பி.எஃப். பணம் எடுக்கும் விதிகள் தளர்வு: என்னென்ன மாற்றங்கள்? ஏன் சிலர் அதிருப்தி?

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அக்டோபர் 13 அன்று அறிவித்த இந்த மாற்றம், பி.எஃப். பணத்தை எடுப்பதில் இருந்த சிக்கல்களையும், நீண்டகாலக் காத்திருப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அக்டோபர் 13 அன்று அறிவித்த இந்த மாற்றம், பி.எஃப். பணத்தை எடுப்பதில் இருந்த சிக்கல்களையும், நீண்டகாலக் காத்திருப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

author-image
abhisudha
New Update
EPFO eases money withdrawal terms

EPFO eases money withdrawal terms: What has changed, why some are unhappy

இந்தியாவில் உள்ள சுமார் 30 கோடி ஊழியர்களின் ஓய்வு கால நிதிப் பாதுகாப்பை நிர்வகிக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), தனது விதிகளை மொத்தமாகத் திருத்தி, உழைக்கும் வர்க்கத்திற்குக் கட்டுப்பாடு இல்லாத நிதிச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அக்டோபர் 13 அன்று அறிவித்த இந்த மாற்றம், பி.எஃப். பணத்தை எடுப்பதில் இருந்த சிக்கல்களையும், நீண்டகாலக் காத்திருப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

Advertisment

முன்னால் இருந்த 13 விதிகள் காலி! 

முன்பு பி.எஃப். பணத்தை எடுப்பதற்கு 13 சிக்கலான வழிமுறைகளும் நிபந்தனைகளும் இருந்தன. ஆனால், இப்போது அவை அனைத்தும் நீக்கப்பட்டு, வெறும் 3 எளிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  • அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்)
  • வீட்டுத் தேவைகள் (Housing Needs)
  • சிறப்புச் சூழ்நிலைகள் (Special Circumstances)

கல்வி மற்றும் திருமணத்திற்கு வரம்பற்ற வாய்ப்புகள்!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதம்.

Advertisment
Advertisements

கல்விக்காக ஒரு உறுப்பினரின் சேவை காலத்தில் 10 முறை வரையிலும் பி.எஃப். பணத்தைக் கல்விச் செலவுகளுக்காக எடுக்கலாம்.

திருமணச் செலவுகளுக்காக 5 முறை வரையிலும் பகுதிவாரியாகப் பணம் எடுக்கலாம்.

முன்பு இந்த இரண்டு தேவைகளுக்கும் சேர்த்து மொத்தமே 3 முறைதான் எடுக்க முடியும் என்ற பழைய கெடுபிடி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது! அதுமட்டுமின்றி, நோய் மற்றும் 'சிறப்புச் சூழ்நிலைகள்' பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே 3 மற்றும் 2 முறை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

காரணம் சொல்லத் தேவையில்லை 

இயற்கைச் சீற்றம், நிறுவனப் பூட்டுதல், வேலையின்மை போன்ற 'சிறப்புச் சூழ்நிலைகள்' கீழ் பணம் எடுக்க விண்ணப்பிக்கும்போது, அதற்கான காரணத்தையும் ஆவணங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டியிருந்தது. ஆவணக் குழப்பங்களால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இனிமேல், இந்த 'சிறப்புச் சூழ்நிலைகள்' பிரிவின் கீழ் பணம் எடுக்கும்போது, உறுப்பினர்கள் எந்தக் காரணத்தையும் விளக்கிக் கூறத் தேவையில்லை! இது, க்ளைம்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்த்து, 100% தானியங்கி தீர்வு (Auto Settlement) முறைக்கு வழிவகுக்கும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.

100% வரை பணம் எடுக்கலாம்! ஆனாலும் ஒரு எச்சரிக்கை

ஊழியர்கள் தங்கள் பி.எஃப். கணக்கில் உள்ள 'தகுதியுள்ள இருப்பு' தொகையை 100% வரை எடுக்க முடியும் என்ற மிகப் பெரிய தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு முக்கிய விதி: ஒவ்வொரு ஊழியரும் தங்கள் கணக்கில் உள்ள மொத்தப் பங்களிப்பில் 25% தொகையை குறைந்தபட்ச இருப்பாக (Minimum Balance) எப்போதும் வைத்திருக்க வேண்டும். இந்த 25% தொகைக்கு, தற்போதுள்ள 8.25% வட்டி தொடர்ந்து கிடைக்கும். இதன் மூலம், உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், ஓய்வூதியத்திற்காக ஒரு குறிப்பிடத்தக்க கார்பஸ் இருப்பதை இ.பி.எஃப்.ஓ. உறுதி செய்கிறது.

குறைந்தபட்ச சேவை காலம் வெறும் 12 மாதங்கள்!

  • வீட்டுவசதிக்கு 5 வருடங்கள், கல்வி மற்றும் திருமணத்திற்கு 7 வருடங்கள் என்று இருந்த குறைந்தபட்ச சேவை காலம், இப்போது அனைத்து பகுதிவாரியான பணம் எடுப்புகளுக்கும் 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்கள் 

இந்த 100% பணம் எடுக்கும் தளர்வு குறித்து சில தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "பி.எஃப். என்பது குறுகிய காலத் தேவைக்கான நிரந்தர வைப்பு நிதி அல்ல, இது ஓய்வு காலத்துக்கான பாதுகாப்பு அரண். தொடர்ந்து பணம் எடுக்க அனுமதிப்பதால், ஊழியர்கள் ஓய்வுக் காலத்தில் நிதிப் பாதுகாப்பு இல்லாமல் போகும் அபாயம் உள்ளது" என்று தொழிலாளர் 
முன்னாள் சி.பி.டி. உறுப்பினர் மற்றும் முதலாளிகள் பிரதிநிதி கே.இ. ரகுநாதன் இந்த முடிவை "மிகவும் கவலை அளிக்கிறது மற்றும் பிற்போக்குத்தனமானது" என்று கூறினார்.

"இந்த நடவடிக்கை, இந்தியாவின் சம்பளம் பெறும் தொழிலாள வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பின் அடித்தளத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. பி.எஃப். குறுகிய காலத் தேவைக்கான நிரந்தர வைப்பு நிதி அல்ல, இது ஓய்வு காலத்துக்கான பாதுகாப்பு அரண். இது, ஒரு தொழிலாளியின் பணி முடிவில் கண்ணியத்தையும் நிதிப் பாதுகாப்பையும் வழங்குவதற்காக கட்டமைக்கப்பட்டது. திரும்பத் திரும்ப முழுமையாகப் பணம் எடுக்க அனுமதிப்பதன் மூலம், ஓய்வுக் காலத்தில் மில்லியன் கணக்கானவர்களுக்கு அற்பமான சேமிப்பே மிஞ்சும் அபாயம் உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

இ.பி.எஃப்.ஓ.3.0: 

பி.எஃப். சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க இ.பி.எஃப்.ஓ 3.0 என்ற திட்டம் விரைவில் வரவுள்ளது. •  இது கணக்கு மேலாண்மை, இஆர்பி (ERP), இணக்கம் மற்றும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்ட கிளவுட்-நேட்டிவ், API-முதல், மைக்ரோ சர்வீசஸ் அடிப்படையிலான தீர்வுகளை உள்ளடக்கும். இதன் மூலம், க்ளைம்கள் மிக வேகமாகவும், தானியங்கி முறையிலும் தீர்க்கப்படும்.

விஷ்வாஸ் திட்டம் (Vishwas Scheme): 

பி.எஃப். தொகையை தாமதமாகச் செலுத்தும் நிறுவனங்களுக்கான அபராதத் தொகையைக் குறைத்து, நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க 'விஷ்வாஸ் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், அபராத விகிதம் மாதம் 1% என்ற நிலையான விகிதமாகக் குறைக்கப்படும். (2 மாதங்கள் வரை தாமதத்திற்கு 0.25%, 4 மாதங்கள் வரை 0.50% என்ற படிப்படியான விகிதத்தைத் தவிர). 2008-க்கு முன் 17% முதல் 37% வரையிலும், 2024-க்கு முன் 5% முதல் 25% வரையிலும் இருந்த உயர் அபராத விகிதங்கள் வழக்குகளுக்கு வழிவகுத்தன. இந்தத் திட்டத்தின் கீழ் இணங்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த மாற்றங்கள், இந்திய ஊழியர்களின் நிதி நிர்வாகத்தை எளிமையாக்கி, அவர்கள் தங்கள் பணத்தை அணுகும் சுதந்திரத்தை அதிகரித்து, 'வாழ்வின் எளிமையை' (Ease of Living) மேம்படுத்தும் என்று தொழிலாளர் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

Epfo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: