Advertisment

சில்லறை வணிகத்தில் மாற்றம் கொண்டு வந்த பார்கோடு

பல ஆண்டுகளாக பார்கோடு, சில்லறை வணிகத் தொழில் துறையின் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பார்கோடுகள், நூற்றுக்கணக்கான, ஆயிரகணக்கான பொருட்களின் மீது பொருட்களை கண்டுபிடிப்பதற்காக குறியிடப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
barcode, barcode history george laurer barcode, retail shopping barcode use

barcode, barcode history george laurer barcode, retail shopping barcode use

சினேகா சஹா 

Advertisment

பார்கோடு அடிப்படை :

நார்மன் ஜோசப் உட்லேண்ட் என்பவர்தான் பார்கோடு முறையை கொண்டு வருவதற்கு மூலகாரணமாக இருந்தவர். ஜார்ஜ் லாரர் என்பவரின் யோசனையை அவர் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

பார்கோடு என்ற கருத்தாக்கத்தை முன் வைத்த ஜார்ஜ் லா ரர் பொறியியல் அறிவியல் அறிஞர். இவர் தமது 94 வது வயதில் வடக்கு கரோலினாவில் உள்ள வென்டெல் பகுதியில் கடந்த 10ம் தேதி காலமானார். 1973-ம் ஆண்டு இவர் சொன்ன யோசனையின் பேரில் கண்டுபிடிக்கப்பட்ட பார்கொடு, வணிக நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பார்கோடுக்கு முன்பு

இன்றைக்கு, கடைகளில் அல்லது மால்களில் பொருட்களை வாங்குவோர், ஒரு பொருளை எடுத்துச் சென்று பொருளில் ஒட்டப்பட்டிருக்கும் பார்கோடை ஸ்கேன் செய்து பில் போட்டு உடனடியாகப் பணம் செலுத்துகின்றனர். இந்த பார்கோடு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு பொருளின் மீதும் பொருளின் விலையை லேபிளில் ஒட்டுவதற்கு பணியாளர்களை நியமிப்பார்கள். சிக்கலான இந்த நடைமுறை குறித்து 2010-ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறிய லா ர ர் “1970-களில் உயரும் விலை ஏற்றம், அனைத்துப் பொருட்களின் மீது விலைகளை எழுதி ஒட்டுவதற்கு ஊழியர்கள் சார்ந்த அதிக தேவைகள் மள்ளிகைக் கடைகளுக்கு இருந்தன.” என்றார். அப்போதுதான் லார ர், நார்மன் ஜோசப் உடன் இணைந்து பார்கோடு முறையைக் கண்டுபிடித்தார். ஜோசப் கடந்த 2012-ம் ஆண்டு இறந்து விட்டார்.

எப்படி இந்த யோசனை நடைமுறை வடிவத்துக்கு வந்தது?

நார்மன் ஜோசப் உட்லேண்ட் என்பவர்தான் பார்கோடு முறையை கொண்டு வருவதற்கு மூலகாரணமாக இருந்தவர். ஜார்ஜ் லாரர் என்பவரின் யோசனையை அவர் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். 1950-களில் ஒரு மெஷினால் ஸ்கேன் செய்யப்படக் கூடிய கோடு ஒன்றையும், அந்த கோடு பொருட்கள் மற்றும் பொருட்களின் விலையை கொண்ட கோட் ஆக, புல்ஸ் ஐ பார்கோடு என்ற பெயரில் பார்கோடு குறியீடு அடிப்படையில் ஒரு முறையை உருவாக்குவது என்று உட்லேண்ட் சிந்தித்தார். ஆரம்ப கட்டத்தில், புள்ளிகள், கோடுகளால் வரையறுக்கப்பட்ட தொலைத்தொடர்பு நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மோர்ஸ் கோட் என்ற எழுத்துக் குறியீட்டு முறையில் உட்லேண்ட் ஈர்க்கப்பட்டார்.

உட்லேண்டின் யோசனை பார்ப்பதற்கு நடைமுறைக்கு ஏற்றது போல இருந்தது. ஆனால், லேசர் மற்றும் கம்யூட்டர் தொழில்நுட்பம் ஆகியவை 1950-களில் மிகவும் அதிகமாக இருந்ததால் இதை அவரால் மேற்கொண்டு முன்னெடுக்க முடியவில்லை. இருபது ஆண்டுகள் கடந்து 1970-களில் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லாரர் , உட்லேண்ட்டின் யோசனையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். குறைந்த விலை லேசர், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் அதை அவர் சாத்தியப்படுத்தினார்.

லார ர், இப்போது பெரும்பாலான பார்கோடுகளில் நாம் பார்க்கும் ஒரு செவ்வக அமைப்பை கண்டுபிடித்தார். புல்ஸ் ஐ என்பதை விட இது எளிதாக இருந்தது. புல்ஸ் ஐ-யில் தொடர்ச்சியான செறிவான வட்டங்கள் பார்ப்பதற்கு சிக்கலாக இருந்தன. அதே போல, அவர் ஸ்டிரிப்கள் கொண்ட ஒரு ஸ்கேனரை முன்னெடுத்தார். முதன்முதலாக, ரிங்க்லி ஜூஸி ப்ரூட் சூயிங்கம் கொண்ட ஒரு பேக் பார்கோடு ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இப்போது எப்படி இருக்கிறது?

பல ஆண்டுகளாக பார்கோடு, சில்லறை வணிகத் தொழில் துறையின் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பார்கோடுகள், நூற்றுக்கணக்கான, ஆயிரகணக்கான பொருட்களின் மீது பொருட்களை கண்டுபிடிப்பதற்காக குறியிடப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு பில் போடப்படுகிறது. எளிதாக பொருட்களை வாங்கிச் செல்ல முடிகிறது. எப்போதாவது ஒரு முறைதான் தவறுகள் ஏற்படுகின்றன. சில்லறை வணிகள் தங்கள் கடையில் எளிதாக கணக்குகளை பராமரிக்க முடிகிறது.

சில்லறை வணிகத்தில் அதிகார சமநிலையையும் பார்கோடு மாற்றி இருக்கிறது. ஒரு சிறிய , குடும்பத்தால் நடத்தப்படும் கடையில் பார்கோடு ஸ்கேனர் என்பது இல்லாத பிரச்னைக்கு அதிக செலவு பிடித்த தீர்வாக இருந்தது. பிபிசி உலக செய்திகள் இது குறித்து 2017-ம் ஆண்டு கட்டுரையில் விவரித்துள்ளது. ஆனால், பெரிய சூப்பர் மார்க்கெட்களில் ஸ்கேனர்களின் செலவை, பல்வேறு பொருட்களின் விற்பனையில் பரவலாக்கம் செய்து விடுகின்றனர். வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கும் நேரம் குறை்ந்ததை மதிப்பிட்டனர். சரக்குகளை கண்காணிக்கவும் தேவை இருந்தது.

பார்கோடு முறை 1970-80-களில் பரந்து விரிந்தது. பெரிய சில்லறை வணிகர்கள் அதை நடைமுறைப்படுத்தினர். வாஷிங்டன் டி.சி-யில் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் நடந்த பார்கோடு கண்டுபிடிக்கப்பட்டு 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது , வாரல் டி.வி பேட்டியில் லாரர் பேசியபோது, சொந்த கண்டுபிடிப்பு குறித்து பிரமிப்பை தெரிவித்தார். “ஸ்கேனர்களில் வைத்து கடையின் கிளர்க்குகள் பொருட்களை ஸ்கேன் செய்து கொண்டிருந்தபோது, இது நன்றாக வேலை செய்ய முடியாது என்று எனக்குள் நான் நினைத்துக் கொண்டேன், என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment