Advertisment

'விழுதுகள்' தப்பிவிடலாம், 'வேர்களை' பாதுகாப்பது முக்கியம்

"வயதானவர்களை பாதுகாத்தல்" என்பது கலாச்சார ரீதியான முழக்கம், சமூகத்திற்கு தேவையான சொற்றொடர், இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு நடைமுறை உத்தி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'விழுதுகள்' தப்பிவிடலாம், 'வேர்களை' பாதுகாப்பது முக்கியம்

"உங்கள் தாத்தா, பாட்டிகளை மறைத்துக் கொள்ளுங்கள் " என்று இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோவிட் -19 அச்சுறுத்தல் தொடர்பாக, தனது நாட்டு மக்களுக்கு முன்னர்  தெரிவித்திருந்தார். உண்மையில், இது பொது அறிவு மற்றும் புத்திக் கூர்மையுடன் கூறப்பட்ட  ஒரு நேர்த்தியான சொற்றொடர் தற்போதைய அவசரநிலை காலத்தில், உண்மையான சொற்களைக் தேடி பிடித்து கூறுவது கடினம். அப்படியே கூறினாலும், அனைத்து நாட்டு மக்களின் ஆபத்தை மிகவும் திறமையாகவும் சுருக்கமாகவும் கூறவது மிக மிக கடினம்!.

Advertisment

ஏன் இந்த வார்த்தைகள் அசாதாரணமானவை? வழக்கமாக ஒரு பெருந்தொற்று காலங்களில்,நோய்தொற்று இல்லாதவர்களை  பாதுகாப்பதற்காக நோய்த்தொற்றுடையவர்களை தனிமைப்படுத்தும் அணுகுமுறையை கடைபிடிப்பது வழக்கம்.  ஆனால், கோவிட்- 19 பல வழிகளிலும், நமது கடந்த கால அணுகுமுறையில் இருந்து மாறுபடுகிறது.

உலகளவில், மரணங்களை விளக்கும் வரைபடங்கள்,  நோயாளிகளின் வயது மற்றும் அவர்களுக்கு இருக்கும் தொற்றா நோய்களின் (Non Communicable Disease ) தன்மை பொறுத்தே பெரும்பாலான  மரணங்கள் நடந்திருப்பதாக காட்டுகின்றது.

கோவிட்- 19 தொற்றில், 55 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும்  ஆபத்துடையவர்கள். மேலும், இந்த வயது அதிகரிக்க  மரணத்திற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றது .

பெரும்பாலான கோவிட்-19 இறப்புகள், வயதானவர்களிடத்திலும், (அ) உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட இதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற ‘இணை நோயுற்ற நிலையில் இருப்பவர்களிடத்தில் அதிகமாக  நிகழ்கின்றன. நாள்பட்ட நோய்கள் கொண்ட வயதானவர்கள் கோவிட்- 19 தொடர்பான மரணங்களில் இருந்து மீண்டு வருவதில் மிகவும் பலவீனப்படுகிறார்கள்.

இந்த பெருந்தொற்று முடிவதற்குள், மக்கள்தொகையில் குறைந்து 50% -70% மக்கள் நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். எந்தவொரு பெருந்த்தொற்றின் இயற்கை வரலாறும் இதை தான் நம்மிடம் கூறுகிறது.

இத்தகைய நோயெதிர்ப்பு பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள்  இளைஞர்களாக இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடத்தில், பெரும்பாலும் நோய் அறிகுறிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள் (அ) லேசான, இரண்டு நாட்களில் குணமாகக்கூடிய சுவாச கோளாறுகளை மட்டுமே சந்திப்பார்கள்.

இருப்பினும், இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நோயெதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் தங்கள் வீடுகளில் இருக்கும், அலுவலங்களில் பணிபுரியும்,சமூக மற்றும் மதக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வயதான மற்றும் பாதிப்புடைய நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்றை தொடர்ந்து பரப்ப  வாய்ப்புள்ளது.

கோவிட்- 19 நோயைச் சந்திக்கும் வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட இதர நோயுடையவர்களில், சுமார் 10% -15% மக்கள் மரணத்தை சந்திக்கின்றனர் என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, வயதானவர்களை மற்றவர்களிடமிருந்து அறவே தனிமைப்படுத்தி, தொற்றில் இருந்து முற்றிலும் தப்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும், இந்த செயல்பாட்டுக்கு  பெயர் ‘ரிவர்ஸ் தனிமைப்படுத்தல்' அல்லது  ‘பாதுகாத்தல்’(cocoon) என்று பொருள்.

இந்த செயல்முறையை நாம் எவ்வாறு பயிற்சி செய்வது ?

அடுத்த பல மாதங்களுக்கு, குறிப்பாக அவசர நிலை முடியும் வரை, நமது தாத்தா, பாட்டி கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும். அரசு ஓய்வூதியம், ரேஷன், இலவச மருந்து போன்றவை வீட்டிலேயே வழங்கப்பட வேண்டும்.

அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான தேவைகள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்களால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தொலைபேசி ஆலோசனைகள் மூலம் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்கவோ (அ) காய்ச்சல் அறிகுறி உடையவர்கள் அவர்கள் பக்கத்தில் முற்றிலும் அனுமதிக்க  கூடாது. தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் போது கூட, அவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

அவர்கள் நிச்சயமாக, பொது இடங்களில் பிற மக்களுடன் சமுதாயமயமாக்குதலைத் தவிர்க்க வேண்டும். ஆனால், தொலைபேசி, சமூக ஊடகங்கள் மூலம் சமூக ரீதியில்  இணைந்திருக்க வேண்டும். உட்புற விளையாட்டு, புத்தக வாசிப்பு, ஓவியம், தோட்டக்கலை, இசைக்கருவிகள் போன்ற பொழுதுபோக்குகளைப் பயிற்சி செய்வது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் தூரத்தை (குறைந்தபட்சம் 2 மீட்டர்) கடைபிடித்து, குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளலாம். ஏனெனில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொற்றுநோயை வீட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளது.

குறிப்பாக நோய்தொற்றை பரப்பும் மேற்பரப்புகளான வாஷ் பேசின்கள், குழாய்கள், லிஃப்ட் பொத்தான்கள் போன்றவற்றைத் தொட்ட பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முழுமையான கை கழுவுவதைப் பயிற்சி செய்ய வேண்டும்.  கைகளை சோப்புடன் கழுவும்போது, ​​தண்ணீர் குழாய்களையும் சுத்தம் செய்தல் வேண்டும்.

வயதானவர்கள், இனி வரும் காலங்களில் கதவைத் திறக்கும் போதும், பொத்தானை அழுத்தும் போது சுத்தமான கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் குடும்ப உருப்பினர்களுடன்  மொபைல் போனைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

குளியலறைகள் அவ்வப்போது சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் அல்லது சோப்பு நிறைந்த தண்ணீரால்சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

முடிந்த வரை  தனித்தனியான  குளியலறை / கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், பயன்பாட்டிற்கு முன்னும் பின்னும், தரை மற்றும் மேற்பரப்புகளை சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

முதியவர்களின் பராமரிப்பாளர் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். உடல் ரீதியாக உதவுவதற்கு முன்னும் பின்னும், பராமரிப்பாளர் தன் கைகளை சோப்பு போட்டு கழுவதல்  வேண்டும். பராமரிப்பாளருக்கு (அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும்) காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டால் குறைந்தது நான்கு வாரங்கள்  வேலைக்கு வரக்கூடாது. காய்ச்சல் குணமான பின்பு இந்த நான்கு வாரம் கணக்கிடப்படுகிறது. இந்த நேரத்தில்,ஒரு  இளம் உறவினர் (அ) குடும்ப நண்பர் முதியவர்களை பராமாரிக்க  பொறுப்பேற்க முடியும்.

"வயதானவர்களையும், பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாத்தல்" என்பது கலாச்சார ரீதியான முழக்கம், சமூகத்திற்கு தேவையான சொற்றொடர், தற்போதைய கோவிட்-19 அவசரகாலத்தில், இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு நடைமுறை உத்தி.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment