Advertisment

ஆம் ஆத்மிக்கு ப்ரமோஷன்: அங்கீகாரம் இழந்த என்.சி.பி, டி.எம்.சி: தேசிய கட்சி அங்கீகாரம் கிடைப்பது எப்படி?

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) ஆகியவற்றின் தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையம், ஆம் ஆத்மி கட்சியை (ஏ.ஏ.பி) தேசிய கட்சியாக அங்கீகாரம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
AAP

AAP

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) ஆகியவற்றின் தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையம், ஆம் ஆத்மி கட்சியை (ஏ.ஏ.பி) தேசிய கட்சியாக அங்கீகாரம் செய்துள்ளது.

Advertisment

உத்தரபிரதேசத்தில் ஆர்எல்டி, ஆந்திராவில் பிஆர்எஸ், மணிப்பூரில் பிடிஏ, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க), மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்பி மற்றும் மிசோரமில் எம்பிசி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தையும் ஆணையம் ரத்து செய்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் செயல்திறன் அடிப்படையில் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் என்சிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவைக்கு அங்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தற்போது, பா.ஜ.க. காங்கிரஸ், சி.பி.எம் , பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி), தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி) மற்றும் ஆம் ஆத்மி ஆகியவைகள் தேசியக் கட்சிகளாக உள்ளன.

தேசியக் கட்சி என்றால் என்ன?

பெயர் குறிப்பிடுவது போல், தேசியக் கட்சியானது 'தேசிய அளவில்' முன்னிலையில் இருப்பதாகும். அதாவது நாடு முழுவதும் அக்கட்சி செயல்பாடுகள் இருக்கும். மாநிலக் கட்சி போல் அல்லாமல் நாடு முழுவதும் அக்கட்சி செயல்பாடுகள் இருக்கும்

தேசியக் கட்சிகள் பொதுவாகவே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற பெரிய கட்சிகளே உள்ளன. இருப்பினும், சில சிறிய கட்சிகளும் தேசியக் கட்சிகளாக அங்கீகரிக்கப் படுகின்றன. இருப்பினும் இவைகள் தேசிய அரசியல் செல்வாக்கு கொண்டதாக கூற முடியாது.

தமிழகத்தில் தி.மு.க, ஒடிசாவில் பி.ஜே.டி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி, பீகாரில் ஆர்.ஜே.டி மற்றும் தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் போன்ற சில

கட்சிகள் அந்த பெரிய மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், அவை தேசிய விவகாரங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தாலும், பிராந்தியக் கட்சிகளாகவே இருக்கின்றன.

அப்படியானால் தேசியக் கட்சி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

ஒரு கட்சி, தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான அளவுகோலை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. இந்த அளவுகோல், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு கட்சி அவ்வப்போது தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெறும். சில சமயங்களில் இழக்கவும் நேரிடும்.

தேர்தல் ஆணையத்தின் 2019-ம் ஆண்டு குறிப்புபடி, ஒரு கட்சி கீழ்கண்ட அளவுகோல் இருந்தால் அது தேசியக் கட்சியாகக் கருதப்படும்.

  1. அந்த கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
  2. அக்கட்சி வேட்பாளர்கள் கடந்த மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 மக்களவை உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டும்.
  3. மக்களவையில் குறைந்தது 3 மாநிலங்களில் இருந்து மொத்த இடங்களில் 2% இடங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆம் ஆத்மி தேசியக் கட்சி ஆனது எப்படி?

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஏ.ஏ.பி 6.77% வாக்குகளைப் பெற்றது

இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டின் இறுதியில் குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல்களில் போட்டியிட்டது. ஏ.ஏ.பி ஏற்கனவே 3 மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்துள்ளது. நான்காவது மாநிலமாக அங்கீகரிக்கப்படுவதற்கு இமாச்சல் அல்லது குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல்களில் 6% வாக்குகள் தேவைப்பட்டன. இது தேசியக் கட்சியாக மாறுவதற்கான தகுதி ஆகும்.

இமாச்சலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 1% வாக்குகள் மட்டுமே கிடைத்தாலும், குஜராத்தில் 13% வாக்குகள் பெற்று ஒரு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு தேவையான அளவுகோலை விட 2 மடங்கு அதிகமாக பெற்றது. அங்கு மாநிலக் கட்சியாக மாறியது. குஜராத்தை சேர்த்து ஏ.ஏ.பி 4 மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்று தேசியக் கட்சியாக மாறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment