ஒவ்வொரு வாரமும் வணிகம் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரையை உதித் மிஸ்ரா எழுதி வருகிறார். திங்கள்கிழமை தோறும் இந்தப் பகுதியில் இதுபோன்ற கட்டுரைகளை நீங்கள் படிக்கலாம். வாருங்கள் இந்த வாரக் கட்டுரையைப் படிப்போம்.
கடந்த வாரம் நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின.
வேலையின்மை, பணவீக்கம் ஆகியவை நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மாநில தேர்தல் முடிவுகளும் மிக முக்கியமானவையாக கருதப்பட்டன.
ஐந்து மாநிலங்களில் நான்கில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை விட அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி வென்றது.
இதற்கு முன்பு பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது.
உத்தரப் பிரதேச தேர்தலை தான் ஒட்டுமொத்த நாடும் மிக உன்னிப்பாக கவனித்து வந்தது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலம் என்பதால் எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் அதிகரித்தது.
உத்தரப் பிரதேசத்தில் அல்லது ஏற்கனவே ஆட்சியில் இருந்த மாநிலங்களில் இரண்டில் பாஜக தோல்வி அடைந்திருந்தாலும் கூட அது நாடு முழுவதும் மிகப் பெரிய விவாதப் பொருள் ஆகி இருந்திருக்கும்.
இந்த வெற்றி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டது.
நான்கு மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்திருப்பதன் மூலம் பாஜகவுக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. பெரும்பாலான நாடுகளில், அரசியல் ஸ்திரத்தன்மையும் நிலைத்தன்மையும் நாட்டின் பொருளாதார வாய்ப்புகளை நிர்ணயிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் ஸ்திரத்தன்மை என்பது கொள்கை ஸ்திரத்தன்மையில் பிரதிபலிக்காது. இதுதான் இந்தியாவின் பொருளாதாரம் அடிக்கடி வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாகச் செல்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
பலவீனமான கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும் கூட பொருளாதாரத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இருப்பதற்கும் இதுதான் காரணம். தனிப்பெரும்பான்யுடன் திகழும் கட்சி வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்ததில்லை.
ஆனால், சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் அரசியல் நிலைத்தன்மை குறித்து கவலையைத் தீர்க்கும் வகையில் அமைந்தது. வட்டி விகிதங்கள் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் போன்ற பொதுவான பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டால், இந்தியா தொடர்ந்து பொருளாதார நிலையற்றத்தன்மையை எதிர்கொள்ள நேரிடும் என்றே தெரிகிறது.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு முந்தைய பொருளாதார வளர்ச்சியில் மூன்று வருடங்கள் (சார்ட் 1 ஐப் பார்க்கவும்) அதள பாதாள வீழ்ச்சியை அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் விலை உயர்வுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை இன்னும் பாதித்துள்ளன.

சார்ட் 2 இல் காட்டுவது போல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மிகப்பெரிய தனியார் நுகர்வு (PFCE), (நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% க்கும் அதிகமான கணக்கிடுகிறது) மீண்டு வருவதில் மெதுவாகத் தான் இருக்கிறது.

கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவல், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதோடு சேர்த்து இப்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா போன்ற உலக வல்லரசு நாடுகள் அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிசமாக அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இந்த மோதல் பல மாதங்களாக நீடித்தால், எண்ணெய் விலைகள் மேலும் உயரும் என்பது மட்டுமல்லாமல், நீண்ட காலம் அப்படியே இருக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் இடத்தை எரிபொருள் சந்தையில் வேறு எந்த நாட்டாலும் நிரப்ப இயலாது.
இந்தியா எந்தளவுக்கு பாதிப்பு?
இந்தியாவைப் பொறுத்தவரை தேவையை நிவர்த்தி செய்வதற்காக 84 சதவீதம் வரை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. சமீபத்தில் தேர்தல் வந்ததன் காரணமாக எரிபொருள் விலை உயராமல் இருந்தது.
சோனல் வர்மாவின் (நோமுரா ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைப் பொருளாதார நிபுணர்) ஆய்வு படி, சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ.25 மற்றும் ரூ.35 ஆக உயரும். மேலும் ஒரு சிலிண்டர் எரிவாயு விலை சுமார் ரூ.400 ஆக இருக்கும்.
இதையும் படியுங்கள்: ரூ.1.5 லட்சம் வரி விலக்கு கிடைக்கும் PPF சேமிப்பு; முதலீட்டை இரட்டிப்பாக்க சூப்பர் ஐடியா
எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டால் நேற்று வரை கார் வாங்க வேண்டும் என்று கனவு கண்டவர்கள் இனி வாங்கவே நினைக்க மாட்டார்கள். புதிய கார்களுக்கான தேவை குறைந்துவிடும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சமையல் எண்ணெய் விலையும் கணிசமாக உயரும்.
அதேபோல், நிலக்கரி விலையும் உயர்ந்து, மின்சார கட்டணம் அதிகரிக்கும். இயற்கை எரிவாயுவின் விலையும் உயரும். உரங்களின் விலைகளும் அதிகரிக்கும்.
இந்தியப் பொருளாதாரத்தில் மறைமுகத் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் பகுதி நேர உறுப்பினர் நீல்காந்த் மிஸ்ரா ஒரு ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
Written by Udit Misra
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil