’17 வயதில் 3 முறை பிரிட்டன் இளவரசருடன் உறவு கொண்டேன்’ – சிக்கலில் இளவரசர் ஆண்ட்ரூ!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இளைய மகனான பிரிட்டிஷ் அரச இளவரசர் ஆண்ட்ரூ, சிறுமியுடன் உடலுறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்காகவும், ஆகஸ்ட் மாதம் சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிதி நிறுவன அதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நெருக்கம் குறித்தும் புதிய விசாரணையை எதிர்கொள்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் முதன்முதலில் 2015 இல்…

By: November 20, 2019, 4:25:07 PM

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இளைய மகனான பிரிட்டிஷ் அரச இளவரசர் ஆண்ட்ரூ, சிறுமியுடன் உடலுறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்காகவும், ஆகஸ்ட் மாதம் சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிதி நிறுவன அதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நெருக்கம் குறித்தும் புதிய விசாரணையை எதிர்கொள்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் முதன்முதலில் 2015 இல் கூறப்பட்டாலும், கடந்த சனிக்கிழமையன்று பிபிசி ஆண்ட்ரூவுடன் நடத்திய நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட பிறகு இவ்விவகாரம் வைரலாகியது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டு என்ன?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு வெற்றிகரமான நிதியாளராக இருந்தார், அவர் 14 வயதுடைய சிறுமிகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை சீரழித்ததாக அமெரிக்க நீதித்துறையால் குற்றம் சாட்டப்பட்டார்.


எப்ஸ்டீன் சிறுமிகளை நிர்வாண மற்றும் அரை நிர்வாண மசாஜ் கொடுக்கவும், அவருடன் பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியதாக க்.

எப்ஸ்டீனின் நெருங்கிய வட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் பிரிட்டீஷ் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோரும் உள்ளதாக அறியப்படுகிறது.

2008 ஆம் ஆண்டில், ஃபெடரல் வக்கீல்கள் எப்ஸ்டீனுடன் ஒரு சர்ச்சைக்குரிய வழக்கு அல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இதன் காரணமாக அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை கிடைத்தது, அதுவும் 5 மாதங்களாக குறைக்கப்பட்டது.

எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பிப்ரவரி 2019ல் வழக்குரைஞர்களால் இது வெளியிடப்படாதது கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்காவில் #MeToo இயக்கம் வெளிவந்த போது, அதே மாதத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஜூலை 2019 இல், 66 வயதான எப்ஸ்டீன் பாலியல் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார். அவர் ஆகஸ்ட் மாதம் தனது சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் இளவரசர் ஆண்ட்ரூ எங்கே வருகிறார்?

‘டியூக் ஆஃப் யார்க்’ பட்டத்தை வகிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ, இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப்பின் மூன்றாவது குழந்தையாவார்.

பாரம்பரியமாக பின்பற்றப்படும் வழக்கத்தை போலவே, ஆண்ட்ரூ இராணுவ வாழ்க்கையில் இணைந்தார். ராயல் கடற்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றினார்.

2001 ஆம் ஆண்டில், ஆண்ட்ரூ சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் சிறப்பு பிரதிநிதியானார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது உறவுகளால் விமர்சிக்கப்பட்ட பின்னர் 2011 ல் அவர் பதவி விலக வேண்டியிருந்தது.

2015 ஆம் ஆண்டில், வர்ஜீனியா கியுஃப்ரே என்ற அமெரிக்கப் பெண், எப்ஸ்டீனால் இளவரசர் ஆண்ட்ரூவிற்கு எனது 17 வயதில் நான் விருந்தாக்கப்பட்டேன். எப்ஸ்டீன் தன்னை பாலியல் அடிமையாக வைத்திருந்தார். கியுஃப்ரே (முன்னதாக ராபர்ட்ஸ்) 2001 ஆம் ஆண்டில் மூன்று சந்தர்ப்பங்களில் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொண்டதாகக் கூறினார். ஆனால், இதனை ஆண்ட்ரூ மறுத்துவிட்டார்.

கடந்த வாரம், ஆண்ட்ரூ பிபிசிக்கு ஒரு நேர்காணலைக் கொடுத்தார், அதில் குற்றச்சாட்டுகள் குறித்தும், எப்ஸ்டீனுடனான நட்பு குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்பட்ட பின்னர், அந்த நேர்காணல் மூலம் ஆண்ட்ரூவுக்கு பல விமர்சனங்களை சந்திக்க நேரிட்டுள்ளது.பார்வையாளர்கள் பலரும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் வருத்தம் தெரிவிக்கத் தவறிவிட்டதாகக் கூறினர். அமெரிக்காவில் எப்ஸ்டீன் வழக்கை விசாரிக்கும் எஃப்.பி.ஐ யிடம் உண்மையை சொல்ல செய்ய ஆண்ட்ரூவுக்கு இப்போது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:British royal prince andrew sex with teen girl jeffrey epstein scandal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X