Advertisment

கொரோனா நோய்த் தொற்று செவிப்புலனை பாதிக்குமா?

author-image
salan raj
New Update
கொரோனா நோய்த் தொற்று செவிப்புலனை பாதிக்குமா?

COVID-19 may affect the hearing of some patients. What does the study say : பி.எம். ஜி கேஸ் ரிப்போர்ட்ஸ் (BMJ Case Reports)  எனும் அறிவியல் நாளிதழில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும்  இங்கிலாந்து ராயல்நேஷனல் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட  ஆய்வில், " சில நோயாளிகளிடம் கோவிட் -19 நோய்த் தொற்று,  செவிப்புலனைப் பாதிக்கலாம்" என்று கூறுகிறது.

Advertisment

ஆய்வு என்ன சொல்கிறது? கொரோனா நோய்த் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயது நிரம்பிய ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு காது கேளாமால் போனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ்  அறிகுறிகள் காட்டத் தொடங்கிய 10வது நாளில் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக்‍ கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அடுத்த 30 நாட்களில்  நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் (pulmonary hypertension) மற்றும் இரத்த சோகை (anaemia) போன்ற காரணங்களால் அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.  ரெம்டெசிவிர் (Remdesivir) , பிளாஸ்மா சிகிச்சை போன்ற  சிகிச்சை முறைக்கு பின் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. இருப்பினும், ஐ.சி.யுவிலிருந்து மாற்றப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, காதிரைச்சல், திடீர் செவிப்புலன் இழப்பு போன்றவற்றை புகாரளித்தார்.

இதன் பொருள் என்ன?

காது கேளாமை மற்றும் காதிரைச்சல்  போன்றவைகள் கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஓட்டோலரிஞ்ஜாலஜி எனும் நாளிதழில் வெளியான ஆய்வறிக்கையில், சார்ஸ் கோவ்- 2 (SARS-CoV-2 ) கிருமியால் காது கேளாமைக்கு உள்ளான முதல் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கூடுதளாக, மேலும் இரண்டு ஆய்வறிக்கை கட்டுரைகள்  கொரோனா வைரஸ் பாதிப்புகளோடு, காது கேளாமை குறைப்பாடை தொடர்பு படுத்துகின்றன.

இதில், ஒருவருக்கு (60 வயது) கடுமையான கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு வலப்பக்க காது கேளாமை மற்றும் இடப்பக்க சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு ஆகிய குறைப்பட்டிற்கு உள்ளானார். இரண்டாவது நோயாளி அறிகுறிகள் காணப்படாவிட்டாலும், சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்புக்கு  (sensorineural hearing loss) உள்ளானார்.

செவிப்புலன் இழப்பு  மற்றும் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான ஆய்வுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும்,“  இவ்விரண்டிற்கும் இடையிலான இணைப்பை கருத்தில் கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சாத்தியமான விளக்கங்கள் ?

ஆராய்ச்சியாளர்கள் இரண்டு சாத்தியக் கூறுகளை முன்வைக்கின்றனர்.

முதல் காரணம்: கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கும். வைரஸின் ஸ்பைக் புரதம் மனித சுவாசக் குழாய் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் பிணைத்துக் கொள்கிறது. சமீபத்தியா ஆராய்ச்சி ஒன்றில் எலிகளின் காதில் இந்த  ACE2 ஏற்பிகள் கண்டறியப்பட்டது.

இரண்டாவது விளக்கம்:  நோய்க்கிருமி படையெடுக்கும் போது, ​​நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்படும் காரணத்தால் செவிப்புலன் பாதிப்பு ஏற்படலாம் .  சைட்டோகைன்களின் உற்பத்தி நேரடியாக கோக்லியாவுக்கு நுழைவதினால் உயிரணு வீக்கம் மற்றும் சேதம் ஏற்படுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment