Advertisment

இந்திய தொழில் முனைவோரின் எழுச்சி: உண்மை நிலை என்ன?

இந்தியாவில் அதிகரித்து வரும் தொழில்முனைவோரின் எண்ணிக்கை; உண்மையில் சுயதொழில் செய்வோரின் அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துவது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
employment

இந்தியாவில் அதிகரித்து வரும் தொழில்முனைவோரின் எண்ணிக்கை; உண்மையில் சுயதொழில் செய்வோரின் அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துவது என்ன? (கோப்பு படம்)

Udit Misra 

Advertisment

அன்புள்ள வாசகர்களே,

ஆத்மநிர்பர் பாரத், அல்லது தற்சார்பு இந்தியா, தற்போதைய அரசாங்கம் கூறிய மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும். நிச்சயமாக, நாடு முழுவதுமான பொருளாதார நடவடிக்கைகளில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பது கருத்து. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு தொடர்புடைய யோசனை என்னவென்றால், அதிகாரப்பூர்வ வேலைக்காக அரசாங்கத்தை நோக்கிப் பார்க்கக் கூடாது என்று மக்களை நம்ப வைப்பதாகும்.

2018ல் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய விவாதத்தின் உச்சக்கட்டத்தில், அப்போதைய பா.ஜ.க தலைவர் அமித் ஷா ராஜ்யசபாவில் தனது முதல் உரையில் கூறினார்: “இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதற்குப் பதிலாக பக்கோடா விற்று சம்பாதிப்பது நல்லது”.

இதையும் படியுங்கள்: ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய இஸ்ரோ ராக்கெட் பாகம்: இந்தியா என்ன செய்யும்? இதற்கு விதிகள் உள்ளதா?

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தரவுகள், இந்தியர்கள் சுயதொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கிறது.

இந்தியர்கள் எங்கே, எப்படி வேலை செய்கிறார்கள்?

விளக்கப்படம் 1 இந்தியாவில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

publive-image

CMIE இன் படி, ஜனவரி-ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பு 412.9 மில்லியனாக இருந்தது. இது தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட (அதாவது ஜனவரி-ஏப்ரல் 2019 இல்) 8.6 மில்லியன் அதிகம்.

மொத்த வேலையில் உள்ளவர்களை மேலும் பல வகைகளாக வகைப்படுத்தலாம். இருப்பினும், நான்கு முக்கிய வகைகள் உள்ளன. விளக்கப்படம் 2 அந்த நான்கு துணை வகைகளின் பாதைகளை வரைபடமாக்குகிறது.

publive-image

இவை: பெரு வணிகர்கள்; சம்பளதாரர்கள்; சிறு வணிகர்கள் & கூலித் தொழிலாளர்கள்; மற்றும் விவசாயிகள்.

ஒருவர் கவனமாகக் கவனித்தால், குறைந்தது இரண்டு விஷயங்கள் தனித்து நிற்கும்.

முதலில் இந்தியர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது. இந்தியர்களில் பெரும்பாலோர் விவசாயிகளாகவோ அல்லது கூலித் தொழிலாளர்களாகவோ அல்லது சிறு வணிகர்களாகவோ வேலை செய்கிறார்கள். மூன்றாவது பெரிய பிரிவு சம்பள வர்க்கம். நான்காவது பெரிய வகை "வணிக" வர்க்கம் அல்லது "தொழில்முனைவோர்" என்று அழைக்கப்படும்.

கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு உண்மையில் மீண்டது ஒரே ஒரு வகை மட்டுமே. அதாவது ஒருவித "வணிகம்" சார்ந்த வேலை செய்பவர்கள். மற்ற அனைத்து வகையான வேலைவாய்ப்புகளும் தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் "வணிகம்" என்பதன் கீழ் வகைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.4 மில்லியன் அதிகரித்துள்ளது.

தொழில் முனைவோர் உயர்வு?

ஒரு மட்டத்தில், "வணிகம்" வகைக்குள் வேலைவாய்ப்பு உயர்ந்து வருகிறது என்ற உண்மை, மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம், தனியார் துறையினர் வெளிவருவதற்கும் அவர்களின் கனவுகளை அடைவதற்கும் சரியான வகையான ஊக்கங்களை உருவாக்கி வருகிறது, அதாவது இந்தியா தொழில்முனைவோர்களுக்கான வாய்ப்புகளின் புதிய நிலம் என்பதை இது உணர்த்துகிறது.

ஆனால் "வணிகம்" பிரிவில் உள்ள தரவுகளின் விரிவான ஆய்வு மிகவும் வித்தியாசமான படத்தை வெளிப்படுத்துகிறது.

"வணிக" வகைக்குள் உள்ளவர்களுக்கு மூன்று துணைப்பிரிவுகள் உள்ளன.

பெரு வணிகர்கள்: மூலதனம் மற்றும் நிறுவனங்களை நடத்த மனிதவளத்தை பயன்படுத்தி பெரிய தொழில்களை நிறுவுபவர்கள் இதில் அடங்குவர். அலுவலகம், கடை, பட்டறை, தொழிற்சாலை போன்ற சில நிலையான வளாகங்களை அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.

தகுதிவாய்ந்த சுயதொழில் வல்லுநர்கள்: "தகுதி" மற்றும் "தொழில்முறை" பற்றிய அம்சம் இங்கே முக்கியமானது. இந்த பிரிவில் தங்கள் சொந்த தொழில்முறை நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்றும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள், தொழில்முறை பட்டயக் கணக்காளர்கள் போன்ற தங்கள் சொந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்துபவர்கள் அடங்குவர்.

சுயதொழில் செய்பவர்கள்: இந்த வகையானது தங்கள் சொந்த வணிக நிறுவனங்களை நடத்தும் "தொழில்முனைவோரை" குறிக்கிறது ஆனால் இந்த நிறுவனங்கள் அதிக நிதி மூலதனம், மனித மூலதனம் அல்லது தொழில்முறை திறன்களைக் கூட பயன்படுத்துவதில்லை. டாக்ஸி டிரைவர்கள், முடிதிருத்துபவர்கள், அழகுக்கலை நிபுணர்கள், எஸ்டேட் முகவர்கள், தரகர்கள், காப்பீட்டு முகவர்கள், மாடல்கள், ஜோதிடர்கள் போன்றவர்கள்.

இப்போது விளக்கப்படம் 3 ஐப் பார்க்கவும், இது கடந்த சில ஆண்டுகளில் இந்த மூன்று துணை வகைகளின் மிகவும் வேறுபட்ட பாதையை வரைபடமாக்குகிறது. விளக்கப்படம் குறிப்பிடுவது போல், இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்முனைவோரில் 70-80 சதவிகிதம் என்ற அளவில் சுயதொழில் செய்யும் தொழில்முனைவோர் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தனர்.

publive-image

நாட்டின் மொத்த பெரு வணிகர்களில் 15-20 சதவீதத்தை உள்ளடக்கிய வணிகர்களின் பங்கு இரண்டாவது பெரியது.

தகுதிவாய்ந்த சுயதொழில் வல்லுநர்கள் வெறும் 1-2 சதவிகிதம் மட்டுமே.

CMIE இன் கூற்றுப்படி, CMIE அதன் வேலைவாய்ப்புத் தரவை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, 2016 முதல் இந்த அமைப்பு கணிசமாக மாறிவிட்டது. பெரு வணிகர்களின் பங்கு கணிசமாகக் குறைந்தது மற்றும் சுயதொழில் செய்யும் தொழில்முனைவோரின் பங்கில் சமமான உயர்வு மூலம் ஈடுசெய்யப்பட்டது (படம் 4 ஐப் பார்க்கவும்)

publive-image

விளைவு என்ன?

இந்த விளக்கப்படங்கள் மற்றும் தரவுகளில் இருந்து எடுக்க வேண்டிய முக்கிய அம்சம், இந்தியர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ள வேலைவாய்ப்பின் தன்மையைப் புரிந்துகொள்வதாகும்.

மேக்ரோ மட்டத்தில், பெரும்பாலும் வணிக வர்க்கமாகக் கருதப்படுவது, அதாவது நன்றாகச் செயல்படும் தொழில்முனைவோர் விகிதம், கணிசமான வீழ்ச்சியைக் காண்கிறது என்று தரவு காட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்கள் தொகை அதிகரித்தாலும் அந்த வகையைச் சேர்ந்த இந்தியர்கள் மிகமிகக் குறைவாக உள்ளனர். இது முழுமையான எண்கள் மற்றும் விகிதாச்சாரத்தில் சரிவைக் குறிக்கிறது.

மிக முக்கியமாக, இந்திய தொழில்முனைவோரின் உண்மையான உயர்வு சுயதொழில் பிரிவில் நடக்கிறது, இது பொருளாதார நிலைமைகளில் மோசமாக பிரதிபலிக்கிறது.

"இந்தியாவில் வேலைவாய்ப்பின் அமைப்பில் இந்த மாற்றம் உண்மையான தொழில்முனைவோரின் அதிகரிப்பைக் குறிக்கவில்லை, ஆனால் இது பொருளாதாரத்தில் மோசமான வேலை வாய்ப்புகளின் பிரதிபலிப்பாகும்" என்று CMIE இன் ஆய்வுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புடன்,

உதித்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Unemployment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment