/indian-express-tamil/media/media_files/2025/09/16/zee-tamil-seire-2025-09-16-14-06-22.jpg)
மகேஷை சுற்றி வளைத்த அஞ்சலி குடும்பம்.. அடுத்தடுத்து அம்பலமான நாடகம் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் அஞ்சலியை கத்தியால் குத்த போகும் சமயத்தில் மகேஷ் போன் செய்து அஞ்சலி என் உயிர், அவளை பத்திரமாக பாத்துக்கோங்க என்று சொல்லிய நிலையில் இன்று, ரவுடிகள் அஞ்சலி தப்பி செல்லாமல் அவளை பாதுகாக்க தொடங்குகின்றனர்.
தொடர்ந்து அஞ்சலி அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறாள்.
அஞ்சலியை கட்டுப்படுத்த முடியாத ரவுடிகள் ஒரு கட்டத்தில் அவளை அடிக்க கை ஓங்குகின்றனர், இந்நிலையில் அங்கு வந்த மகேஷ் ரவுடிகளை அடித்து விட்டு பிறகு என்னையே நம்ப வைத்து ஏமாத்திட்டல சபாஷ் அஞ்சலி என்று கை தட்டி சென்னை பாஷையில் பேசி அஞ்சலியை கலாய்க்கிறான். அஞ்சலி பயப்பட மகேஷ் நான் உன்னையும் என் அம்மாவையும் ஒன்னும் பண்ண மாட்டேன் அஞ்சலி என்று பம்புகிறான்.
அடுத்து அஞ்சலி என்னது உன் அம்மாவா என்று கேட்க மகேஷ் ஆமா என் அம்மா தான் என்று ட்ராமா போடுகிறான். ஒரு கட்டத்தில் அஞ்சலி என்னை நீ வீட்டிக்குள்ளேவே அடைத்து வைத்தெல்லாம் என் மேலே இருக்க அன்புல தான் என்று நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் நீ இவ்வளவு மோசமானவனா இருக்க என்று சத்தம் போடுகிறாள். அடுத்து லட்சுமி, துளசி, முருகன் என அனைவரும் அங்கு வந்து மகேஷை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.
லட்சுமி என் புருஷனை என்னடா பண்ண என்று சட்டையை பிடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இடம் மாறிய நாட்டு வெடிகுண்டு.. நடக்கப்போவது என்ன? - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் நாட்டு வெடிகுண்டு பெட்டியின் மீது உட்கார்ந்து பலகாரம் செய்ய தொடங்கிய நிலையில் இன்று, சண்முகம் வெட்டுக்கிளி ஆகிய பட்டாசு கடையில் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருக்க ஓகே வைகுண்டம் பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு நெருப்பு வந்து பட்டாசு அருகே விழுகிறது. வீட்டில் உள்ளவர்கள் நெருப்பைப் பார்த்து பதறிப் போய் நெருப்பு அனைத்து கொஞ்சம் பார்த்து சூதானமாக இருங்க என்று சொல்கின்றனர். பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகின்றனர்.
மறுபக்கம் சண்முகத்தின் பட்டாசு கடைக்கு வந்த போலீஸ் கடையில் நாட்டு வெடிகுண்டு இருப்பதாக சொல்லி சோதனை அளிக்கின்றனர். சனியன் இதையெல்லாம் மறைந்து நின்று பார்க்க சோதனையை செய்த போலீஸ் நாட்டு வெடிகுண்டு எதுவும் இல்லை என்று சொல்லி கிளம்புகின்றனர். உடனே சனியன் சௌந்தரபாண்டிக்கு தகவல் கொடுக்கிறான்.பிறகு ரத்னா அறிவழகனுக்கு பலகாரம் கொடுத்து தீபாவளி கொண்டாட அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து விழாவிற்கு பலகாரம் கொடுப்பதற்காக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகின்றனர்.
வீட்டிலிருந்து வீரா வெளியே வருவது பார்த்து சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். பலகாரத்துடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு பெட்டி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்துவிட முத்துப்பாண்டி மற்றும் சிவபாலன் ஆகியோர் அதை கொண்டு போய் ரூமுக்குள் வைக்கின்றனர்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவீன் இறந்துட்டானா? சந்திரகலாவால் துர்கா கொடுத்த அதிர்ச்சி, கார்த்திக் காப்பாற்றப் போவது எப்படி? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் நவீன் கார்த்தியை தொடர்பு கொண்டு உயிருடன் புதைக்கப்பட்ட விஷயத்தை சொன்ன நிலையில் இன்று, நவீன் கார்த்தியிடம் பக்கத்தில் ஒரு கோவில் மணி சத்தம் கேட்பதாக சொல்ல கார்த்திக் அதை வைத்து நவீனை தேட தொடங்குகிறான். ஃபேக்டரி அருகே இருக்கும் கோவிலுக்கு வந்து அங்கிருக்கும் கோவிலில் மணி இருக்கிறதா என்று விசாரிக்க இல்லை என தெரிய வருகிறது.
அடுத்ததாக மீண்டும் நவீனுக்கு போன் செய்து உனக்கு இதுக்கு முன்னாடி வந்த போன் காலில் என்ன பெயர் சொன்னாங்க என்று கேட்கிறான். பிறகு இந்த பெயரையும் நம்பரையும் வைத்து அட்ரஸை கண்டுபிடித்து அங்கு சென்று விசாரிக்க ரவுடியின் மனைவி அவர் வீட்டில் இல்லை என்று சொல்கிறாள். பிறகு சரக்கடித்து மட்டையான ரவுடியை கண்டுபிடித்து உன் போன எங்கடா என்று விசாரிக்க அவன் என் போன் எங்கன்னு தெரியல என்று சொல்கிறான்.
சந்திரகலாவுக்கு விஷயம் தெரிய வர அவன் உடனடியாக அந்த போனை பிளாக் செய்ய சொல்கிறாள். மேலும் துர்காவுக்கு நவீன் இறந்து விட்டதாக தகவல் கொடுக்க சொல்கிறாள். துர்காவுக்கு நவீன் இறந்து விட்டதாக தகவல் கிடைக்க அவள் அதிர்ச்சி அடைகிறாள். நேராக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த துர்கா கோவப்பட்டு இனிமே நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று சொல்லி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுகிறாள். இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.