Advertisment

ஆதிபுருஷ் சர்ச்சை: நேபாளத்தில் இந்தி படங்களுக்கு தடை; ஜனக்பூர் ஜானகி புராணம்

ஆதிபுருஷ் திரைப்படம் ஏன் நேபாளத்தில் சர்ச்சைக்கு வழிவகுத்தது, இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான ராமாயண தொடர்பு என்ன?

author-image
WebDesk
New Update
Adipurush, Nepal, Janakpur, legend of Sita and Janakpur Nepal, indian expres, express explained, ஆதிபுருஷ் சர்ச்சை, நேபாளத்தில் இந்தி படங்களுக்கு தடை, ஜனக்பூர் ஜானகி புராணம், ராமாயணம், ramayana, Nepal towns ban Hindi movies, Janakpur and the legend of Janaki

ஆதிபுருஷ் திரைப்படம்

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு மற்றும் சுற்றுலா நகரமான போகாராவில் சீதையை ‘இந்தியாவின் மகள்’ என்று குறிப்பிடும் ஆதிபுருஷின் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் அனைத்து ஹிந்தி படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

Advertisment

ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தில், ‘ஜானகி இந்தியாவின் மகள்’ என்ற ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. ஜானகி என்று அழைக்கப்படும் சீதை தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் பிறந்ததாக நம்பப்படுவதால், இது அண்டை நாடானா நேபாளத்துக்கு கோபத்தை எழுப்பியுள்ளது.

நேபாளத்தில் மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகின் வேறு எந்தப் பகுதியிலும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிற இந்த படத்தில் உள்ள அந்த வசனத்தை நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் இப்போது இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நாம் இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான ராமாயண தொடர்பை ஆராய்வோம்:

ஜனக்பூர் - ஜானகி

காத்மாண்டுவில் இருந்து 225 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஜனக்பூர் தற்போது நேபாளத்தின் மாதேஷ் மாகாணத்தின் தலைநகராக உள்ளது. இந்தியாவிலிருந்து எல்லைக்கு அப்பால், ஜனக்பூர் சுமார் 23 கிமீ தொலைவில் உள்ளது. இந்தியாவின் கடைசி நகரம் பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜெய்நகர் ஆகும்.

புதிய நகரம் ஜனக்பூர்தம் என்று கூறப்படுகிறது - இது மிதிலை பகுதியை ஆண்ட விதேஹா வம்சத்தின் பண்டைய தலைநகரம். ராமாயணத்தின்படி, சீதை விதேஹ வம்சத்தின் மன்னன் ஜனகனின் மகள். அவள் வயதானபோது, சிவனின் வில்லைத் தூக்கிய ஒருவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார். அயோத்தியின் இளவரசரான ராமரால் மட்டுமே அந்த வில்லைத் தூக்க முடிந்தது. ராமாயணத்துடனான தொடர்பு காரணமாக, ஜனக்பூர் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான புனித யாத்திரை தலமாக இருந்து வருகிறது.

ஜானகி கோயில் 1898-ல் கட்டப்பட்ட ஜனக்பூரின் மையப் பகுதியாகும் அதன் உள் கருவறையில் மலர்களால் மூடப்பட்ட சீதையின் சிலையானது அயோத்திக்கு அருகிலுள்ள சரயுவில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராமர் மற்றும் அவரது சகோதரர்களான லக்ஷ்மணன், பரதன், சத்ருகன் ஆகியோரின் சிலைகள் சீதைக்கு அடுத்ததாக நிற்கின்றன. ஜானகி கோயிலுக்கு அருகில் ராமர்-சீதை விவாஹா கோயில் உள்ளது. இது ராமர் சீதையை திருமணம் செய்த நிகழ்வைக் குறிக்கிறது.

ஜனக்பூர் மற்றும் ராமாயண கதைகள் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

“நேபாளம் இல்லாமல், இந்தியாவின் நம்பிக்கை முழுமையடையாது. நேபாளம் இல்லாமல், இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. நேபாளம் இல்லாமல், இந்தியாவின் தாம்கள் (கோவில்கள்) முழுமையடையாது. நேபாளம் இல்லாமல், நமது ராமர் முழுமை இல்லை” என்று பிரதமர் மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜனக்பூர் மற்றும் அயோத்தி (ராமர் பிறந்த இடம்) இடையே பேருந்து சேவையைத் தொடங்கி வைக்கும் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான புராண தொடர்பை வலியுறுத்தினார். ஜானகி கோவிலில் வழிபாடு செய்த மோடி, ஜனக்பூரை மேம்படுத்த ரூ.100 கோடி நிதியுதவியை அறிவித்தார்.

உண்மையில், புத்த மதத் தொடர்பைத் தவிர, அண்டை நாடான, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டோடு உறவு பாலத்தைக் கட்டுவதற்காக, நேபாளத்துடனான தனது ராமாயண தொடர்பை இந்தியா அடிக்கடி போற்றி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் ஜனக் மன்னரின் ஆட்சியில் இருந்த திரேதா யுகத்தில் இருந்தவை என்றும்… சீதை கட்டிய உறவுப் பாலம் இன்னும் வலுவாக உள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் முதல் ஆட்சியின் போது சுற்றுலா அமைச்சகம் ராமாயண நிகழ்விடங்களை கற்பனை செய்தபோது, அது ஒரு "தேசிய நாடுகடந்த நிகழ்வு என்று அறிவிக்கப்பட்டது, காவியப் பயணத்தின் பிரிக்க முடியாத பகுதியாக ஜனக்பூர் இருந்தது. கடந்த ஜூன் மாதம், இந்திய ரயில்வே தனது 18 நாள் ராமாயண ஸ்தலங்களுக்கான ரயில் பயணத்தை அறிவித்து இந்தியாவின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் மட்டுமல்லாமல் நேபாளத்திலும், ஜனக்பூரை உள்ளடக்கியதாக வரலாற்றை உருவாக்கியது.

அதனால்தான் இந்தியாவில் இருந்து வெளிவரும் ஹிந்திப் படத்தில் சொல்லப்பட்ட உரையாடல் நேபாளத்தில் இவ்வளவு கூர்மையான எதிர்வினையை ஏற்படுத்தியது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது காத்மாண்டு மேயர் பலேன் ஷாவுக்கு இந்தப் படத்தைத் தடை செய்வது குறித்து கவலை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். மேலும், “எவருக்கும் இடையூறு விளைவிப்பது ஒருபோதும் வேண்டுமென்றே அல்லது உள்நோகத்துடன் செய்யவில்லை.” மன்னிப்பும் கோரியுள்ளனர்.

சமீபத்தில் நேபாளத்துடனான பிற சர்ச்சை

கடந்த மாதம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 'அகண்ட பாரதம்' குறித்து சித்தரிக்கப்பட்ட ஒரு சுவரோவியம் நேபாளத்தில் சிறிது கவலையைத் தூண்டியது. ஒரு சில அரசியல்வாதிகள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் புது டெல்லியில் பிரச்னையை எழுப்ப வேண்டும் என்று கோரினர். நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டராய் கூட இந்த சுவரோவியம் தேவையற்ற ராஜதந்திர தகராறுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து மியான்மர் வரையிலும், திபெத் வரையிலும், இன்றைய நேபாளம் உட்பட இலங்கை வரையிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய, ராமாயண காலத்திலிருந்தே இருந்த இந்திய தேசம் பற்றிய சங்கபரிவாரத்தின் நீண்டகால எண்ணம் நேபாளத்தின் கோபத்தை எழுப்பியது.

இந்த ஆட்சேபனையைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாகத் தெளிவுபடுத்தியது: “கேள்வியில் உள்ள சுவரோவியம் அசோகப் பேரரசின் பரவலையும், அவர் (அசோகர்) ஏற்றுக்கொண்ட மற்றும் பிரச்சாரம் செய்த பொறுப்பான மற்றும் மக்கள் சார்ந்த நிர்வாகத்தின் யோசனையையும் சித்தரிக்கிறது.” என்று கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Nepal Ramayanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment