Corona cases in Telangana : அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பு உள்ளவருடன் நாம் நேரடி தொடர்பு கொண்டிருப்பதால், நாம் வேண்டுமன்றே கொரோனா பாதிப்பை விலைகொடுத்து வாங்கிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
corona virus, telangana ,corona tests, covid pandemic, telanegana high court, trojan horse, telangana hc, telangana hc trojan horse, telangana hc on covid-19, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏன் மாநில அரசு குறைந்த அளவிலேயே கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் வழங்குவதற்கு முன்னர், மீண்டும் சோதனை நடத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சோதனைகளை ஏன் மாநில அரசு மேற்கொள்வதில்லை என்று கேள்வியும் எழுப்பியிருந்தது.
Advertisment
கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில், அதிகளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்படாதது, கிரேக்க காலத்தில் டுரோஜன் போரில் பயன்படுத்தப்பட்ட குதிரையை, தற்போது விருப்பப்பட்டு கொரோனா போரில் ஈடுபடுத்தப்படுவது போன்றது என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஏன் அதி்களவிலான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்கு நிதி ஆதாரம் தான் முக்கிய பிரச்சனை என்றால், மனித உயிர்கள் அவ்வளவு மலிவாகிவிட்டதா என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
Trojan horse என்பது இந்த இடத்தில், ஒரு விவகாரத்தில் தான் எதிர்த்து நிற்கும்போது நம்மளுக்குள்ளேயே ஒருவர் நம்மை தவறாக வழிநடத்துவது என்று பொருள்படுகிறது.
கிரேக்க தத்துவப்படி, டுரோஜன் என்ற வார்த்தை, எழுத்தாளர் ஹோமரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்றிருக்கும். இந்த படைப்புகள் இலியாத் மற்றும் ஒடிசி மொழிகளில் வெளிவந்துள்ளன. இவைகள் 8ம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்டவையாக கருதப்படுகிறது.
டுரோஜன் யுத்தம்
கிரேக்க காலத்தில் டிராய் என்றழைக்கப்படும் நகரை யார் மீ்ட்பது என்ற போரில், ஸ்பார்டன் குயின்ஸ் ஹெலன் படையும், டுரோஜன் பிரின்ஸ் பாரிஸ் படையும் மோதின. அந்த டிராய் நகரமே, தற்போது துருக்கி நாடு என்றழைக்கப்பட்டு வருகிறது.
ஹெலன் படையினருக்கு, மைசினே அரசர் னாள்ளிட்டோர் பேருதவி புரிந்தனர். அசில்லீஸ், ஓடிசியஸ், நெஸ்டர், அஜக்ஸ் உள்ளிட்டோரும் உதவினர். கிரேக்க படைகள் ஏகன் கடலை கடந்து டிராய் நகரை கைப்பற்றியதாக வரலாறு சொல்கிறது.
இந்த ரத்தக்களரியான போராட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இந்த போரில் கிரே்க்க படைகள் வெற்றி பெற்றன. டிராய் நகரத்தை கைப்பற்ற தங்கள் வீரர்கள் கட்டையால் ஆன குதிரை வடிவமைப்பில் பதுங்கி போர் புரிந்தனர், பின், அந்த கட்டை குதிரைகளை அங்கேயே தங்கள் நினைவாக விட்டுவந்துவிட்டனர். ஆனால், அந்நகர மக்களோ, இது தங்களுக்கு கிடைத்த பரிசு என்று நினைத்துக்கொண்டனர். ஆனால், ஒடிசியஸ் தலைமையிலான கிரேக்க வீரர்கள், அங்கேயே பதுங்கியிருந்து தக்க சமயம் வரும்போது அதிகளவிலான படைகளுடன் வந்து டிராய் நகரத்தை மீட்டனர்.
ஹெலன் மீண்டும் ஸ்பார்டா நகரத்திற்கே திரும்பியதாக ஓடிஸி வரலாற்று காவியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுரோஜன் குதிரை ஒப்பீடு ஏன்
தெலுங்கானா மாநிலத்தில், கொரோனா அறிகுறிகள் இல்லாமல், பலருக்கு பாதிப்பு இருந்துவருகிறது. இந்த நிலையையே, தெலுங்கானா உயர்நீதிமன்றம், டுரோஜன் குதிரை என குறிப்பிட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பு உள்ளவருடன் நாம் நேரடி தொடர்பு கொண்டிருப்பதால், நாம் வேண்டுமன்றே கொரோனா பாதிப்பை விலைகொடுத்து வாங்கிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லாமல், பாதிப்புக்குள்ளானவரை, நாம் கொரோனா சோதனையின் மூலமே கண்டறியமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil