Advertisment

குளத்தில் விழுந்த டெஸ்லா; கோடீஸ்வர பெண் சி.இ.ஓ பலி: மின்சார கார்கள் பாதுகாப்பானதா?

உங்கள் கார் தண்ணீரில் விழுந்தால், ஏஞ்சலா சாவோ செய்தது போல் உதவிக்கு யாரேனையும் அழைக்க முயற்சிக்காதீர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஃபோர்மோஸ்ட் குழுவின் சி.இ.ஓ எப்படி இறந்தார்? இந்த சம்பவம் எழுப்பும் கவலைகள் மற்றும் அவரது மரணம் பற்றிய படிப்பினைகள் இங்கே.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tesla.jpg

வலபுறத்தில் இருப்பவர், ஏஞ்சலா சாவோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெஸ்லா கார் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரபல கப்பல் அதிபதி மரணமடைந்தார். இந்த சம்பவம் மின்சார கார்களில் உள்ள சில பாதுகாப்பு சிக்கல்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபோர்மோஸ்ட் குழுவின் (Foremost Group) பில்லியனர் சி.இ.ஓ ஏஞ்சலா சாவோவின் கார் குளத்தில் விழுந்து மூழ்கியதில் உயிரிழந்தார்.  நண்பர்கள் மற்றும் மீட்புப் குழுவினர் அவரை காப்பாற்ற முயற்சித்த போதிலும் காருக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர் உயிரிழந்தார். பிப்ரவரி 11-ம் தேதி இந்த சம்பவம் நடந்தாலும், கார் பாதுகாப்பு மற்றும் ஒரு விபத்தின் போது என்ன செய்வது என்பது பற்றிய கேள்விகளை எழுப்பும் கூடுதல் விவரங்கள் இப்போது வெளிவந்துள்ளன.

Advertisment

ஏஞ்சலா சாவ் எப்படி இறந்தார்?

ஜேம்ஸ் சி-செங் சாவோ மற்றும் மனைவி ரூத் முலான் சூ சாவோ ஆகியோரின் மகள் ஏஞ்சலா சாவோ( 50). இவர்கள் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். ஏஞ்சலா சாவோ ஒரு பெரிய கப்பல் நிறுவனமான ஃபோர்மோஸ்ட் குழுவை நிறுவினார். 

இவரது மூத்த சகோதரி எலைன் சாவோ, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசில் போக்குவரத்து செயலாளராகவும், ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் தொழிலாளர் செயலாளராகவும் இருந்தவர். எலைன், செனட் சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானலை திருமணம் செய்தார்.

 பிப்ரவரி 9 வார இறுதியில், ஏஞ்சலா சாவோ டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார். இரவு 11:30 மணியளவில், ஏஞ்சலா அங்கிருந்து புறப்பட்டு அதே பகுதியில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டிற்குச் செல்ல தனது காரில் புறப்பட்டார். புறப்பட்ட சில நிமிடங்களில் ஏஞ்சலா  பண்ணை வீட்டில் இருந்த தோழி ஒருவருக்கு கால் செய்து, தான் டெஸ்லாவை முன்னோக்கி இயக்குவதற்குப் பதிலாக பின்நோக்கி இயக்கியதில் கார் ஒரு குளத்தில் விழுந்ததாக கூறி உதவி கேட்டுள்ளார். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நண்பர்கள் காரின் கண்ணாடிகளை உடைக்கவும், காரை வெளியே எடுக்கவும் பல்வேறு முயற்சிகள் செய்துள்ளனர். இதற்கு இடையில் மீட்புக் குழுவினர் வந்து காரை வெளியேற்றி, ஏஞ்சலாவை வெளியேற்றினர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் நீர் நிரம்பி ஏஞ்சலா பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக, சம்பவ இடம்  சற்று தூரத்தில் இருந்ததால்  மீட்புக் குழுவினர் வந்தடைய தாமதமானது. மேலும், அவர்களிடம் டைவர்ஸ், இழுவை டிரக்கில்  இருந்து அவரது காரை அடைய போதுமான நீளமான கேபிள் இல்லாமலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இன்று பல கார் கண்ணாடிகள் மிகவும் உறுதியான லேமினேட் கண்ணாடியால் தயாரிக்கப்படுகிறது. இது கார் விபத்துகளில் இருந்து பயணிகளை பாதுகாக்க செய்யப்பட்டது. ஆனால் ஏஞ்சலா விஷயத்தில் இது எதிராக வேலை செய்தது. 

ஏஞ்சலாவுக்கு 3 வயது மகன் உள்ளார். கணவர் ஜிம் பிரேயர்.  venture capitalist மற்றும் பிரேயர் கேபிட்டலின் நிறுவனர் மற்றும் CEO ஆவார்.

 டெஸ்லா பற்றி எழுப்பும் கேள்வி 

இந்த கோர சம்பவத்திற்கு முன்பும், ஏஞ்சலா இதே தவறை செய்துள்ளார். காரை drive மோட்டில் செலுத்தாமல் 

ரிவர்ஸில் வைத்துள்ளார்  என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. அவர் மட்டும் இல்லை. பல டெஸ்லா பயனர்களும் கியர்ஷிஃப்ட்டின் வடிவமைப்பு குழப்பமாக இருப்பதாக புகார் கூறியுள்ளனர்

பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி,  டெஸ்லா பயனர்கள் பலர் பல ஆண்டுகளாக டிசைன் குறைபாடுகள் மற்றும் இயக்க மோட் குறித்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். யு.எஸ் டிபார்ட்மெண்ட் வைத்துள்ள ஆட்டோமொபைல் நுகர்வோர் புகார்களின் தரவுத்தளத்தில் டெஸ்லா ரிவர்ஸ் செயல்பாடு தொடர்பான 12 புகார்களை பிசினஸ் இன்சைடர் கண்டறிந்துள்ளது

இது தவிர, டெஸ்லா பயனர்கள் தன்னியக்க பைலட் பயன்முறையில் இருக்கும்போது காரின் "பாண்டம் பிரேக்கிங்" குறித்து புகார் தெரிவித்தனர். இந்த மோட் பயன்படுத்தும் போது சில நேரங்களில் அது போக்குவரத்தின் நடுவில் கூட பிரேக்குகளைப் பயன்படுத்துகிறது என்று கூறினர். 

உங்கள் கார் நீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

மே 2023-ல், பெங்களூருவில் உள்ள கே.ஆர் ​​சர்க்கிள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பாதாள சாக்கடையில் கார் சிக்கியதில் 22 வயதான பொறியாளர் உயிரிழந்தார். உங்கள் கார் தண்ணீரில் இறங்குவது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக இருக்கலாம், மேலும் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கான சாளரம் பொதுவாக 30 வினாடிகள் முதல் இரண்டு நிமிடங்கள் வரை இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கார் தண்ணீரில் விழுந்தால், இரண்டு நிமிடங்களில், அது முற்றிலும் மூழ்கிவிடும். எனவே அதற்குள் துரிதமாக செயல்பட வேண்டும். 60 நொடிக்குள் உங்கள் கார் கண்ணாடிகளை இறக்கி வெளியேற வேண்டும்.  நேரம் கடந்தால் கார் நீரில் மூழ்கியவுடன், காரின் கதவுகள் மற்றும் கண்ணாடிகள் தண்ணீர் அழுத்தத்தினால், அவற்றைத் திறப்பது கடினமாகிவிடும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் கார் தண்ணீரில் விழுந்தால், யாரையும் உதவிக்கு அழைக்க வேண்டாம் - சாவோ செய்தது போல் செய்யக் கூடாது. அது உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும். அதற்கு பதிலாக, உங்கள் இருக்கை பெல்ட்டைக் கழற்றி, கண்ணாடிகளை கீழே இறக்கி, கண்ணாடி வழியாக வெளியேற வேண்டும். 

கார் ஜன்னல் லாக் பட்டனை திறக்க முடியவில்லை என்றால் கண்ணாடியை உடைக்க முயற்சிக்கவும். கடினமாக இருந்தாலும் செய்ய வேண்டும். ஆனால் விண்ட்ஸ்கிரீனை உடைக்க முயற்சிக்காதீர்கள். அது உங்களால் செய்ய முடியாது. காரின் மிகவும் கடினமான கண்ணாடியாக அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.  பெரிய கீரல், சிறு உடைப்புகள் மட்டுமே ஏற்படும் தவிர நீங்கள் வெளியேறும் அளவுக்கு உடைக்க முடியாது.

நீங்கள் வெளியேறும் முன் உங்கள் காரில் தண்ணீர் நிரம்பியிருந்தால், கதவு அல்லது ஜன்னலைத் திறப்பதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கவும். இது காரின் உள்ளேயும் வெளியேயும் உள்ள நீரின் அழுத்தத்தை சமப்படுத்த சிறிது நேரம் கொடுக்கும், இதன் பின் கதவைத் திறப்பதை எளிதாக்கும். எனினும் அதுவரை நீங்கள் பயத்தை கட்டுப்படுத்த வேண்டும். இருப்பினும்  நீர் மட்டம் உங்கள் ஜன்னல் மட்டத்திற்கு கீழே இருக்கும் போது வெளியே செல்வது உங்களுக்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

 

Tesla
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment