Advertisment

புற்றுநோயின் பாலின பிரச்சனை

புகை அல்லது புகையிலை போன்ற சில புற்றுநோய்களின் ஆபத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை இல்லை.

author-image
abhisudha
New Update
Cancer

Cancer’s gender problem

இந்தியப் பெண்களில் புற்றுநோயால் ஏற்படும் 63% அகால மரணங்களை ஆபத்து காரணிகளைக் குறைத்தல், ஸ்கிரீனிங் மற்றும் நோயறிதல் மூலம் தடுத்திருக்கலாம், அதே நேரத்தில் 37% சரியான நேரத்தில், உகந்த சிகிச்சையின் மூலம் தடுக்கப்பட்டிருக்கலாம், என்று புற்றுநோய் சிகிச்சையில் பாலின சமத்துவமின்மை குறித்த புதிய லான்செட் கமிஷன் அறிக்கை கூறியது.

Advertisment

‘Women, Power and Cancer’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, இந்தியாவில் பெண்களிடையே சுமார் 6.9 மில்லியன் புற்றுநோய் இறப்புகள் தடுக்கக்கூடியவை மற்றும் 4.03 மில்லியன் சிகிச்சை அளிக்கக்கூடியவை, என்று கூறியது.

இரு பாலினத்தவர்களையும் பாதிக்கும் புற்றுநோய்கள், ஆண்களுக்கு அதிக ஆபத்தில் இருந்தாலும் கூட பெண்களின் புற்றுநோய் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

உலகளவில், புதிய புற்றுநோய்களில் 48% மற்றும் புற்றுநோய் இறப்புகளில் 44% பெண்கள் பாதிப்புக்கு ஆளாகின்றன..

மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் போன்ற பெண்களுக்கு ஏற்படும் சில புற்றுநோய்கள் மிகவும் தடுக்கக்கூடியவை மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியவை என்றாலும் இது நிகழ்கிறது.

பெண்களின் மோசமான விளைவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

அறிவு, முடிவெடுத்தல் மற்றும் நிதி அதிகாரங்கள் மற்றும் வீட்டிற்கு அருகில் முதன்மை மட்டத்தில் சேவைகள் கிடைக்காத நிலையில், சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான கவனிப்பை அணுகுவதில் பெண்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது.

அவர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், சமூகத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தகவலறிந்த முடிவுகளை எடுக்கும் அறிவும் ஆற்றலும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புற்றுநோய் காரணமாக அவர்கள் நிதி சிக்கலை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

டாக்டர் அபிஷேக் சங்கர், (Assistant professor at the All India Institute of Medical Sciences, New Delhi, who works on preventive oncology) புற்றுநோய் சிகிச்சையில் நிச்சயமாக ஒரு பாலின அம்சம் உள்ளதாக கூறினார்.

சுகாதார விழிப்புணர்வு, பெண்களிடையே, குறிப்பாக சமூகத்தின் ஏழைப் பிரிவுகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. புகை அல்லது புகையிலை போன்ற சில புற்றுநோய்களின் ஆபத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை இல்லை. அதனால்தான் அவர்கள் ஆண்களை விட மோசமான நிலையில் இருப்பார்கள்.

புற்றுநோய்கள் மற்றும் அதன் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றி சங்கர் மேலும் கூறுகையில், சமூக மாற்றங்களும் தேவை. மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்கள்.

இருப்பினும், இந்த பிரச்சனைகளுடன் ஆண் மருத்துவர்களை அணுகுவதற்கு பெண்கள் தயங்குகிறார்கள், இது நோயறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதத்திற்கு வழிவகுக்கிறது, என்று அவர் கூறினார்.

ஸ்கிரீனிங், நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைகள், மாநிலத் தலைநகரங்கள் அல்லது பிற மாநிலங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய தேவையும் சிகிச்சையில் தாமதத்திற்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன என்று டாக்டர் சங்கர் கூறினார்.

ஸ்கிரீனிங் முக்கியத்துவம் என்ன?

பெண்களுக்கு வரும் மிகவும் பொதுவான- மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்- புற்றுநோய்கள்-  மிகவும் தடுக்கக்கூடியவை மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியவை.

டாக்டர் சரிதா ஷாம்சுந்தர்  (professor of gynaecology and the coordinator for gyne-oncology at Safdarjung Hospital), இரண்டு புற்றுநோய்களும் ஸ்கிரீனிங் மூலம் மிக விரைவாக கண்டறியலாம் என்றபோதும், ​​​​நோயின் பிற்பகுதியில் பெண்கள் இன்னும் வருகிறார்கள், என்றார்.

ஒவ்வொரு மாதமும் மார்பகங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவும், ஒவ்வொரு வருடமும் ஒரு மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மார்பக புற்றுநோயை பரிசோதிக்க வருடத்திற்கு ஒரு முறை மேமோகிராபி செய்து கொள்ள வேண்டும்.

சுய பரிசோதனையின் போது ஏதேனும் கட்டிகள் இருப்பதைக் கண்டறியும் பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு, 25 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்கள், கர்ப்பப்பை வாயில் புற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சியை சரிபார்க்க பாப் ஸ்மியர் (pap smear) பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

HPV சோதனை - பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை ஏற்படுத்தும், மனித பாப்பிலோமா வைரஸைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை - ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கும் செய்யப்படலாம், என்று அவர் கூறினார்.

அரசாங்கம் என்ன செய்ய முடியும்?

தேவையான மிக முக்கியமான தலையீடுகளில் ஒன்று, மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதனால் அவர்கள் ஸ்கிரீனிங்கிற்கு முன் வந்து கவனிப்பை நாடுகிறார்கள் என்று ஷங்கர் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசிகள் தொற்றுநோயால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் என்று அரசாங்கம் ஒரு தகவல் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது, ​​​​அந்த ஊசியை போட மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். புற்றுநோயைத் தடுப்பதற்கும் இதுவே தேவை.

அரசாங்கத்தின் HPV தடுப்பூசி திட்டம், செயல்பாட்டில் உள்ளது, இது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோயின் நிகழ்வைக் குறைக்கும் என்று டாக்டர் சாம்சுந்தர் கூறினார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும் HPVக்கான தடுப்பூசி ஏற்கனவே நாட்டில் உள்ளது மற்றும் ஒரு உள்நாட்டு தடுப்பூசியும் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் பெண்களுக்கான உலகளாவிய தடுப்பூசி திட்டத்தில் தடுப்பூசியை சேர்க்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இது வைரஸ் உடலில் நுழைவதைத் தடுக்கிறது, என்று அவர் கூறினார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மையங்களில் அரசாங்கத்தின் screening programme ஆரம்பகால நோயறிதலுக்கு உதவும் என்று அவர் கூறினார்.

சவால்களில் ஒன்று என்னவென்றால், நோயாளிகள் பின்தொடர்வதில்லை, ஏனெனில் அவர்கள் பயாப்ஸி மற்றும் சிகிச்சைக்காக உயர் மையங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால், குறைந்த பட்சம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு, வங்கதேசத்தில் செய்வது போல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே நர்சிங் ஊழியர்களால் சிகிச்சை அளிக்க முடியும், என்றார்.

கர்ப்பப்பை வாயில் உள்ள முன்கூட்டிய அல்லது புற்றுநோய் புண்களை அகற்றுவது மிகவும் எளிதானது என்று டாக்டர் சாம்சுந்தர் கூறினார்.

அசிட்டிக் அமிலம் (which is a dilute form of vinegar)- பெண்களின் கருப்பை வாயில் போடலாம் மற்றும் புற்றுநோய் பகுதிகள் வெள்ளை நிறத்தில் ஹைலைட் செய்யப்படும்

திசுவை உறைய வைக்க அல்லது எரிக்கவும் அழிக்கவும் ஒரு சிறிய ஆய்வு பயன்படுத்தப்படலாம். இது ஒரு சிக்கலான செயல்முறை அல்ல, பயிற்சி பெற்ற செவிலியர்களால் செய்ய முடியும், என்று அவர் கூறினார்..

அறிக்கையின் பரிந்துரைகள் என்ன?

புற்றுநோய் சுகாதார புள்ளிவிவரங்களுக்காக பாலினம் மற்றும் சமூக மக்கள்தொகை பற்றிய தரவுகளை தொடர்ந்து சேகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

அறியப்பட்ட புற்றுநோய் அபாயங்களின் வெளிப்பாடுகளைக் குறைக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல், வலுப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் வேண்டும்.

புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது, எனவே புற்றுநோய் ஆராய்ச்சி ஆதாரங்கள், தலைமைத்துவம் மற்றும் பெண்களுக்கான நிதி வாய்ப்புகளை சமமாக அணுகுவதற்கு, அறிக்கை அழைப்பு விடுத்தது.

Read in English: Cancer’s gender problem

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment