Advertisment

குறைந்த விலையில் வென்டிலேட்டர்: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

Ventilators coronavirus : வெண்டிலேட்டரின் விலை 500 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தாங்கள் UCSD MADVent Mark V என்று பெயரிட்டுள்ளோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, lockdown, covid pandemic, coronavirus india lockdown, ventilators coronavirus, shortage of ventilators, ventilator coronavirus, ventilator supply, india ventilators, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus, lockdown, covid pandemic, coronavirus india lockdown, ventilators coronavirus, shortage of ventilators, ventilator coronavirus, ventilator supply, india ventilators, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு பயன்படும் வகையிலான குறைந்த விலையிலான மற்றும் எளிதில் பயன்படுத்தக்கக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர்களை, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் சாண்டியோகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்த புதிய வெண்டிலேட்டர் குறித்த மதிப்புரை, மெடிக்கல் டிவைசஸ் மற்றும் சென்சார்ஸ் என்ற ஜெர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக இந்த விஞ்ஞானிகள் குழு காத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்களில் இருக்கும் வெண்டிலேட்டர் பேக்குகளை போன்று, இந்த உபகரணத்தை சுற்றிலும் வெண்டிலேட்டர் பேக்குகள் உள்ளன.இந்த குழுவினர், இந்த வெண்டிலேட்டர் பேக்குகளை சுற்றி, ஆட்டோமேட்டட் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் பகுதிப்பொருட்களை எளிதில் கட்டமைத்துவிடும் வசதியுடனும், வெண்டிலேட்டரை, வெறும் 15 நிமிடங்களில் அசெம்பிளிங் செய்துவிட முடியும் என்று சாண்டியோகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது புழக்கத்தில் உள்ள வெண்டிலேட்டர்களுக்கு போட்டியாக தாங்கள் இந்த வெண்டிலேட்டர்களை உருவாக்கவில்லை என்றும், பல்வேறு இடங்களில் வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாலேயே, இந்த வெண்டிலேட்டரை தாங்கள் உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளனர்.

தாங்கள் தயாரித்துள்ள இந்த வெண்டிலேட்டரின் விலை 500 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தாங்கள் UCSD MADVent Mark V என்று பெயரிட்டுள்ளோம். இரத்த அழுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு குறைந்த அழுத்தம் மற்றும் அதிக அழுத்த மாறுபாட்டின்போது, ஏற்படும் மாற்றங்களை சிக்னல்களாக கொண்டு இந்த வெண்டிலேட்டர் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - New Research: A low-cost, easy-to-use Covid emergency ventilator

India Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment