Advertisment

மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவுமா? புதிய ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

அதே நேரத்தில் 100 மைக்ரான்களுக்கு அதிகமான அளவுள்ள ட்ராப்லெட்கள் விரைவாக தரையில் வீழ்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained: Cough droplets travel longer when it’s cold & humid

 Kabir Firaque

Advertisment

Explained: Cough droplets travel longer when it’s cold & humid :  இருமல் மற்றும் தும்மலின் போது வெளியேறும் சுவாசத்துகள்கள் (respiratory droplets), வெப்பமான காலநிலையைக் காட்டிலும், ஈரப்பதமான, குளிர்ந்த காலநிலையில் அதிக காலம் இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஒன்று தெரிவிக்கின்றது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான் டியாகோ (யு.சி.எஸ்.டி) இந்திய அறிவியல் நிறுவனம் (பெங்களூரு) மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ஃபிசிக்ஸ் ஆஃப் ஃப்ளூயிட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கொரோனாவை ஒழிக்க ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து உதவுமா?

இந்த முடிவை எப்படி எட்டினார்கள் ஆராய்ச்சியாளர்கள்?

சுவாசமண்டலத்தை தாக்கி அழிக்கும் கோவிட்19 போன்ற வைரஸ்களின் ஆரம்பகால பரவல் மற்றும் காற்றில் பரவிய சுவாச துகள்கள் ஆகியவற்றை கொண்டு புதிய கணித மாதிரியை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதிரி, ட்ராப்லெட்ஸின் இயற்பியல், மக்கள் தொகையை பொருத்து அது பரவும் வீதம் ஆகியவை கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி, ட்ராப்லெட்கள் எவ்வளவு வேகமாக பரவும் என்றும் எவ்வளவு தூரம் காற்றில் இருக்கும் என்றும் அறிய மேற்கொள்ளப்பட்டது.

நோய் பரவலுக்கான ட்ராப்லெட் பயணிக்கும் வீதம் மற்றும் ஆவியாகும் தன்மை ஆகியவற்றை கொண்ட இயக்கவியல் மாதிரியையும் இணைத்துள்ளோம் என்கிறார் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசியர் சப்தரிஷி பாசு. இது molecular collision கோட்பாட்டின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டது என்று கூறும் அவர் இந்த ஆராய்ச்சியின் அடிப்படையே ட்ராப்லெட் இயற்பியலை நோய் பரவலின் கைனடிக் கோட்பாட்டுடன் இணைத்து நோய் பரவும் வீதம் மற்றும் நோயின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை குறித்தும் ஆராய்வதாகும்.

 

Explained: Cough droplets travel longer when it’s cold & humid `

ஆரோக்கியமான ஒருவர் எத்தனை முறை பாதிப்புக்குள்ளான ட்ராம்ப்லெட்களுடன் தொடர்பில் உள்ளார் என்பதைக் கொண்டு எவ்வளவு தூரம் இந்த நோய் பரவும் என்பதை ஆராய முடியும் என்று பேராசிரியர் அபிஷேக் சாஹா தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டுள்ளார். லேவிடேட்டர் ஒன்றில் உப்பு நீர் கரைசலை ஊற்றி, ஆராய்ச்சியாளர்கள் வேதியல் எதிர்வினைகள் மற்றும் இயற்பியல் கொள்கைகளை பயன்படுத்தி ட்ராப்லெட்களின் அளவு, பரவும் வீதம், மற்றும் அதன் ஆயுட்காலம் ஆகியவை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

எவ்வளவு தூரம் இந்த ட்ராப்லெட்கள் பயணிக்கும்?

வானிலையை பொறுத்து, அவை ஆவியாவதற்கு முன்பு, 8 அடி முதல் 13 அடி வரை பயணிக்கும் தன்மை கொண்டவை. 35 ° C மற்றும் 40% ஈரப்பதத்தில் அவை 8 அடிகள் பயணிக்கும். 35 ° C மற்றும் 40% ஈரப்பதத்தில் அவை 12 அடிகள் வரையும் பயணிக்க கூடும். இவை முகக்கவசங்கள் மற்றும் 6 அடி தனி மனித இடைவெளி இல்லை என்றால் பரவலை தடுக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது.

குளிர் காலங்களில் இந்நிலைமை கண்டு நாம் கவலை கொள்ள வேண்டுமா?

இதற்கு பதில் அளித்த பாசு, ஒரு ட்ராப்லெட்டின் காலம் என்பது வெப்பநிலையை காட்டிலும் ஈரப்பதத்தை பொறுத்தது தான். அதாவது காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருக்கும் போது, ஆவியாகும் நிலையை அடைவதற்கு முன்பு ட்ராப்லெட் அதிக காலம் வாழும், அதிக தூரம் பயணிக்கும். குளிர் காலமும் ட்ராப்லெட்டின் வாழ்நாளை நீடிக்கும், ஆனால் ஈரப்பதத்தை விட அதிகமாக இருக்காது என்றார்.

வேறேதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் இந்த ஆராய்ச்சியில் உள்ளதா?

இந்த ஆராய்ச்சி அதிக அளவு விளைவுகளை உருவாக்கும் ட்ராப்லெட்டின் அளவுகளை அறிந்துள்ளது. 14 முதல் 48 மைக்ரான் அளவு கொண்ட ட்ராப்லெட்கள் ஆவியாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் அதிக தூரம் பயணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய ட்ராப்லெட்கள் ஒரு நொடிக்குள் ஆவியாகின்றன, அதே நேரத்தில் 100 மைக்ரான்களுக்கு அதிகமான அளவுள்ள ட்ராப்லெட்கள் விரைவாக தரையில் வீழ்கின்றன.

மாதிரிகளின் வரம்புகள்?

ஸ்வேதாப்ராவோ சௌத்ரி, ட்ரோண்ட்டோ பல்கலைகழகத்தின் பேராசிரியர், ”இலட்சியப்படுத்தப்பட்ட அனுமானங்கள்” மற்றும் “சில அளவுருக்களில் உள்ள மாறுபாடுகள்” என்று வரம்புகள் குறித்து அறிவித்தார். அடுத்த கட்ட ஆராய்ச்சிகளில் எளிமைப்படுத்துதல் மற்றும் தளர்வுகள் இருக்கும் என்றும் பரவும் முறைகளில் இருக்கும் மாறுபட்ட நிலைகளும் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார் பாசு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment