Advertisment

கொரோனா பரவலின் தாக்கம் சமூக – பொருளாதார நிலையை சார்ந்ததா?

கொரானா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவல் அமெரிக்காவில் உருவாக்கியுள்ள சமூக – பொருளாதாரத் தாக்கத்தை குறித்த கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா பரவலின் தாக்கம் சமூக – பொருளாதார நிலையை சார்ந்ததா?

தற்போதைய கொரானா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவல் அமெரிக்காவில் உருவாக்கியுள்ள சமூக – பொருளாதாரத் தாக்கத்தை குறித்த கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. கொரோன பரவல் அனைவரையும் சமமாக பாதிக்கவில்லை என்பதை இந்த கணக்கெடுப்பு படம் போட்டு கட்டுகிறது.

Advertisment

ஏப்ரல் 27 முதல் மே 12 வரை, செயின்ட் லூயிஸ் நகரில் அமைந்துள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் Social Policy Institute (எஸ்.பி.ஐ ) நடத்திய இந்த ஆய்வில், அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த சுமார்  5,500 பேர் கலந்து கொண்டனர்.

எளிதில் பணமாக்கக்கூடிய வைப்பு வசதி (Liquid Assets) உள்ளவர்கள் கொரோனா சமூக விலகல் நெறிமுறையைக் கடைப்பிடிக்கக்கூடிய வாய்ப்பை அதிகரித்திருப்பதாக சர்வே கண்டறிந்தது. "  தனக்காகவும், தான் சார்ந்த் குடும்ப நலனுக்காகவும் சமூக விலகல், தனிமைப்படுத்துதல்  போன்றவற்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை பொருளாதாரம் வழங்குகிறது" என்று எஸ்பிஐ இயக்குனர் மைக்கேல் கிரின்ஸ்டீன்-வெயிஸ் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

சர்வேயில் கண்டறியப்பட்ட இதர முக்கிய உண்மைகள்:

  • குறைந்த மற்றும் மிதமான வருமானம் கொண்ட பிரிவு குடும்பங்கள், பெரிய வீட்டுக் கடன் செலுத்துவதையும், மறுத்து செலவுகளையும் தாமதப்படுத்தின;
  • ஹிஸ்பானிக் அல்லாத வெள்ளை மக்களை (6.4%) ஐ விட ஹிஸ்பானிக் / லத்தீன் (14.1%) பிரிவு மக்கள்  வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டிருந்தானர். சில வெளியேற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஹிஸ்பானிக் அல்லாத கருப்பு (2.6%) மக்க்களை விட ஹிஸ்பானிக் / லத்தீன்  வெளியேற்றப்படும் விகிதம் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது;
  •  ஹிஸ்பானிக் / லத்தீன் (27%) மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் (29%) வேலை இழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்;
  • கொரோன பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்த 34% மக்கள்,  உணவுப் பாதுகாப்பின்மை நிலையை சந்திப்பதாக தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment