கொரோனா வைரஸ் தடுப்பூசியை விரைவாகக் கண்டுபிடிப்பதற்கு சாதாரண ஒழுங்குமுறை செயல் உருவாக்கப்படுகிறது என்ற கவலைகளுக்கு மத்தியில், 9 பெரிய மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி உற்பத்தி செய்வதில் உயர் அறிவியல் மற்றும் நெறிமுறை தரங்களை கடைபிடிப்பதாக உறுதியளித்தன.
9 நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா, மாடெர்னா மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கொரோனா வைரஸ் தடுப்பூசி விண்ணப்பதாரர்கள் தற்போது கடைசி கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளன.
கூட்டு அறிக்கையில், நோவாவாக்ஸ், சனோஃபி, கிளாக்சோஸ்மித்க்லைன், ஜான்சன் & ஜான்சன், பயோஎன்டெக் மற்றும் மெர்க் ஆகிய நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன. பயோஎன்டெக் ஒரு தடுப்பூசியில் ஃபைசர் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை எப்போதும் தங்களின் முதன்மை முன்னுரிமையாக மாற்றுவோம் என்று அவர்கள் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் 3வது கட்ட மருத்துவ ஆய்வின் மூலம் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபித்த பிறகு, தடுப்பூசிகளுக்கு ஒப்புதலை எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தங்கள் நாட்டு பொதுமக்களுக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று அரசாங்கங்கள் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு பின்பற்றப்படும் விஞ்ஞான செயல்முறையின் நம்பகத்தன்மையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்திய அறிக்கை வந்துள்ளது. மேலும், அது மக்கள் மனங்களில் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஒரு அரசியல் போட்டியில் சிக்கியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் தேதிக்கு முன்னர் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்று பலமுறை கூறியுள்ளார்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் சமீபத்திய உத்தரவுகள் நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசியை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள தடைகளை அகற்றப்படுவதை பரிந்துரைத்துள்ளன. ஃபைசரின் அறிக்கை, அது உருவாக்கியுள்ள தடுப்பூசியின் தற்போதைய 3வது கட்ட சோதனைகளிலிருந்து செயல்திறன் தரவுகள் அக்டோபருக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது என்று கூறி அந்த எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளது.
எனவே, நிறுவனங்களின் கூட்டு அறிக்கையானது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புகளில் தடுப்பூசிகளுக்கான குறைந்த உற்சாகத்தில் பிரதிபலிக்கும் பொதுமக்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கு மருந்து நிறுவனங்களின் முயற்சியாகும். உயர் நெறிமுறைத் தரங்கள் மற்றும் சிறந்த விஞ்ஞானக் கொள்கைகளுக்கு ஏற்ப சாத்தியமான தடுப்பூசிகளை உருவாக்கி சோதிக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோருவதை நிராகரிக்கவில்லை. ஆனால், அதுவும் 3வது கட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் நடக்கும். 3 கட்ட சோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே, பொருத்தமான தடுப்பூசி விண்ணப்பதாரர்கள் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களை வழங்குவதற்கு திறந்திருப்பதாக அமெரிக்க எஃப்.டி.ஏ சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரம், ஃபைசர், தற்போதைய 3வது கட்ட சோதனைகளின் ஆரம்ப செயல்திறன் தரவு கிடைத்த உடனேயே அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை பெற முயற்சிப்பதாகக் கூறியது. அது அக்டோபருக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் தடுப்பூசி சாத்தியமில்லை: அந்தோணி ஃபாசி
இதனிடையே, தொற்று நோய் நிபுணரும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அமெரிக்காவில் மிகவும் நம்பகமான குரலாக ஒலிப்பவர்களில் ஒருவருமான அந்தோனி ஃபாசி, நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தலுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
சுகாதார மாநாட்டில் பேசிய ஃபாசி, இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்றார்.
தேர்தல் தேதிக்கு முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பூசி சந்தைக்கு வர வாய்ப்புள்ளது என்று டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
சமீபகாலம் வரை, தடுப்பூசி பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மட்டுமே கிடைக்கும் என்று ஃபாசி கூறி வந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாக, தடுப்பூசி உருவக்கும் செயற்பாட்டை மேலும் விரைவுபடுத்துவது சாத்தியம் என்றும், இந்த ஆண்டின் இறுதியில் தடுப்பூசி தயாராக இருப்பதற்கான காலம் கனியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு; இதுவரை நடந்த ஆய்வுக் கதைகள்
ஆரம்ப மருத்துவ பரிசோதனை அல்லது மருத்துவ பரிசோதனைகளில் 175 க்கும் மேற்பட்ட தடுப்பூசி விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.
அவைகளில் 34 பேர் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.
8 தடுப்பூசிகள் 3வது கட்ட மனித சோதனைகளில் இறுதி கட்டத்தில் உள்ளன.
இந்தியாவில் குறைந்தது 8 விண்ணப்பதாரர்களால் தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் 2 முதல் கட்ட சோதனையை முடித்து 2வது கட்ட சோதனைக்கு சென்றுள்ளன.
அதிகம் பேசப்பட்ட தடுப்பூசி உருவாக்கு நிறுவனங்கள்:
* அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
* மாடெர்னா
* ஃபைசர் / பயோஎன்டெக்
* ஜான்சன் & ஜான்சன்
* சனோஃபி / கிளாக்சோஸ்மித்க்லைன்
* நோவாவேக்ஸ்
* ரஷ்ய தடுப்பூசி, மாஸ்கோவில் கேமலெயா நிறுவனம் உருவாக்கியது.
(செப்டம்பர் 8 ஆம் தேதி வரை; ஆதாரம்: செப்டம்பர் 3, 2020, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசி நிலவரம்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.