இந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போது ஹரியானா பா.ஜ.க முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக நயாப் சிங் சைனியை நியமித்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டனர். கட்டாரின் நீக்கம் சற்றும் எதிர்பாராத நிலையில், குருக்ஷேத்ரா எம்.பி.யை ஹரியானா முதல்வராகத் தேர்ந்தெடுத்தது எதிர்பாராததாக இருந்தது.
ஆனால் இன்று ஹரியானாவில் நயாப் சிங் சைனி, பா.ஜ.கவை மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வைத்தார். அவரது வெற்றி பின்னணியில் உள்ள 5 காரணங்களை பார்ப்போம்.
மக்களின் முதல்வர்
54 வயதான சைனி மக்களின் முதல்வராக இருக்க விரும்புகிறார். சைனி முதல்வரான பின் அவருக்கு ஒரு போன் வருகிறது. சைனி பதிலளிக்கையில், மறுமுனையில் ஒரு கரடுமுரடான குரல் கேட்டது: (முதல்வர் பேசுகிறாரா?)
சைனி ஆம் என பதிலளித்தார். மறுமுனையில் அந்த நபர், "முதல்வர் அவர் சொன்னபடி யார் போன் செய்தாலும் எடுக்கிறார் என்று சரிபார்க்க அழைத்தேன் என்றார்".
மார்ச் மாதம் ஹரியானாவின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், சைனி மக்களிடம் நெருக்கமாகவே இருந்தார். “என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்; நான் இப்போது முதலமைச்சராக இருந்தாலும் என் கதவுகள் திறந்தே இருக்கும் , ”என்று சைனி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தனது பதவி உயர்வுக்குப் பிறகு ஒரு பேட்டியில் கூறினார்.
சாதி- ஓட்டு வங்கி
வாழ்க்கையிலும் அரசியலிலும் சாதி முக்கிய பங்கு வகிக்கும் மாநிலத்தில், சைனி முதல்வராக கச்சிதமான தேர்வானார்.
ஹரியானாவில் அரசியல் அதிகாரத்தில் பெரும் பங்கு வரலாற்று ரீதியாக மாநிலத்தின் மக்கள்தொகையில் 25-27 சதவீதமாக இருக்கும் ஜாட் இனத்தவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த குழுவின் வாக்குகளை காங்கிரஸால் பெறுவதன் மூலம், சைனியின் தலைமையில் பாஜக ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேலை செய்தது.
ஹரியானாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் இருக்கும் OBC (பிற பிற்படுத்தப்பட்டோர்) சமூகத்தைச் சேர்ந்தவர், சைனி. சைனியின் பின்னணி இதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. கட்டாரும் ஜாட் அல்லாதவராக இருந்தபோது, அவர் எண்ணிக்கையில் சிறிய காத்ரி சமூகத்தில் இருந்து வந்தவர்.
ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளர்
முதல்வராக, சைனி ஹரியானா பாஜகவில் உள்ள பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைக்க முயற்சித்துள்ளார். சைனியின் பதவி உயர்வுக்குப் பிறகு மூத்த கேபினட் அமைச்சர் அனில் விஜ் அதிருப்தி அடைந்தபோது, அவரது ஆதரவைப் பெற அம்பாலாவுக்கு விரைந்ததை முதல்வர் செய்தார். "எல்லோரையும் அரவணைத்து செல்வதை நான் நம்புகிறேன்," என்றார்.
தனது கட்சிக்கு அப்பால், அதிருப்தியில் உள்ள விவசாயிகளுடன் இணைப்பு ஏற்படுத்தவும் சைனி கடுமையாக உழைத்துள்ளார்.
படிப்படியான உயர்வு
கட்சியில் படிப்படியாக உயர்ந்து வந்துள்ள சைனி மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிய தனித்துவமான புரிதலைக் கொண்டுள்ளார். அம்பாலா அருகே உள்ள கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பாஜகவில் சேர்ந்து உயர்ந்தவர்.
மூத்த தலைவர்கள் ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நம்பிக்கையாளரான கட்டாரை முதன்முதலில் சந்தித்தபோது சைனிக்கு இருபது வயது. அவர்களின் பிணைப்பு நீடித்தது - இன்றும், அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அலுவலகத்தில் முன்னாள் முதல்வரின் பெரிய புகைப்படத்தை வைத்திருப்பார்.
சைனியை முதலமைச்சராக உயர்த்துவதற்கு இந்த உறவு ஓரளவு காரணமாக இருக்கும். இது சைனிக்கு பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவை பெறவும், நலன்புரி நடவடிக்கைகளை செயல்படுத்தவும், வேட்பாளர் தேர்வில் செல்வாக்கு செலுத்தவும் உதவியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, சைனியின் வெற்றி அவர் மக்களுடன் செய்படுவது தான். ஒரு பேரணியில் சைனியை பற்றி கூறிய பிரதமர் மோடி, "அவர் ஒரு எளிய மனிதர்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“