coronavirus, lockdown, migrant labour crisis, india coronavirus lockdown, migrant exodus, coronavirus latest news, migrant labour, reverse migrant exodus, coronavirus test, covid-19 test, coronavirus india, covid-19 india explained, coronavirus deaths, covid-19 deaths
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சொந்த மாநிலத்திற்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் பெரும்குழப்பம் நிலவி வருகிறது.
Advertisment
மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 26 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 10 சதவீதத்தினர் நிவாரண முகாம்களிலிருந்தும், 43 சதவீதத்தினர் பணியாளர்களாகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல், உச்சநீதிமன்றத்தில் 97 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
உத்தரபிரதேச மாநிலத்திற்கு 21.69 லட்சம் பேர் திரும்பியுள்ள நிலையில், அங்கிருந்து 1.35 லட்சம் பேர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.
பீகார் மாநிலத்திற்கு 10 லட்சம் பேர் திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவிலிருந்து 11 லட்சம் பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.
குஜராத் மாநிலத்திலிருந்து 20.5 லட்சம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் இன்னும் 3,97,389 வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து 3 லட்சம் தொழிலாளர்கள் அவரவர்களது ஊர்களுக்கு திரும்ப வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவர்களது விபரங்கள் தவறு என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை இதைவிட பன்மடங்கு அதிகம் என தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
India On the Move and Churning: New Evidence என்ற பெயரில் 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட பொருளாதார அடிப்படையிலான கருத்துக்கணிப்பின்படி, தங்களது வாழ்வாதாரத்திற்காக நாட்டின் பிற பகுதிகள், பிற நகரங்களுக்கு சென்றவர்கள் தொடர்பாக ரயில்வேத்துறை எடுத்துள்ள கணக்கின்படி அவர்களின் எண்ணிக்கை 60 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2016ம் ஆண்டு காலகட்டத்தில், தொழிற்சார்ந்த புலம்பெயர்தலுக்காக ரயில் சேவையை பயன்படுத்தியவர்களின் விபரங்களின் அடிப்படையில்ல 9 மில்லியன் மக்கள், மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்துள்ளனர்.
அடுத்தடுத்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில், இதன் சராசரி மதிப்பு 3.3 மில்லியன் என்ற அளவில் இருந்த நிலையில், இந்தளவிற்கு வேறுபாடு வேறு எந்த ஆய்வுகளிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விபரம், அவர்கள் சென்ற திசையை எளிதில் கண்டறிய உதவுகிறது. இந்த விபரங்களின் மூலம், அவர்களுக்கு தேவையான நிதியுதவியை எளிதில் வழங்க அவர்களுக்கு ஏதுவாக அமைகிறது. ஆனால் இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது மேற்கோள் காட்டப்படவில்லை என்று கூறினார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்த நிபுணர் சின்மயி தும்பே கூறியதாவது, மார்ச் மாத பிற்பகுதியிலிருந்தே, நாட்டின் பலபகுதிகளிலிருந்து 3 கோடி வடமாநில தொழிலாளர்கள் ( சதவீதத்தின் அடிப்படையில் 15 முதல் 20 சதவீதம்) தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விட்டனர். இவர்களின் விபரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இவர்கள் ரயில் சேவையை பயன்படுத்தாமல், சாலை வழியாகவே கடந்து சென்றுள்ளனர்.
முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 மில்லியன் பேர் ஹோலி பண்டிகைக்காக ஊர் திரும்பியுள்ளதாக பயணிகள் அடிப்படையிலான போக்குவரத்து தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மார்ச் 25 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அம்மாநில அரசுகள் பேருந்து வசதிகளை செய்து தந்தன. இந்த காலகட்டத்தில், 5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட ஊரடங்கில், அதாவது மே மாதத்தில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு ரயில்களின் மூலம், 5 மில்லியன் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதன்மூலம், 20 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
பேராசிரியர் அமிதாப் குண்டு குழுவினரின் மதிப்பு 2.2 கோடி : பொருளாதார அறிஞரும், நிபுணருமான வர்கீஸ், காலித் கான், பேராசிரியர் அமிதாப் குழுவினர் நடத்தியுள்ள ஆய்வில், மார்ச் - ஏப்ரல் மாதங்களில் சுமார் 22 மில்லியன் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்களில் 12 மில்லியன் பேர் மீண்டும் திரும்பியுள்ளனர். 4 மில்லியன் பேர், காரிப் விவசாயம் தொடங்குவதற்கு முன்பாக திரும்பிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
டாக்டர் நோமன் மஜித் : 5 மில்லியன் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் என்று டாக்டர் மஜித்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் தாரிக் தாசில் : அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இந்திய அரசு செயல்படுத்திய சிறப்பு ரயில்களின் உதவியால், 50 முதல் 150 மில்லியன் தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு சென்றிருப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil