சிபு சூரியன் அவுட், வெற்றி கேரக்டரில் என்ட்ரி ஆன ஸ்ரீகுமார்: கெட்மேளம் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழின் கெட்டிமேளம் சீரியலில் வெற்றி கேரக்டரில் நடித்து வந்த நடிகர் சிபு சூரியன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் வெற்றி கேரக்டரில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஜீ தமிழின் கெட்டிமேளம் சீரியலில் வெற்றி கேரக்டரில் நடித்து வந்த நடிகர் சிபு சூரியன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் வெற்றி கேரக்டரில் நடிக்க தொடங்கியுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
zee tamil Serial

வாழ வந்த வீரா.. சௌந்தரபாண்டிக்கு காத்திருக்கும் ஷாக் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் வீரா வாழ வராததால் வெளிநாடு கிளம்ப தயாரான நிலையில் இன்று, சிவபாலன் ஏர்போர்ட் கிளம்பி செல்ல சௌந்தரபாண்டி வீராவை தனது வீட்டிற்கு அழைப்பதற்காக கிளம்பி சண்முகம் வீட்டிற்கு வருகிறான். சண்முகம் வீட்டிற்கு வெளியே நின்று மைக்கில் வீராவை என் வீட்டிற்கு வாழ அனுப்பு என்று கேட்கிறார். இதை வீடியோ எடுத்து சிவபாலனுக்கு அனுப்ப அவன் மனம் மாறி வீட்டிற்கு வந்து புது மாப்பிள்ளை கெட்டப்பிற்கு மாறுகிறான். 

அடுத்து வீராவும் கிளம்பி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர சிவபாலன், வீராவை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். சௌந்தரபாண்டி வீட்டில் விளக்கேற்றி வீரா வழிபடுகிறாள். அடுத்து வீரா சமைக்க செல்கிறாள். சௌந்தரபாண்டி வீராவின் சமையல் சரியில்லை என்று சொல்ல திட்டமிடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பணத்திற்காக அல்லாடும் சாமுண்டீஸ்வரி.. சிவணாண்டியின் சதியை முறியடிப்பானா கார்த்திக்? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Advertisment
Advertisements

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜர் காக்க வைத்த நிலையில் இன்று, பேங்க் மேனேஜர் வராத காரணத்தினால் பேங்கில் பணம் கிடைக்காமல் போகிறது, அசிஸ்டன்ட் மேனேஜர் பேங்க் மேனேஜர் கையெழுத்து இல்லாமல் பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். இதனால் சாமுண்டீஸ்வரி தனக்கு தெரிந்த சேட்டுவிடம் பணத்தை வாங்கி தொழிலாளிகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள். 

கார்த்திக் இதெல்லாம் சிவணாண்டியின் திட்டமாக இருக்கும் என சந்தேகப்பட்டு இங்கு வந்து மேனேஜரை என்ன பண்ணீங்க என்று விசாரிக்க அவர்கள் கார்த்தியிடம் வாக்குவாதம் செய்கின்றனர். கார்த்திக் என் அத்தையோட குடும்பத்திற்காக நான் எப்பவும் நிற்பேன் என்று பதிலடி கொடுக்கிறான். அடுத்ததாக கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் கொஞ்சம் வெளியே சென்று விட்டு வருவதாக சொல்லி கிளம்பி வருகிறான். சாமுண்டீஸ்வரி சேட்டுக்கு போன் போட்டு பணத்தை கேட்க அவரும் வாங்க மேடம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அங்கு கிளம்பி செல்கிறாள். 

சாமுண்டீஸ்வரியை நேரில் பார்த்த சேட்டு இப்போதைக்கு நீங்க கேக்குற பணம் இல்லை என்று ஜகா வாங்குகிறார். இதனால் சாமுண்டீஸ்வரி ஏமாற்றத்துடன் வெளியே வருகிறாள். சிவனாண்டி சேட்டு மகனை கடத்தி இப்படி சொல்ல வைத்தது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாஸ் என்ட்ரி கொடுக்கும் வெற்றி.. ரவுடிகளிடமிருந்து தப்பியது எப்படி? - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தியாவை தேடி சென்ற வெற்றியும் திரும்பி வராத நிலையில் இன்று கேசவன் மற்றும் ரகுவரன் ஆகியோர் அஞ்சலி தாலியை கழட்டி மகேஷ் முகத்தை வீசி எறிந்ததையும் துளசி தியா மற்றும் வெற்றியை தொலைத்துவிட்ட நிற்பதை பற்றி சொல்லி நக்கலாக பேசிக் கொள்கின்றனர். 

மறுபக்கம் ரவுடிகள் வெற்றியை அடித்து ஒரு பைக்குக்குள் அடைத்து ஆற்றுக்குள் தூக்கி வீச செல்கின்றனர். வீட்டில் துளசி தியா மற்றும் வெற்றியை காணாமல் கலங்கி போய் இருக்கிறாள். இந்த சமயத்தில் தூரத்தில் வெற்றி வருவது போல தெரிய அதை பார்த்து துளசி சந்தோஷம் அடைகிறாள். வெற்றி வந்துட்டாரு என்று சொல்ல குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று கூடி விடுகின்றனர். வெற்றி போலீசில் சீக்கிரம் கடத்தியது யார் என்பதை விசாரிக்க சொல்கிறான். இதனால் மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். 

வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வெற்றி உனக்கென்ன ஆச்சு என்று கேட்க பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது. பைக்குள் அடைக்கப்பட்ட வெற்றி தொடர்ந்து சிரித்தபடியே இருக்க ரவுடிகள் கடுப்பாகி மூட்டையை அவிழ்த்து உன்னை கொல்லப் போகிறோம் என்று சொல்கின்றனர். நீ எங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்ட என்று சொல்ல மாட்டிக்கிட்டது நான் இல்ல நீங்க தான்டா என்று வெற்றி அவர்களிடம் சண்டை இடுகிறான்.  பிறகு அங்கிருந்து அவர்களிடமிருந்து தப்பிய வெற்றி வீட்டுக்கு வருவது தெரிய வருகிறது. 

துளசி தியா எங்கே என்று கேட்க வெற்றி தியா என்று கூப்பிட தூரத்திலிருந்து தியா ஓடி வந்து வெற்றியை பிடித்துக் கொள்கிறாள். தியாவை பார்த்த துளசியின் நிம்மதி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த தொடரில் இதுவரை வெற்றி என்ற கதாபாத்திரத்தில் சிபு சூரியன் நடித்து வந்த நிலையில் இனி அவருக்கு பதிலாக யாரடி நீ மோகினி சீரியல் புகழ் ஸ்ரீகுமார் நடிக்க உள்ளார். இவரது காட்சிகள் இந்த எபிசோடில் இருந்து இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: