scorecardresearch

அணிவகுக்கும் 3 தொடர்கள்: பிரபலங்கள் புடை சூழ அறிவித்த ஜீ தமிழ்

அமுதாவும் அன்னலக்ஷ்மியும், மாரி மற்றும் மீனாக்ஷி பொண்ணுக ஆகிய மூன்று தொடர்கள் ஒளிபரப்புவது பற்றிய அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஊடக சந்திப்பின்போது வெளியிட்டுள்ளது.

அமுதாவும் அன்னலக்ஷ்மியும், மாரி மற்றும் மீனாக்ஷி பொண்ணுக ஆகிய மூன்று தொடர்களை வெளியிடும்போது (Photo Credit: Gokul Subramaniam)

ஜீ தமிழ் தொலைக்காட்சி, கதை சார்ந்த டிவி தொடர்களை ஒளிபரப்புவதில் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இப்போது பிரதான நேரத்தில் மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் தமிழ் குடும்ப மகளிரை இதயபூர்வமாக கவரும் கதைக்களம் கொண்டவையாகும்.  

அமுதாவும் அன்னலக்ஷ்மியும் மற்றும் மாரி ஆகிய இந்த இரண்டு தொடர்களும் ஜூலை 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.  மூன்றாவது தொடரான மீனாக்ஷி பொண்ணுக என்ற தொடர் ஒளிபரப்பும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த மூன்று தொடர்கள் ஒளிபரப்பாவது தொடர்பான அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஊடக சந்திப்பின்போது வெளியிட்டுள்ளது. 

“தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புகள் கம்மியா இருக்கு” நடிகை வனிதா விஜயகுமார்

இந்த மூன்று தொடர்கள் குறித்த அறிவிப்பு பிரம்மாண்மான ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்டது. இதில் தொடர்கதைகளின் நடிகர், நடிகையர்களும் பங்கேற்றனர். இந்தத் தொடர்களை பிரபலப்படுத்த ஜீ தொலைக்காட்சி ‘வாங்க பார்க்கலாம் – இது நம்ம நேரம்’ என தலைப்பிட்டுள்ளது. 

இந்தத் தொடர் நடிகர், நடிகைகளான மாரி – ஆஷிகா, சேது புகழ் அபிதா, டெல்லி கணேஷ், ஆதர்ஷ், வனிதா விஜயகுமார் மற்றும் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடரில் நடிக்கும் சோனியா, கண்மணி, கருத்தம்மா புகழ் ராஜ்ஸ்ரீ, அருண் பத்மநாபன்  மற்றும் மீனாக்ஷி பொண்ணுக தொடரில் நடிக்கும் இரண்டு முறை தேசிய விருது பெற்ற வீடு திரைப்பட புகழ் அர்ச்சனா, மோக்ஷிதா, காயத்ரி யுவ்ராஜ், பிரானிகா, ஆர்யன் ஆகியோர் தங்களது தொடர்கள் குறித்து விளக்கினர்.

எதிர்வரும் தொடர்கள் குறித்து ஜீ பொழுதுபோக்கு என்டர்பிரைசஸர் நிறுவனத்தின் தலைமை வர்த்தகப் பிரிவு அதிகாரி ரமணகிரிவாசன் கூறியது: 

“தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு சிறந்த தொடர்களை அவர்களை இதயம் தொடும் வகையிலான கதையம்சம் கொண்ட தொடர்களை அளிப்பதில் எப்போதும் பெருமை அடைகிறோம்.  மிகவும் வலுவான கதைக்களம், சிறந்த நடிகர், நடிகையர் மூலம் இந்தத் தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  அமுதாவும் அன்னலக்ஷ்மியும், மாரி மற்றும் மீனாக்ஷி பொண்ணுக ஆகிய தொடர்கள் தமிழ் குடும்பத்தினரை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.  இவற்றைப் பிரபலப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள வாங்க பார்க்கலாம் – இது நம்ம நேரம் என்ற விளம்பரத்தில் ஸ்நேகா, சரண்யா பொன்வண்ணன், சங்கீதா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களது உரையாடல் மேலும் பலரை ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடரை பார்க்க ஈர்க்கும் என்று நம்புகிறேன்”, அவர் கூறினார்.

மேலும், அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடர்கதையின் அனுபவங்களைப்பற்றி நடிகை ராஜ்ஸ்ரீ கூறியதாவது:

நடிகை ராஜ்ஸ்ரீ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொழுது (Photo Credit: Gokul Subramaniam)

“ஜீ தமிழ் தொடர்கதையில் நடிக்கும் அனுபவம் நன்றாக இருக்கிறது. இதில் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் நிறைந்தது. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதற்காக ஜீ தமிழில் பணிபுரிகிறேன்.

எங்களுடைய தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சக நடிகர்களுக்கு நன்றி கூறுகிறேன், படப்பிடிப்பின்போது எனது தேவைகளை அறிந்து அதற்கு ஏத்தார் போல உதவினார்கள். மேலும், இந்த பிரம்மாண்டமான ஊடகவியலாளர்களின் சந்திப்பு எங்களின் பொறுப்புகளை நினைவூட்டுகிறது”, என்று கூறுகிறார். 

இரண்டு முறை தேசிய விருது பெற்ற வீடு திரைப்பட புகழ் அர்ச்சனா கூறியதாவது:

வீடு திரைப்பட புகழ் நடிகை அர்ச்சனா (Photo Credit: Gokul Subramaniam)

” தொலைக்காட்சியில் நடிப்பதை விட்டு விலகியே சில வருடங்கள் இருந்தேன். பெண் கதாபாத்திரங்கள் சமீபத்திய படங்களில் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்பதை தற்போது உணருகிறேன். அப்படிப்பட்ட சூழலில், எங்களுக்கு பிடித்த விஷயங்களை திரையின் முன் வெளிக்கொண்டு வருவதற்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது. எங்களுடைய லைப்ஸ்டைல், எண்ணங்கள், உணர்வுகள், அன்பு அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கு சின்னத்திரை உதவுகிறது. இந்த தொடர்கதையின் மூலம் என்னுடைய உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம் என்பது ஆனந்தத்தை குடுக்கிறது”, என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Zee tamil announced three serials during press conference