வின்சென்ட் வான் கோவால் 1889 ஆம் ஆண்டு கோடை இரவில் வரையப்பட்டது. தி ஸ்டாரி நைட் (The Starry Night) என்பது உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஓவியங்களில் ஒன்றாகும், இது செயிண்ட்-ரெமி-டி-புரோவென்ஸ்யில் உள்ள அவரது அடைக்கலத்தின் ஜன்னலில் இருந்து வான் கோக்கு முன் தோன்றிய கனவு நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானத்தை சித்தரிக்கிறது.
இதன் அசல் ஓவியம் நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது. டெல்லியின் கலை ஆர்வலர்கள் “வான் கோக் 360° ” என்ற தலைப்பில் நடந்து வரும் கண்காட்சியில் டச்சு போஸ்ட் இம்ப்ரெஷனிஸ்ட்டின் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றன. கலை ஆர்வலர்கள் இப்போது வான் கோவின் படைப்பின் பெரிதாக்கப்பட்ட பதிப்பிற்குள் நுழைய முடியும், பெரிய ப்ரொஜெக்டர்கள் ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான அனுபவத்தை உருவாக்குகின்றன.
சுவாரஸ்யமாக, தி ஸ்டாரி நைட் ஓவியத்தில் ரேடியன்ட் நிலவை ( Radiant moon) வரைவதற்கு வான் கோ பயன்படுத்திய மஞ்சள் இந்தியாவிலிருந்து பயணம் செய்தது. இந்தியன் ஏல்லோ (Indian Yellow) என்று பெயரிடப்பட்டது. இந்த வண்ணம் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதும் பிரபலமாக இருந்தது. மேலும் இந்தியாவில் அதன் உற்பத்தி தடை செய்யப்படுவதற்கு முன்பு அதைப் பயன்படுத்திய கடைசி தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக தி ஸ்டாரி நைட் கருதப்படுகிறது.
மாட்டு சிறுநீர் பயன்படுத்தி உற்பத்தி
இது ரேடியன்ட் மற்றும் ஆழமான ஆரஞ்சு-மஞ்சள் நிறத்திற்கு பெயர் பெற்றது, மேற்கில் உள்ள கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாக இந்திய மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தி வந்தாலும், அது எவ்வாறு தயாரானது என்ற மூலப்பொருட்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், அந்த நிறம் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சு எழுத்தாளர்-ஓவியர் JFL Mérimée, The Art of Painting in Oil and Fresco 1839-ல் கூறுகையில். வண்ணப் பொருள் ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அல்லது Memecylon tinctorium எனப்படும் ஒரு புதரில் இருந்து எடுக்கப்பட்டது என நம்பபட்டது. ஆனால் அதில் மாட்டின் சிறுநீர் வாசனை போன்று இருந்தது என்று கூறினார்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் தாவரவியலாளர் சர் ஜோசப் ஹூக்கர் இந்திய மஞ்சள் நிறத்தை உருவாக்கும் பொருட்களின் விவரங்களைக் கண்டறிய முயன்றார். இந்திய வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைக்கு அவர் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஹூக்கரின் கடிதத்திற்கு ஆசிரியர்-குருவேட்டர் மற்றும் பொது ஊழியரான டி.என் முகர்ஜி பதிலளித்தார்.
அவர் பதிலில் நான் மேற்வங்காளத்தின் மிர்சாபூருக்குப் பயணம் செய்தேன். அப்போது இந்த நிறம் பசுவின் சிறுநீரில் இருந்து வருவது தெரியவந்தது. அடர் மஞ்சள் நிற சிறுநீர் பெறுவதற்கு மா இலைகள், தண்ணீர், எப்போதாவது தண்ணீருடன் மஞ்சள் கலந்த நீர் மாட்டிற்கு கொடுக்கப்படுகிறது என்பதை கவனித்தார். சிறுநீரானது மண் பானைகளில் சேகரிக்கப்பட்டு, அதிக அமுக்கப்பட்ட திரவத்தை அடைவதற்கு இரவு முழுவதும் தீயில் வைக்கப்படும், பின்னர் அது வடிகட்டி மற்றும் வெப்பத்தில் உலர்த்தப்பட்ட வண்டல் பந்துகளில் கையால் அழுத்தப்படும். கொல்கத்தாவில் இருந்து கடற்பயணம் செய்யும் வணிகர்கள் மூலம் பியூரிஸ் ஐரோப்பாவை அடைந்தது என்று கூறினார்.
இந்தியா மற்றும் மேற்கு நாடுகளில் பயன்பாடு
இந்த நிறம் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் பீகாரின் பாரம்பரிய மிதிலா ஓவியங்கள் மற்றும் 16 முதல் 19 ஆம் நூற்றாண்டில் பஹாரி மற்றும் முகலாய சிறு உருவங்களில் இந்த நிறம் காணப்படுகிறது. கோரோகானா எனப்படும் மஞ்சள் நிறமி, பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்தியாவில் பல சடங்குகளுக்கும், நெற்றியில் வைக்கும் திலகமாகவும் பயன்படுத்தப்பட்டதாக
கூறப்படுகிறது.
மேற்கில், பல கலைஞர்கள் குறிப்பாக ஐரோப்பாவில் இது அதிகம் விரும்பபட்டது. புதிய வண்ணங்களை கொண்டு வர இந்த இந்தியன் மஞ்சள் நிறம் உடன் கலந்து பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 1700களின் முற்பகுதியில் இதன் பயன்பாடு முக்கியமாக இருந்தது.
ஜான் வெர்மீர் மற்றும் வான் கோக் போன்ற டச்சு ஓவியர்கள் அந்த நிறத்தின் ஒளிர்வுக்காக இதைப் பாராட்டினர் – இது தி ஸ்டாரி நைட்டில் அதன் பயன்பாட்டில் காணக்கூடிய ஒன்று.
நிறத்திற்கு தடை ஏன்?
இந்தியன் மஞ்சள் நிறம் தடை செய்யப்பட்டதற்கு உறுதியான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றாலும், அதை தயாரிக்க விலங்குகள் இன்னல்களுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. 1900களின் தொடக்கத்தில் இதன் உற்பத்தி தடை செய்யப்பட்டது. தண்ணீர் கொடுக்கப்படாததால் பசுக்கள் மிகவும் ஆரோக்கியமற்றதாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டன. முகர்ஜி ஹூக்கருக்கு அனுப்பபட்ட பதில் கடிதத்தில் இதை குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மாம்பழ இலைகளில் உருஷியோல் என்ற நச்சு உள்ளது என்று அறியப்படுகிறது, இது பசுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“