனக்காக நானும் ஏதாவது செய்யணும் நானும் உன்னோட வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறாள். 

அடுத்ததாக ரேவதியின் கடைக்கு ஒருவர் வந்து வீட்டுக்கு கிரகப்பிரவேச பூ டெக்கரேஷன் ஆர்டர் இருப்பதாக சொல்ல ரேவதி அதை செய்து கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்தியை வீழ்த்த நடக்கும் திட்டம்.. சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலில் கும்பாபிஷேக பத்திரிகையை வைத்து பூஜை செய்த நிலையில் இன்று, பத்திரிகையில் சிவனாண்டி, முத்துவேல் பாஸ்பரஸ் கெமிக்கலை தடவியதை கார்த்திக் பார்த்து விடுவது தெரிய வருகிறது, இதனால் அந்த பத்திரிகையையும் வைத்து பாலபிஷேகம் செய்ய சொல்லி இந்த திட்டத்தை முறியடிக்கிறான். 

அடுத்து ஊர் தலைவரான சாமுண்டீஸ்வரிக்கு முதல் பத்திரிக்கையை வைக்கலாம் என்று முடிவெடுத்து கார்த்திக் பத்திரிக்கை கொடுக்க சாமுண்டீஸ்வரி கண்டிப்பா இந்த கும்பிஷேகத்திற்கு வர மாட்டேன் என்று பதில் கொடுக்கிறாள். மறுபக்கம் காளியம்மா கும்பாபிஷேகத்தை நிறுத்தி பழியை சாமுண்டீஸ்வரி மீது போட திட்டம் போடுகிறாள்.

தொடர்ந்து ஊரில் பந்தக்கால் நடுவதால் யாரும் வெளியூருக்கு போக கூடாது, மாமிசம் சாப்பிட கூடாது என்று அறிவிக்கின்றனர். பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரி வர மாட்டேன் என்று சொன்னதால் வருத்தப்பட கார்த்திக் அத்தையை கூட்டிட்டு வர வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: