மனைவிக்கு ப்ரபோஸ் செய்த கணவன்; மச்சானை காப்பாற்ற மாமா செய்த வேலை; பரபரப்பாகும் கதைக்களம்!

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் பாரிஜாதம் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் பாரிஜாதம் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
D. Elayaraja
New Update
Zee tamil Anna andhg

வைஜெயந்திக்கு ஆப்பு வைத்த சண்முகம்.. சாட்சி சொல்ல வந்த முருகன் சிலை - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அடுத்த நாள் விசாரணைக்கு தயாரான நிலையில் இன்று, கோர்ட்டில் வாதாடுவதற்காக சண்முகம் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க ரத்னா நாளைக்கு எப்படியாவது அறிவழகனை காப்பாற்றிடு அண்ணே என்று கண் கலங்கி அழுகிறாள். சண்முகம் அதுக்காக தான் போராடுக்கிட்டு இருக்கேன்.. கண்டிப்பா அறிவழகனை காப்பாத்திடலாம் நீ கண் கலங்காத என்று சொல்கிறான்.

மறுபக்கம் வைஜயந்தி ஆட்களை ஏற்பாடு செய்து நாளைக்கு சண்முகம் கோர்ட்டுக்கு வரக்கூடாது. அவனை அடிச்சு தூக்கிடுங்க என்று ஆர்டர் போடுகிறாள். மேலும் சிவனாண்டி வைஜெயந்தியிடம் நான் சொல்ற மாதிரி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்க என்று வைஜயந்தி தயார் படுத்துகிறான்.

அடுத்த நாள் சண்முகம் குடும்பத்தினர் எல்லோரும் கோர்ட்டுக்குக் கிளம்ப சண்முகம், பரணி வண்டியில் கிளம்ப ரவுடிகள் அவனை அடித்து தூக்க தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக சண்முகத்தின் பைக் டயர் வெடிக்க பிறகு எல்லோரும் ஒன்றாக காரில் சென்று விடுகின்றனர். இதனால் வைஜெயந்தியின் திட்டம் தோல்வியில் முடிகிறது.

Advertisment
Advertisements

பிறகு சண்முகம் வைஜெயந்தி கூண்டில் ஏற்றி விசாரிக்க தொடங்குகிறான். அடுத்ததாக வைஜெயந்திக்கு எதிராக தீர்ப்பு சொல்ல முருகன் சிலை இருப்பதாக சொல்ல, சிவனாண்டி சிலை எப்படி சாட்சி சொல்லும் என்று நக்கல் செய்கிறான். பிறகு சண்முகம் வைஜெயந்தி வீட்டில் வைத்து பூஜை செய்த முருகன் சிலையை கொண்டு வருகிறான்.

அந்த முருகன் சிலையில் கேமரா மைக் என எல்லாம் இருப்பதையும் கூடவே ஒரு பென்டிரைவ் கனெக்ட் செய்யப்பட்டிருப்பதையும் சொல்லும் சண்முகம் அதை வெளியே எடுத்து நீதிபதியிடம் ஒப்படைக்க அதிலிருந்து வீடியோ ஆதாரங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரேவதியிடம் காதலை சொன்ன கார்த்திக்.. கைதான மாயா, காளியம்மா போடும் திட்டம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில் ரேவதிக்கு ஆப்பரேஷன் நடக்க தொடங்கிய நிலையில் இன்று, ரேவதிக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரேவதிக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்ல எல்லோரும் நிம்மதி அடைகின்றனர். அதே நேரத்தில் ரேவதி இன்னும் கண் விழிக்கவில்லை எனவும் சொல்கின்றனர். பிறகு கார்த்திக் ரேவதி பக்கத்தில் அமர்ந்து எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரேவதி என்று சொல்ல ரேவதி சந்தோஷத்தில் கண் திறக்கிறாள். என்னுடைய சவாலில் நான் ஜெயித்து விட்டேன் என்று சொல்கிறாள்.

மறுபக்கம் மாயா வீட்டுக்கு வர காளியம்மா அந்த ரேவதி இன்னும் சாகல உயிரோட தான் இருக்கா என்று சொல்ல மாயா நான் என்னென்னமோ திட்டம் போட்டேன் ஆனா கார்த்தி எல்லாத்தையும் தவிடு பொடியாக்கிட்டான். பிறகு சிவனாண்டி முத்துவேல் ஆகியோர் கொஞ்ச நாளைக்கு கார்த்திக் கிட்ட உஷாரா தான் இருக்கணும். நம்ம மேல கொல காண்டில் இருப்பான் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

பிறகு அங்கு வந்த கார்த்திக் இருவரையும் அடி வெளுத்தெடுத்து அவர்களை வைத்து மாயாவை அங்கு வர வைத்து மாயாவை கைது செய்ய வைக்கிறான். பிறகு காளியம்மா சிவனாண்டி மற்றும் நீங்க எல்லாம் ஒரு ஆம்பளையா என்று திட்டுகிறாள். அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கு எதிராக மாற்ற வேண்டும் என்று திட்டம் போட்ட தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இசை மீது உச்சகட்ட கோபத்தில் விஷால்.. பானுமதியின் சதி வலையில் சிக்கும் பாட்டி - பாரிஜாதம் இன்றைய எபிசோட் அப்டேட்  

பாரிஜாதம் சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் நிச்சயதார்த்த புடவை எடுக்க இசை வந்திருக்க விஷால் கடுப்பான நிலையில் இன்று விஷால் தனது நண்பர்களிடம் அவ்வளவு சொல்லியும் அவர் புடவை எடுக்க வந்திருக்கா என்று இசை மீது கோபப்படுகிறான். பிறகு தொடர்ந்து இசை போன் கால் செய்ய இசை போனை கவனிக்காமல் இருக்கிறாள். அதன் பிறகு இசை விஷாலுக்கு வீடியோ கால் செய்ய விஷால் இவ முகத்தை வேற பார்த்து பேசணுமா  என்று போனை எடுக்க மறுக்கிறான்.

ஒரு கட்டத்தில் ஃபோனை எடுக்கும் விஷால் இசையை பேசவிடாமல் மீண்டும் ஸ்ரீஜாவை காதலிக்கும் விஷயத்தை சொல்கிறான். இசைக்கு இந்த முறையும் அவன் பேசுவது என்னவென்று கேட்காமல் போகிறது. அடுத்ததாக சிந்தாமணி பானுமதி உடன் சேர்ந்து ஒரு குறி சொல்லும் பெண்மணியை சந்தித்து ஏஐ குரலில் பார்த்திபன் பேசுவது போல ஏற்பாடு செய்து தேவகி பாட்டியை நம்ப வைக்க திட்டமிடுகின்றனர்.

அதன் பிறகு சிந்தாமணி பாட்டியை இங்கே குறி கேட்க அழைத்து வர பார்த்திபன் குரலில் என் பொண்டாட்டி பானுமதி பாவம் அம்மா அவளை வீட்ல சேர்த்துக்கோங்க என்று சொல்ல வைக்கின்றனர். இதனை தேவகி பாட்டியும் நம்பி விடுகிறார்.  அதன் பிறகு தேவகி பாட்டி பானுமதி கோவிலில் சந்தித்து அந்த வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறேன் என்று வாக்கு கொடுக்க இதை சுபத்ரா தேவியும் பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zee Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: