Advertisment

இந்தியாவை களங்கப்படுத்த பாகிஸ்தான் முயற்சி: ஐ.நா.வில் நடந்தது என்ன?

India pakistan relations : எந்தவொரு உறுப்பு நாடுகளும் ஒரு தனிநபர், குழு அல்லது நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்கலாம்.

author-image
WebDesk
New Update
India, United nations security council, pakistan unsc, india pakistan relations, kulbhushan jadhav, pakistan un, indian express

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியர்கள் 4 பேரை சேர்க்கும் பாகிஸ்தானின் முடிவை, சர்வதேச பயங்கரவாத காரணத்தை காட்டி, கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளிட்டவைகள் தடுத்து நிறுத்தியுள்ளன.

Advertisment

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி எஸ் திருமூர்த்தி, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பயங்கரவாதத்திற்கு ஒரு மத நிறத்தை அளிப்பதன் மூலம் 1267 சிறப்பு நடைமுறைகளை அரசியலாக்குவதற்கான பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஐ.நா.பாதுகாப்புக் குழுவால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அணுகுமுறையை, துவக்கத்திலேயே தடுத்து நிறுத்திய கவுன்சில் உறுப்பினர்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

யு.என்.எஸ்.சியின் 1267 பொருளாதாரத் தடைகள் துணைக்குழு முன் இந்த விஷயம் எவ்வாறு வந்தது?

2019ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நல்லுறவு, புலவாமா தீவிரவாத தாக்குதல், பாலாகோட் விமானப்படை தாக்குதல் அதன்பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள், ஜெய்ஷே முகமது இயக்க நிறுவனர் முகமது அசார் விவகாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மட்டுமல்லாது, அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது உள்ளிட்ட காரணங்களினால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தடைவிதித்து வந்தது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானும் இருந்துவந்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு மேலும் இடம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக, பாகிஸ்தான் இத்தகைய தடுப்பு முயற்சி மேற்கொள்வது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 3 முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் 24ம் தேதி பாகிஸ்தான் எழுப்பிய கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. 1267 அறிக்கையின்படி, இந்த கவுன்சிலில் இருந்து 4 இந்தியர்களில் ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்தது. பின் ஜூலை 16ம் தேதி மீண்டும் அதே கோரிக்கையை பாகிஸ்தான் விடுத்தது.

இந்த இந்தியர்களை ஐ.நா. அனுமதி பெற பாகிஸ்தான் ஏன் விரும்பியது?

1267 கமிட்டி, 1999ம் ஆண்டில் முதன்முதலாக துவங்கப்பட்டது. 2001ம் ஆண்டின் செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் மாதங்கள் மற்றும் தொடர்ச்சியான தீர்மானங்களால் பலப்படுத்தப்பட்டது. இந்த கமிட்டிக்கு அல் குவைதா தடைகள் குழு என்றும் அழைக்கப்படுகிறது.

 

publive-image

பாகிஸ்தான், தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது இதற்கு ஆப்கானிஸ்தான் ஆதரவாக உள்ள இந்தியாவின் குற்றச்சாட்டை, இஸ்லாமபாத் தொடர்ந்து மறுத்து வந்தது. 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக உளவு பார்த்ததாக இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷன் யாதவை, பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தை நாடிய இந்தியா, குல்பூஷன் யாதவ் நிரபராதி என்று நிரூபித்ததையடுத்து, சட்டப்போராட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

சர்வதேச அளவிலான 1267 தீவிரவாதிகள் பட்டியலை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், சில இந்தியர்களது பெயர்களையும் சேர்க்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் குறிப்பிடும் அந்த 4 இந்தியர்கள் யார்?

செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தான் தெரிவித்துள்ள கோரிக்கையில், அப்பாஜி அங்காரா, மற்றும் கோபிந்தா பட்நாய்க் வாலாசாவை இணைக்க வலியுறுத்தியுள்ளது.

டுக்கிவாசலா, ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஐடி கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2019ம் ஆண்டில் அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார். அதற்கு முன்னதாகவே, அவரை தீவிரவாதிகள் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி வருகிறது.

பலுசிஸ்தானில் மஸ்துங்கில் நடந்த தேர்தல் பேரணியில் ஜூலை 2018 குண்டுவெடிப்புத் தாக்குதலில் டுக்கிவாலாசாவின் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது, இதில் பாகிஸ்தான் சார்பு இராணுவ பலுசிஸ்தான் அவாமி கட்சியின் வேட்பாளர் சிராஜ் ரைசானி உட்பட 148 பேர் கொல்லப்பட்டனர். . பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மஸ்துங், லஷ்கர்-இ-ஜாங்வியின் மையமாக உள்ளது, இந்த பகுதி 2017ம் ஆண்டுவரை ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பாஜி அங்காராவும் சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவார். இவர் 2019ம் ஆண்டு அக்டோபரில் காபூலில் இருந்து வெளியேறினார். . அதற்கு முன்னதாகவே, அவரை தீவிரவாதிகள் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி வருகிறது.

பெஷாவரில் 2014 ஆம் ஆண்டு இராணுவ பள்ளி தாக்குதல் சம்பவத்தில் அங்காரா சம்பந்தப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது, இதில் 150 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2016ம் ஆண்டில் பெஷாவரின் வர்சாக் பகுதியில் உள்ள கிறிஸ்தவ காலனியில் நிகழ்ந்த தாக்குதலுக்கும் அங்காராவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

வேணுமாதவ் டோங்கரா, ஆப்கானிஸ்தானில் இஞ்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் அமெரிக்கா செல்ல நேர்ந்தபோது பாகிஸ்தானின் வற்புறுத்தலால் தடுத்து நிறுத்தப்பட்டார். 2015ம் ஆண்டில் படாபர் விமானபடை தளத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு வெடிபொருட்கள் உள்ளிட்டவைகளை சப்ளை செய்ததாக 2019ம் ஆண்டில் பெஷாவரில் இவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 2019ம் ஆண்டில் டோங்கரா வெளியேறியிருந்த நிலையில், கடத்தப்பட்டு விடுவார் என்ற எச்சரிக்கையின் பேரில் அவர் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தார்.

அஜோய் மிஸ்திரி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையில் பணியாற்றினார். இவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. 2019ம் ஆண்டில் அவர் இந்தியா திரும்பியிருந்தார்.

யு.என்.எஸ்.சி 1267 இன் கீழ் மக்கள் பட்டியலிடப்பட்ட செயல்முறை என்ன?

எந்தவொரு உறுப்பு நாடுகளும் ஒரு தனிநபர், குழு அல்லது நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்கலாம். யு.என்.எஸ்.சியின் அனைத்து நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களைக் கொண்ட 1267 குழு, நான்கு வேலை நாட்களின் அறிவிப்புடன் தேவைப்படுகிறது. பட்டியல் மற்றும் டி-லிஸ்டிங் தொடர்பான முடிவுகள் ஒருமித்த கருத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பட்டியலிடுவதற்கான எந்தவொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். முன்மொழியப்பட்ட தனிநபர் / குழு / நிறுவனம் “ஐ.எஸ்.ஐ.எல் (டாஷ்), அல்-கைதா அல்லது ஏதேனும் இணைக்கப்பட்ட“ நிதி அல்லது திட்டமிடல், வசதி, செயல்கள் அல்லது செயல்களைச் செய்வதில் ”பங்கேற்றதைக் குறிக்கும் செயல்கள் அல்லது செயல்பாடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

குழுவின் வழிகாட்டுதலின் கீழ், “முன்மொழியப்பட்ட பட்டியலை ஆதரிக்கும் விரிவான அறிக்கை” குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் துணை ஆதாரங்கள் உட்பட “அடிப்படையில் (கள்) அல்லது பட்டியலுக்கான நியாயப்படுத்தலின் அடிப்படையில் முடிந்தவரை விவரங்களை வழங்க வேண்டும்.

இந்த திட்டம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படுகிறது, மேலும் ஐந்து வேலை நாட்களுக்குள் எந்த உறுப்பினரும் எதிர்க்கவில்லை என்றால், அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

குழுவின் எந்தவொரு உறுப்பினரும் இந்த திட்டத்திற்கு "Technical hold" வைக்கலாம், மேலும் முன்மொழியப்பட்ட உறுப்பு நாடுகளிடமிருந்து கூடுதல் தகவல்களைக் கேட்கலாம். இந்த நேரத்தில், மற்ற உறுப்பினர்களும் தங்கள் சொந்த இருப்புக்களை வைக்கலாம்.

குழுவின் "நிலுவையில் உள்ள" பட்டியலில் இந்த விவகாரம் உள்ளது, அது வைத்திருக்கும் உறுப்பு நாடு அதன் முடிவை "ஆட்சேபணை" ஆக மாற்ற முடிவு செய்யும் வரை, அல்லது வைத்திருக்கும் அனைவருமே ஒரு காலக்கெடுவிற்குள் அவற்றை அகற்றும் வரை குழுவால் நிர்வகிக்கப்படும்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகள் ஆறு மாதங்களில் தீர்க்கப்பட வேண்டும், ஆனால் technical holdல் வைத்திருக்கும் உறுப்பு நாடு கூடுதலாக மூன்று மாதங்கள் கேட்கலாம். இந்த காலகட்டத்தின் முடிவில், ஒரு ஆட்சேபனை வைக்கப்படவில்லை என்றால், விஷயம் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு வேணுமாதவ் டோங்கராவின் முன்மொழியப்பட்ட பட்டியலில் technical hold இருந்தது, இந்த ஆண்டு அமெரிக்கா ஆட்சேபித்தது, இந்த திட்டத்தை திறம்பட தடுத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகியவற்றின் ஆட்சேபனை காரணமாக ஜூலை மாதம் தடுக்கப்பட்ட அஜோய் மிஸ்திரி பற்றிய முன்மொழிவிலும் technical hold இருந்தன. இதே நாடுகள் டுக்கிவசாலா மற்றும் அப்பாஜி ஆகியோரின் உத்தேச பட்டியலில் technical hold வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் இந்த நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Explained: Failed Pakistan bid to taint India at UN Security Council

India Pakistan United Nations
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment