Advertisment

சந்திர நிலநடுக்கம், உறைந்த நீர்: சந்திரயான் 3 மேற்கொள்ளும் சோதனைகள் என்ன?

லேண்டர் மற்றும் ரோவர் முந்தைய பணிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆய்வுகளையும் செய்யும்.

author-image
WebDesk
New Update
Chandrayaan-3 Mission

Chandrayaan-3 Mission

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் நேற்று மாலை (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. லேண்டர் தரையிறங்கிய போது ஏற்பட்ட புழுதி படலம் அடங்கியப் பின் பிரக்யான் ரோவர் இரவு 11 மணிக்கு மேல் வெளிவந்தது.

Advertisment

6 சக்கரங்கள், 26-கிலோ எடை கொண்ட ரோவர், மெதுவாக 500 மீட்டர் வரை நகரும் திறன் கொண்டது. ரோவர் நிலவின் மேற்பரப்பில் சுற்றி ஆய்வு செய்யும். லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள ஆறு பேலோடுகள் ஒரு சந்திர நாள் அல்லது 14 நாட்கள் ஆய்வு செய்யும். லேண்டர், ரோவர் நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து தரவைகளை சேகரித்து அனுப்பும்.

சந்திரயான்-3 பேலோடுகள் சந்திர நிலநடுக்கங்கள், கனிம கலவைகள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் உள்ள எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகள் (ions) ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம் முந்தைய நிலவு திட்டங்களின் கற்றலை விரிவுபடுத்தும். சந்திரயான்-1 மூலம் கண்டறியப்பட்ட உறைந்த நீர் பற்றிய ஆய்வையும் இந்த திட்டம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

லேண்டர் மேற்கொள்ளும் 4 சோதனைகள்

  1. ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர் (RAMBHA) சந்திரனின் மேற்பரப்புக்கு அருகிலுள்ள எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகள் மற்றும் அவை காலப்போக்கில் எவ்வாறு மாறுகின்றன என்பதை ஆய்வு செய்யும்.
  2. சந்திராஸ் சர்வேஸ் தெர்மோ பிசிக்கல் சோதனை (ChaSTE) துருவப் பகுதிக்கு அருகிலுள்ள சந்திர மேற்பரப்பின் வெப்ப பண்புகளை ஆய்வு செய்யும். சந்திரயான்-3 விண்கலம் 70 டிகிரி தெற்கு அட்சரேகையில் தரையிறங்கியுள்ளது. தென் துருவத்தில் இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் செல்லாத இடத்திற்கு சென்றுள்ளது.
  3. சந்திர நில அதிர்வு செயல்பாட்டிற்கான கருவி (ILSA) தரையிறங்கும் இடத்திற்கு அருகிலுள்ள நில நடுக்கங்களை அளவிடும் மற்றும் சந்திரனின் கிரஸ்ட், மேன்டில் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
  4. லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே (எல்ஆர்ஏ) என்பது நாசாவால் அனுப்பப்பட்ட ஃபேசிவ் சோதனையாகும். இது எதிர்கால பணிகளுக்கான மிகத் துல்லியமான அளவீடுகளுக்கு லேசர்களுக்கு இலக்காக செயல்படுகிறது.
சந்திரயான்-3 லேண்டர் தரையிறக்கம்

2 அறிவியல் சோதனைகள் செய்யும் ரோவர்

லேசர் உள்ளடக்கிய பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) சந்திர மேற்பரப்பின் இரசாயன மற்றும் கனிம கலவையை ஆராயும்.

ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS) சந்திர மண் மற்றும் பாறைகளில் உள்ள மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களின் கலவையை ஆராயும்.

நீர் கண்டுபிடிப்பு

நிலவின் தென் துருவப் பகுதியில் ஆழமான பள்ளங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அங்கு மிகவும் குளிராகவும், சூரிய வெளிச்சம் இல்லாமல் இருளில் இருக்கும் இடமாகும். அதனால் அங்கு உறைந்த நீருக்கான வாய்ப்பு உள்ளது.

சந்திரயான் -1 திட்டத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு சந்திரனின் மெல்லிய வளிமண்டலத்தில் (எக்ஸோஸ்பியர்) மற்றும் சந்திர மேற்பரப்பில் உள்ள நீர் மற்றும் ஹைட்ராக்சில் (OH) மூலக்கூறுகளின் கண்டுபிடிப்பு ஆகும்.

இந்தியாவின் மூன் இம்பாக்ட் ப்ரோப் (எம்ஐபி) - தென் துருவத்திற்கு அருகிலுள்ள சந்திர மேற்பரப்பில் வேண்டுமென்றே மோதிய ஒரு பேலோட் - சந்திர வளிமண்டலத்தில் நீர் மற்றும் ஹைட்ராக்சில் மூலக்கூறுகளின் செறிவை ஆய்வு செய்ய உதவியது.

மினி-எஸ்.ஏ.ஆர் என்று அழைக்கப்படும் மற்றொரு பேலோட் தென் துருவத்திற்கு அருகிலுள்ள பள்ளங்களுக்குள் நிரந்தரமாக நிழலாடிய பகுதிகளில் நீர்-பனியின் மேற்பரப்பு படிவுகளைக் கண்டறிய உதவியது.

மூன் மினராலஜி மேப்பர் அல்லது எம்-3 எனப்படும் நாசாவால் உருவாக்கப்பட்ட மூன்றாவது பேலோட் சந்திரனின் மேற்பரப்பில் இந்த மூலக்கூறுகளைக் கண்டறிய உதவியது.

சந்திரனில் உள்ள தண்ணீரை மேலும் ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2, நீர் மற்றும் ஹைட்ராக்சில் மூலக்கூறுகளை தனித்தனியாக அடையாளம் காணவும், நிலவில் உள்ள நீர் அம்சங்களை முதல் முறையாக வரைபடமாக்கவும் உதவியது. அந்த பணியை இப்போது ட சந்திரயான்-2 மேற்கொள்ள உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment