Advertisment

காலி மைதானத்தில் ஐபிஎல் போட்டியா? லாக்டவுன் 4.0 உத்தரவு என்ன சொல்கிறது?

விளையாட்டு வளாகங்கள் மற்றும் மைதானங்கள் திறக்க அனுமதிக்கப்படும்; இருப்பினும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்," என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் 2020, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள், ipl 2020, t20 world cup 2020, sports news, cricket news

உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட வழிகாட்டுதல்களில், பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்கத்தை மீண்டும் திறக்கலாம் என்று தெரிவித்தது. இதன்மூலம், காலியான மைதானத்தில் 2020 ஐபிஎல்  தொடர் போட்டிகள் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகுகிறதா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Advertisment

விளையாட்டு மைதானங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் என்ன கூறுகிறது ?

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள முடக்கநிலை காலம் 2020 மே 31 தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக நேற்று உள்துறை அமைச்சகம் உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இது குறித்த வழிகாட்டுதல்களில், "விளையாட்டு வளாகங்கள் மற்றும் மைதானங்கள் திறக்க அனுமதிக்கப்படும்; இருப்பினும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்," என்று கூறப்பட்டது.

காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இது வழி வகுக்கிறதா?

இல்லை. உள்நாட்டு/சர்வதேச விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் இருக்கும் வரை, இந்த ஆண்டின் ஐபிஎல் நடத்துவது குறித்து எந்த திட்டமும் செய்ய முடியாது. பிசிசிஐ பொருளாளர் அருண் துமல், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம்," ஐபிஎல் போட்டிகள்  தற்போது சாத்தியமில்லை, ஏனெனில் விமானம், ரயில் மற்றும் சாலை வழிப் பயணங்களுக்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. எந்தவொரு பயணமும் இல்லாமல் ஐபிஎல் எப்படி நடைபெறும்? இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் படித்து வருகிறோம், மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களையும் படிப்போம். அதன்படி நாங்கள் திட்டமிடுவோம், ”என்று தெரிவித்தார்.

ஐபிஎல் ஒழுங்கமைக்க பயணக் கட்டுப்பாடுகள் ஏன் தடையாக இருக்கின்றன?

சர்வதேச பயணங்களுக்கு தடை இருப்பதால், வெளிநாட்டு வீரர்கள் வந்து அந்தந்த உரிமையாளர்களுடன் சேர முடியாது. ஒருவேளை, உள்நாட்டு வழி பயணங்களுக்கான  தடை அடுத்த மாதம் நீக்கப்பட்டாலும், தாங்கள் ஒப்பந்தம் செய்த வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல்  ஐபிஎல் உரிமையாளர்கள் போட்டியை விளையாடுவதற்கு உடன்பட மாட்டார்கள். உதாரணமாக, வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் அணி முழுமையடையாது, மொத்த சமநிலையும் வீணாக போகக்கூடும் என்று ஐபிஎல் அணியின் தலைமை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

விளையாட்டு மைதானத்தை மீண்டும் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வெளிப்புற பயிற்சி வளாங்களில் கிரிக்கெட் வீரர்கள் தனித்தனியாக தங்கள் பயிற்சியை மீண்டும் தொடங்கப்படும். மாநில சங்கங்களுடன் பி.சி.சி.ஐ இணைந்து, இது இதுகுறித்த நெறிமுறைகளை தயாரித்து வருகிறது.

“உள்ளூர் மட்டத்தில், கிரிக்கெட் வீரர்கள் வெளிப்புறப் பயிற்சியை மீண்டும் தொடங்கலாம். ஆனால், முழு அணியும் ஒன்றிணைய முடியாது. பயணம் அனுமதிக்கப்படும் வரை, அவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க முடியாது. வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்குவதற்கு சாத்தியக் கூறுகள் குறித்து மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் சேர்ந்து திட்டத்தை நாங்கள் வகுப்போம்,”என்று துமல் கூறினார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

திறன் அடிப்படையிலான பயிற்சி முகாமிற்கு தற்போது ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?

ஜூன் மாதத்திற்கு முன் இந்த வகை முகாமிற்கு சாத்தியமில்லை. "மே 31 வரை விமான வழிப்  பயணம் மற்றும் பொது முடக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒப்பந்த வீரர்களுக்கான பயிற்சி முகாம்  தொடங்குவதற்கு சிறிது காலம் தேவைப்படும் " என்று பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு  ஐபிஎல் குறித்து பிசிசிஐ எப்போது திட்டமிடத் தொடங்கும்?

வாரிய வட்டாரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் ஐபிஎல் போட்டிகள் குறித்த எந்தவொரு முறையான கலந்துரையாடலையும் பி.சிசி.ஐ தொடங்கும்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டால் ? 

சொல்வது மிக எளிது, ஆனால் நடப்பது சாத்தியமற்றது. டி-20 உலகக் கோப்பை சர்வதேச அமைப்பான ஐ.சி.சி-ஆல்  நடத்தப்படுகிறது . இந்த ஐ.சி.சி அமைப்புக்கு வருவாய் ஈட்டும் நிகழ்வு.  எனவே, அட்டவணையின்படி போட்டிகளை ஒழுங்கமைக்க சிறந்த முறையில் ஐ.சி.சி நடத்தும் " என்று பிசிசிஐ செயல்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டியை நிறுத்துவதில் பி.சி.சி.ஐ விடாப்படியாக உள்ளதா?

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பலரும்  காலியான இருக்கைகள் முன் இந்த ஆண்டு போட்டியை நடத்த விருப்பம் தெரிவிக்கின்றனர். ஊடக  ஒளிபரப்பாளரான ஸ்டார் நிறுவனமும் தனது சம்மதத்தை பதிவு செய்தது . பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐ.பி.எல் நடக்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் ரூ .4,000 கோடி இழப்பு ஏற்படும் என்று சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இருப்பினும், தனது விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்பதை பிசிசிஐ வலியுறுத்துகிறது. கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை" என்று அருண் துமல் தெரிவித்தார்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment