/indian-express-tamil/media/media_files/wlBMSrJ2mKhIWSIgRleB.jpg)
மேற்கு பசிபிக் பெருங்கடலில் சீனா மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்கி வருகிறது. நியூட்ரினோக்கள் எனப்படும் "பேய் துகள்களை" (Ghost particles) கண்டறிவதே இதன் வேலையாக இருக்கும். இந்த தொலைநோக்கி கருவி உலகிலேயே மிகப் பெரியதாக இருக்கும் என்று இந்த மாத தொடக்கத்தில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நியூட்ரினோவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
பேய் துகள் என்றால் என்ன?
பேய் துகள் அல்லது நியூட்ரினோ என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன் அணுக்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அணுக்கள் நமது பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன. எடை உள்ள பொருட்கள் அனைத்தும் - நீங்கள், நான், உங்களுக்குப் பக்கத்தில் உள்ள புத்தகம் மற்றும் நீங்கள் குடிக்கும் காபி கப் அனைத்தும் அணுக்களால் உருவாகி உள்ளன.
நீண்ட காலமாக, விஞ்ஞானிகள் அணுக்கள் தான் இருப்பதில் மிகச்சிறிய துகள் என்று நினைத்தனர். பின்னர் தாங்களாகவே அவற்றை மாற்றினர். “subatomic” துகள்களைக் கண்டுபிடித்தனர். புரோட்டான் (பாசிட்டிவ் சார்ஜ் கொண்டவை), எலக்ட்ரான்கள் (நெகட்டிவ் சார்ஜ் கொண்டவை) மற்றும் புரோட்டான்கள் (சார்ஜ் இல்லை) .
நியூட்ரினோக்கள் ஒரு வகை எலக்ட்ரானாகும், ஆனால், இவைகளுக்கு எந்த மின்னூட்டமும் இல்லை. அவை நமது பிரபஞ்சத்தில் மிகுதியாக உள்ள துகள்களில் ஒன்றாகும் - எந்த நொடியிலும் டிரில்லியன் கணக்கான நியூட்ரினோக்கள் உங்களை கடந்து செல்கின்றன - மேலும் அவைகள் மிகச்சிறியவைகளில் ஒன்றாகும்.
நியூட்ரினோக்கள் massless என்று நீண்ட காலமாக நம்பப்பட்டது. ஆனால் பின்னர் அவைகள் மிகச் சிறிய அளவில் எடை கொண்டது என்று கண்டுபிடித்தனர்.
விஞ்ஞானிகள் பேய் துகள்களை எவ்வாறு கண்டறிகிறார்கள்?
பேய் துகள்கள் மற்ற துகள்களுடன் அரிதாகவே தொடர்பு கொள்கின்றன. ஆனால் அரிதாக என்பதால் தொடர்பு கொள்ளாது என்று அர்த்தம் இல்லை. சில நேரங்களில் அவை நீர் மூலக்கூறுகளுடன் (water molecules) தொடர்பு கொள்கின்றன, அதனால்தான் சீனா நீருக்கடியில் Ghost molecule telescope உருவாக்கி வருகிறது.
துகள்கள் நீர் அல்லது பனிக்கட்டி வழியாக பயணித்த பிறகு துணை தயாரிப்புகளை உருவாக்கும் போது ஆவி துகள்கள் விரைவான நிகழ்வுகளில் இருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். இந்த "மியூயான்கள்" அதிநவீன நீருக்கடியில் தொலைநோக்கிகள் மூலம் கண்டறியக்கூடிய ஒளியின் ஃப்ளாஷ்களை உருவாக்குகின்றன மற்றும் நியூட்ரினோக்களின் ஆற்றல் மற்றும் ஆதாரத்தை ஆய்வு செய்வதற்கான சில வழிகளில் ஒன்றை வழங்குகின்றன.
தற்போது, நியூட்ரினோவைக் கண்டறியும் மிகப்பெரிய தொலைநோக்கி மேடிசன்-விஸ்கான்சன் பல்கலைக்கழகத்தின் "ஐஸ்கியூப்" தொலைநோக்கி ஆகும். அண்டார்டிக்கில் ஆழமாக அமைந்துள்ள தொலைநோக்கியின் சென்சார்கள் சுமார் 1 கன கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளன. சீனா உருவாக்கி வரும் புதிய தொலைநோக்கிக்கு "ட்ரைடென்ட்" என்று பெயரிட்டுள்ளது. தென் சீனக் கடலில் 7.5 கன கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று சீனா கூறுகிறது.
அதன் அளவு அதிக நியூட்ரினோக்களைக் கண்டறிந்து, தற்போதுள்ள நீருக்கடியில் உள்ள தொலைநோக்கிகளை விட “10,000 மடங்கு அதிக உணர்திறன்” கொண்டதாக மாற்றும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இந்த பத்தாண்டுகளுக்குள் முடிக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-sci-tech/china-largest-ghost-particle-detector-neutrinos-explained-8997219/
பேய் துகள்களைக் கண்டறிவது ஏன் முக்கியமானது?
சரி, எல்லாம் ஓகே. ஆனால் நியூட்ரினோக்களின் சிறப்பு என்ன? நான் இதைப் பற்றி ஏன் கவலை படவேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் சரிதானே? இதற்கு பதில் உள்ளது.
பிரபஞ்சத்தில் ஏன் ஏராளமான நியூட்ரினோக்கள் உள்ளது அது ஏன் செயல்படுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு உண்மையில் தெரியாது. இது அவர்கள் நிறுவப்பட்ட இயற்பியல் விதிகளை மீறுகின்றனர்.
மேலும் துகள்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெருவெடிப்புக்குப் பிறகு, ஆரம்பகால பிரபஞ்சத்தில் அவர்கள் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு கருத்து மட்டுமே, இதுவரை எதையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.
நியூட்ரினோவை நன்கு புரிந்துகொள்வது பல அறிவியல் புதிர்களை தீர்க்க உதவும் என்று கருதப்படுகிறது.
மர்மமான காஸ்மிக் கதிர்கள் நியூட்ரினோக்களில் இருப்பதாக அறிப்படுகிறது. நியூட்ரினோக்களின் ஆதாரங்களைப் புரிந்துகொள்வது காஸ்மிக் கதிர்களின் தோற்றத்தை விளக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். காஸ்மிக் கதிர்கள் பற்றி கண்டறிய விஞ்ஞானிகள் பல நூற்றாண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர்.
நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் புரிந்து கொள்ள நியூட்ரினோக்கள் அவசியம் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. இந்த அறிவை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்லும் வகையில் சீனாவின் ட்ரைடென்ட் கட்டுமானம் அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.