நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை (Heatwave) இறப்புகள் பதிவாகி வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று (செவ்வாய்கிழமை) இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து மாநில அரசுகளுக்கு வழிகாட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாண்டவியா தெரிவித்தார்.
இதுபோன்ற மரணங்களைத் தடுக்க மற்ற துறைகளுடன் ருங்கிணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உருவாக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் மாண்டவியா கேட்டுக் கொண்டார்.
வெப்பம் உடலை எவ்வாறு பாதிக்கிறது?
கடுமையான வெப்ப நாட்களில் வெளியில் சென்று வந்தால் களைப்பாகவும், சோர்வாக உணர்கிறோம். இது வெப்ப சோர்வு என்று குறிப்பிடப்படுகிறது. வெப்ப சோர்வு ஏற்படும் போது அதிக வியர்வையும், உடலின் மைய வெப்பநிலை குறைவாகவும் இருக்கிறது.
டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறுகையில், இதனால் தான் வெப்பமான நாட்களில் அதிக தண்ணீர் குடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வெப்ப சோர்வினால் உயரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. குளிர்ந்த பகுதிகளுக்குத் திரும்பியதும், குளிர்ச்சியான உணவு சாப்பிட்டதும் அது சரியாகி விடும். ஆனால் ஹீட் ஸ்ட்ரோக் அப்படி அல்ல என்றார்.
வெளியில் 40 டிகிரி C (அல்லது 104 டிகிரி F) கடுமையான வெப்ப நிலை இருக்கும் போது ஒருவருக்கு உடல் வியர்வை வராமல், வியர்க்க முடியாத நிலை இருப்பது (வெப்ப பக்கவாதம்) ஹீட் ஸ்ட்ரோக்கை ஏற்படுத்துகிறது. . இந்த நேரங்களில் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்பு தன்மைகளில் கடுமையான ஏற்றத்தாழ்வு உள்ளது. கடுமையான வெப்ப நிலை உப்பு தன்மைகளில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கிறது, இது பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
இது மூளையைப் பாதிக்கலாம். தூக்கமாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் கோமா நிலைக்கும் செல்ல வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்கும் வழிவகுக்கும். இத்தகைய அறிகுறிகள் ஹீட் ஸ்ட்ரோக் மரணத்திற்கு வழிவகுக்கிறது" என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார்.
இதை செய்ய வேண்டும்
இதுபோன்ற கடுமையான நேரங்களில் உடலின் வெப்பநிலையை விரைவாகக் குறைப்பதே முதன்மை நோக்கமாகும். அதற்கு பாதிக்கப்பட்ட நபர் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவது, குளிர் பானங்கள் குடிக்கச் செய்வது, உப்பு அளவை சமநிலைப்படுத்த எலக்ட்ரோலைட் வழங்குவதன் மூலம் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும்.
நீங்கள் எப்போது மருத்துவமனைக்கு விரைய வேண்டும்?
பின்வரும் அறிகுறிகளை ஒரு நபர் வெளிப்படுத்தினால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்
என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார். அவைகள்.
- உடல் வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது ஆனால் அவருக்கு வியர்வை வர வில்லை.
- தூக்கம் ஏற்படுகிறது, வாந்தி வருகிறது. அவரால் சிறுநீர் கழிக்க முடிய வில்லை மற்றும் சுவாசிக்க முடிய வில்லை போன்ற தருணங்களில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் வெப்ப அலைகளில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். "இருப்பினும், இது இளைஞர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வராது என்று அர்த்தம் இல்லை, இது எந்த வயதிலும் நிகழலாம்" என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார்.
ஹீட் ஸ்ட்ரோக் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வெப்ப பக்கவாதத்தைத் தடுக்க, நேரடி சூரிய ஒளியில், குறிப்பாக மதியம் மற்றும் 3 மணி வரை வெளியில் செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் கடுமையான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். எலக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கக்கூடிய லஸ்ஸி, எலுமிச்சை நீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை குடிக்க வேண்டும். மது, டீ, காபி மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்கள் குடிக்க கூடாது. ஏனெனில் அவை உங்களை மேலும் செய்யும். தளர்வான, பருத்தி ஆடைகளை அணியவும். கூலிங் கிளாஸ், குடை, செப்பல் அணிந்து செல்ல வேண்டும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அறிவுறுத்தலின் படி, மக்கள் தங்கள் வீடுகளை குளிர்ச்சியாக வைக்க வேண்டும். ஸ்கிரீன் பயன்படுத்தி வெயில் வருவதை தடுக்கலாம். ஈரமான துணியைப் பயன்படுத்தி அல்லது அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் குளித்து உடல் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும்.
வெப்ப அலை விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் வழிமுறைகள் மூலம் ஹீட் வேவ் மரணங்களை தடுக்கலாம். காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் திலீப் மவ்லாங்கர், அகமதாபாத்திற்கு நாட்டின் முதல் வெப்ப செயல் திட்டங்களில் ஒன்றை உருவாக்கிய குழு, இது நகரத்தில் இறப்பு விகிதத்தை 30% முதல் 40% வரை குறைத்துள்ளது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.