Advertisment

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் : மோடி பிம்பத்தை வைத்து நடக்கும் அரசியல் மாநில தேர்தல்களில் தோற்பது ஏன்?

ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜெ.எம்.எம் கட்சியோ ஜார்கண்ட் மாநில பிரச்சனைகளுக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jharkhand election results BJP campaign

Jharkhand election results BJP campaign

Jharkhand election results BJP campaign : மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியாணா மாநில தேர்தல்களுக்கு பிறகு ஜார்கண்ட் மாநில தேர்தலிலும் தோல்வி முகம் காட்டி வருகிறது. நான்கு மணி 50 நிமிடம் வரை, ஜெ.எம்.எம் - காங்கிரஸ் - ஆர்.ஜி.டி கட்சிகளின் கூட்டணி தற்போது 46 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது. 81 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஜார்கண்ட் மாநில களம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பாஜக 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்க, ஜெ.எம்.எம் கட்சியோ 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்திற்கு மாநில தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை மட்டுமே இருக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது. பாஜக நாடு முழுவதும் ராமர் கோவில், சட்டப்பிரிவு 370, மற்றும் புதிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. மகாராஷ்ட்ராவில் சொல்லப்பட்ட அதே அறிக்கைகளை மீண்டும் இங்கு பயன்படுத்தியது.

ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜெ.எம்.எம் கட்சியோ ஜார்கண்ட் மாநில பிரச்சனைகளுக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்தது. மேலும் முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் எம்.எல்.ஏக்களின் மீதும் அவர்கள் அதிருப்தியை கொண்டிருந்தனர். இந்த நிலை குறித்தும் மக்கள் இந்த அரசின் மீது கொண்டிருக்கும் அதிருப்தியையும் பாஜக நன்கு உணர்ந்ததாகவே கூறுகிறது. இருப்பினும் பாஜக பழங்குடியினர் அதிகம் இல்லாத மக்கள் நிறைந்த தொகுதிகளில் தங்களின் கவனத்தை அதிகம் செலுத்தியது.

இந்த மாநிலம் பலமுறை கூட்டு வன்முறையை நேரில் பார்த்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் இந்த காரணத்தை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தியுள்ளது பாஜக. ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் பயணம் செய்தால் மோடி அரசு இங்கு எவ்வாறாக வேரூன்றி உள்ளது என்பதை ஒருவரால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் மாநில தேர்தல் என்று வரும் போது நிலைமை எல்லாம் தலை கீழ் தான்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

துணை ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை அடக்கிய விதம், ஜார்கண்ட் பொது சேவை ஆணையம் மற்றும் ஜார்கண்ட் பணியாளர்கள் தேர்வு ஆணையம் சமீபத்தில் ஏற்படுத்திக் கொடுத்த மிகவும் குறைவான வேலை வாய்ப்புகள் போன்ற காரணங்களால் முதல்வர் தாஸ் மீது மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.

இதற்கு முன்பு போல் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிடும் முடிவினை அறிவித்தது பாஜக. மேலும் ஏ.ஜெ.எஸ்.யூ கேட்ட 18 இடங்களையும் தர மறுத்துவிட்ட காரணங்களால் அக்கட்சியின் வாக்கு வங்கி சிதற துவங்கியது. முதலில் ஹரியானா தற்போது ஜார்கண்ட். இவ்விரு மாநில முதல்வர்களும் இக்கட்சியின் மதிப்பை மக்கள் மத்தியில் கீழே கொண்டு சென்றுவிட்டனர். அதன் தீர்ப்பின் செய்தி காங்கிரஸ் கட்சியை சென்று சேர்ந்திருக்கும்.

இன்று காலை முதல் பிற்பகல் வரையில் இந்தியாவின் மிகப்பெரிய கட்சி பாஜக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த கொண்டாட்டம் ஜெ.எம்.எம்-ஐ விட குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததை அறியும் வரையில் தான்.

ஹரியானா மற்றும் மகராஷ்ட்ரா மாநிலத்தை போன்றே இங்கும் சக்தி மிகுந்த கட்சியாக தன்னை முன்னிறுத்த முயற்சி செய்கிறது. ஜெ.எம்.எம். மற்றும் ஆர்.ஜே.டி போன்ற கட்சிகளுடன் இணைந்து பாஜகவை தோல்வி அடைய வைக்கவே காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் இந்த கூட்டணி பாஜகவுக்கு மாற்று சக்தியாக இன்னும் பலரால் பார்க்கப்படவில்லை என்பது தான் உண்மை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment