Advertisment

மீண்டும் ''தமிழா தமிழா''... கரு.பழனியப்பன் இடத்தில் ஆவுடையப்பன் வந்தது எப்படி?

கரு.பழனியப்பன் விலகியது தொடர்பான செய்தியை பார்த்து எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை என ஆவுடையப்பன் கூறியுள்ளார்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thamizha thamizha Avudaiyappan

ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆவுடையப்பன்

முன்னணி சேனல்களுக்கு இணையாக நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சேனலின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க ரியாலிட் டாக் ஷோ தமிழா தமிழா.

Advertisment

இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொகுப்பாளர் கரு.பழனியப்பன் இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறுவதாக அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தமிழா தமிழா நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடங்குமா? அப்படி தொடங்கினார் தொகுத்து வழங்குவது யார் என்பது தொடர்பான கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழ தொடங்கியது. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக மீண்டும் தொடங்கியுள்ள தமிழா தமிழா நிகழ்ச்சியை பிகைண்ட்வுட்ஸ் சேனலின் பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியில் வந்தது குறித்து கேட்பதற்காக அவரை தொடர்புகொண்டோம்.

பிகைண்ட்வுட்ஸ் டூ ஜீ தமிழ் எப்படி உணர்கிறீர்கள்?

ரொம்ப மகிழ்ச்சியாக உருக்கிறது. ஒரு சுவாரஸ்யமான பயணத்தை எதிர்பாத்து இருப்பது போல் உணர்கிறேன். தமிழா தமிழா ப்ரமோ வெளியான பிறகு நிறைய பாராட்டுக்கள் கிடைக்கிறது. இந்த பாராட்டுக்கள் நிகழ்ச்சி குறித்து மேலும் ஒரு த்ரிலிங்கான தருணமாக மாறியுள்ளது.

தமிழா தமிழா நிகழ்ச்சி நடந்த போது கரு.பழனியப்பன் அவரிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

தமிழா தமிழா நிகழ்ச்சியை கரு பழனியப்பன் சார் தொகுத்து வழங்கும்போது நிறைய ஷோஸ் பார்த்திருக்கிறேன். இதில் குறிப்பாக இவர் தூய்மை பணியாளர்களை வைத்து நடத்திய ஒரு ஷோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதுமட்டுமல்லாமலட் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் பெண் சுதந்திரம் குறித்து நடத்திய ஷோவும் அருமையாக இருந்தது. அவர் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

கேஷ்யூவலாக பேசும்போது அதற்கு தகுந்த மாதிரியாள சொல்லாடலை பயன்படுத்துவார். இலக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் இலக்கியத்தில் இருந்து விஷயங்களை எடுத்து சொல்வார் இந்த திறமையை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.

தனி இன்டர்வியூக்கும் இந்த மாதியாக டாக் ஷோக்கும் உள்ள வித்தியாசம்?

நான் இதற்கு முன்பு மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்த பிரதிநிதிகளை இன்டர்வியூ செய்துகொண்டிருந்தேன். இப்போது அதை தாண்டி மக்களிடம் பேச போகிறேன். இதன் மூலம் தினமும் சுமார் 60-70 பேரை சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கிறேன். யார் எந்த வீடியோ செய்தாலும் அதை மக்களுக்காகத்தான் செய்கிறோம். அப்படிப்பட்ட மக்களையே சந்திக்கும் ஒரு தருணத்தை பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.

பிகைண்ட்வுட்ஸ்-ல் இருக்கும்போது சில நிகழ்ச்சிகள் மக்களை சந்தித்து செய்திருக்கிறோம். ஆனால் இங்கு அனைத்து ஷோக்களிலுமே நேரடியாக மக்களே கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது ஒரு புதுமையான வாய்ப்பு தனி அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். டெய்லி ஒரு 80 பேரை சந்திப்பது, அவர்களின் எமோஷன்ஸ் மற்றும் கருத்தியல் பற்றி தெரிந்துகொள்வது என்பது தனி அனுபவமாக இருக்கும்.

தமிழா தமிழா வாய்ப்பு நீங்கள் எதிர்பார்த்ததா? அல்லது எதேர்ச்சையாக அமைந்ததா?

கரு.பழனியப்பன் விலகியது தொடர்பான செய்தியை பார்த்து எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பிகைண்ட்ஸ்வுட்ஸில் நிகழ்ச்சிகள் பண்ணும்போது தமிழா தமிழா மாதிரியான ஒரு நிகழ்ச்சியை பண்ண வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதே ஷோதான் வர வேண்டும் என்று நினைக்கவில்லை. கரு பழனியப்பன் விலகி ஒரு 2-3 மாதங்கள் கழித்து இப்போதான் என்னை அழைத்தார்கள். இப்படி ஒரு அழைப்பு வந்தது எனக்கு சர்ப்ரைசாக இருந்ததது. அதன்பிறகு அவர்களை சந்தித்து ஆடிஷன் செய்து என்னை தேர்வு செய்தார்கள்.

இதுவரை நடந்த தமிழா தமிழா நிகழ்ச்சி குறித்து உங்கள் கருத்து

இதுவரை நடந்த தமிழா தமிழா நிகழ்ச்சியின் ஃபார்மெட் அப்படியேதான் இருக்கும். தொகுத்து வழங்குவதில் ஏதேனும் புதுமை செய்ய முடியுமா என்பதை யோசித்துக்கொண்டிருக்கிறோம். இந்த வாய்ப்பும் பெரியது களமும் பெரியது என்பதால், நிச்சயமாக அதற்கு ஏற்றபடி வேலை பார்ப்பது மிகவும் முக்கியம். இதற்காக நானும் என்னை தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு முன்பு டிஜிட்டலில் இருந்த நான் இப்போது டெலிவிஷனுக்கு வந்திருக்கிறேன். அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த ஷோவில் பங்கேற்பவர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்ய தனி டீம் உள்ளது. நிகழச்சி நடக்கும்போது ஸ்காரில் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்களை கொடுப்போம். அதில் இருந்து எங்களை தொடர்புகொள்பவர்களை வைத்து தேர்வு செய்வோம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் எங்களது டீம் இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லி நிகழ்ச்சியின் டாபிப்கை மக்களிடம் சொல்லி ஆடிஷன் நடந்தி தேர்வு செய்வார்கள். ஒரு பெரிய டீம் ஹார்டு வொர்க் பண்ணா மட்டும் தான் வாரத்தில் 45 நிமிடங்கள் நடக்கும் நிகழ்ச்சியை மக்களுக்கு கொடுக்க முடியும்.டே நைட் வொர்க் செய்யக்கூடிய டீம் இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment