கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்ட கேரளா, கர்நாடகா: விரிவான அலசல்

கேரளாவின், இறப்பு விகித சராசரி தற்போது 0.37 சதவீதமாக உள்ளது.

By: Updated: October 8, 2020, 08:18:17 PM

நேற்று, ஒரே நாளில் கேரளா, கர்நாடகா மாநிலங்கள் 10,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்தன. இருப்பினும், தேசிய மட்டத்தில் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 78,524 என்ற அளவில் காணப்பட்டது.  முந்தைய சந்தர்பங்களில், கர்நாடாகாவில் 3 முறை மட்டுமே 10,000 க்கும் அதிகமான தினசரி பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனா பெருந்தொற்றின் உச்ச பாதிப்பை சந்தித்து வரும் கேரளாவில், 10,000 க்கும் அதிகமான தினசரி பாதிப்பு முதன்முறையாக காணப்படுகிறது.

செப்டம்பர் மாதம் வரை, கேரளாவின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு 2,500 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு, பாதிப்பு எண்ணிக்கை விஸ்வரூபம்  எடுத்தது. கடந்த மூன்று வாரங்களாக, அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 7,000  என்ற வரம்பில் இருந்தன.

 

கேரளாவில், கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட விகிதம் (positivity rate) , படிப்படியாக அதிகரித்து வருகிறது.  செப்டம்பர் மாத தொடக்கத்தில், 4.5 சதவீதமாக இருந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம்  தற்போது 7.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

சமூகத்தில் ஒரு கொரோனா  பாதிப்பை உறுதி செய்ய எத்தனை மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்பதை பொருத்து இந்த விகிதம் அமைகிறது.  மக்கள் தொகையில் வேகமாகப் பரவி வருவதை இந்த விகிதம் அதிகரிப்பு காட்டுகிறது.

இந்த, மாத இறுதி வரை பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கும் அரசு உத்தரவை இந்த மாதம் தொடக்கத்தில் அம்மாநில அரசு பிரபித்திருந்தது.

அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு நிகழ்விற்கு தினசரி 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று வழிமுறையையும் அம்மாநில அரசு வெளியிட்டது.    மாநிலத்தில், தற்போது 2 இரண்டு அமைச்சர்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட  அமைச்சர்களின் எண்ணிக்கை அங்கு 5- ஆக அதிகரித்துள்ளது.

குறைவாக இருந்த இறப்புக்களின் எண்ணிக்கையில் சிறிய அளவு உயர்வு  காணப்படுகிறது. கடந்த, இரண்டு வாரங்களுக்கும் மேலாக, தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை  20-ஐத் தாண்டி வருகிறது.

கேரளாவின், இறப்பு விகித சராசரி தற்போது 0.37 சதவீதமாக உள்ளது.  பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், கேரளாவின் இறப்பு விகித சராசரி மேலும் குறையக் கூடும்.  தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 940 ஆகும். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 10,052 ஆக அதிகரித்துள்ளது.

 

கேரளாவில், 92,000க்கும் அதிகமானோர் கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிகையில்  மகாராஷ்டிரா , கர்நாடகா  ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கேரளா உள்ளது.  தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,437 ஆகும்.

கேரளா அளவிற்கு இல்லாவிட்டாலும்,  கொரோனா பரவலின் வேகமான வளர்ச்சியை  கர்நாடகா அனுபவித்து வருகிறது. மாநிலத்தின் கோவிட்- 19 பாதிப்பு எண்ணிக்கை தற்போது தமிழகத்தை தாண்டியது.

14 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளோடு மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், 7 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளோடு  ஆந்திரா உள்ளது. நாட்டில்,  கொரோனாவால் அதிகம்  பாதிக்கப்பட்ட மூன்றாவது மாநிலாமாக கர்நாடகா விளங்குகிறது.  அதன், கொரோனா தொற்று  பாதிப்பு விகித சராசரி தற்போது 1.5 சதவீதமாக உள்ளது.  கேரளாவில், இந்த சராசரி விகிதம் சுமார் 3.75 ஆக உள்ளது.

ஆனால் கர்நாடகாவில் இன்னும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன, 9,500 க்கும் அதிகமானோர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக உள்ளனர். இதன் வழக்கு இறப்பு விகிதம் 1.4 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், தேசிய மட்டத்தில்  83,011 பேர் குணமடைந்த நிலையில், 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,27,704-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 49 லட்சத்தை (49,25,279) கடந்துவிட்டது.  குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் வீதம் 85.25%-மாக உள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. இதில்,    நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 18 நாட்களாக 90, 000 என்ற இமாலய எண்ணிக்கையை இந்தியா தொடமால் உள்ளது.

நாட்டில் இதுவரை, 68.35 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டனர். மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 1.05 லட்சத்தை தாண்டியுள்ளது.

மற்றொரு சாதனையாக 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பரிசோதனைகள் செய்யப்படுவதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவித்தது. நாள் ஒன்றுக்கு, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கான பரிசோதனையின் தேசிய சராசரி 865 ஆக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறt.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:India covid 19 data tracker corona virus october 8 news updates coronavirus numbers explained

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X