பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், “நமது மகள்களுக்கு சத்துக்குறைபாடு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு ஒரு குழுவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பொருத்தமான வயதில் அவர்களுக்குத் திருமணம் செய்வதை உறுதிசெய்ய அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், நமது மகள்களின் திருமண வயது பற்றி பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறினார்
பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போதைய 18 -ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கல்கள் என்ன ?
இந்தியாவில் 21 வயதிற்குப் பிறகு தான், பெரும்பான்மையான பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர் என்று தரவுகள் தெரிவிகின்றன . கீழே, சுட்டிக்காட்டப்பட்ட விளக்கப்படம் 1-ல், பெண்களின் சராசரி திருமண வயது 22.1 ஆண்டுகள் என்றும், அனைத்து மாநிலங்களிலும் இந்த சராசரி வயது 21க்கும் அதிகமாக உள்ளது என்றும் விளக்குகிறது.
குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் அடியோடு மறைந்துவிட்டன என்பதை இது குறிக்கவில்லை. உதாரணமாக, சமீபத்திய தேசிய குடும்பநல மற்றும் சுகாதார கணக்கெடுப்பு 4-ல், (NFHS-4) இந்தியாவில் வசிக்கும் 20-24 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 26.8% பேர் (விளக்கப்படம் 2-ல்), 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாகக் கண்டரிந்தது.
குழந்தைத் திருமணமும், பொது சுகாதாரமும்:
குழந்தை திருமணத்தைத் தடுப்பதன் மூலம், தாய் இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம் , மகப்பேறின் போது இறக்கும் விகிதம் குறையும் என்று அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் தீபா சின்ஹா தெரிவித்தார் . தற்போது, ஒரு லட்சம் பிரசவத்தில், பேறு காலத்தில் உள்ள 145 தாய்மார்கள் இறந்து வருகின்றன. ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் ஆயிரத்துக்கு 43 பேர் என்று உள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட சிசு மரணம் 1000 பேருக்கு 30 என்றும், பிறந்த குழந்தைகளில் 1000 பேரில் 25 என்றும் உள்ளது. ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உள்பட்ட மொத்தம் 10.8 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளில் இந்திய சிசு மரணம், தாய் மரணம்
இளம் வயதில் தாய்மை அடைந்த பெண்கள் ரத்த சோகை நோய்க்கு ஆளாகிறார்கள் என்று ஊட்டச்சத்து ஆராய்ச்சித் தலைவரும், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் கூடுதல் பேராசிரியருமான ஸ்வேதா கண்டேல்வால் தெரிவித்தார்.
இந்தியாவில் இனப்பெருக்க வயதில் (15-49 வயது) உள்ள பெண்களில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு இரத்த சோகை நோய் உள்ளது. பெண்கள் மத்தியில் இரத்த சோகை பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகமாக உள்ளது (விளக்கப்படம் 3).
மக்கள் தொகை மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
புதுடில்லியில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன், வறுமை, கல்வி, குறைந்த அளவிலான பொருளாதார வாய்ப்புகள், எதிர்கால பாதுகாப்பு ஆகியவை குழந்தை திருமணத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. ” இந்த காரணங்கள் தீர்க்கப்படாத வரை, திருமண வயதை அதிகரிக்கும் சட்டம் போதுமானதாக இருக்காது” என்று எச்சரித்தார்.
தரவு என்ன காட்டுகிறது?
பள்ளிப்படிப்பு இல்லாத பெண்களின் சராசரி திருமண வயது 17.6 ஆக உள்ளது. 12 ஆம் வகுப்பு முடிந்த பெண்களின் சராசரி திருமண வயது 23 ஆக உள்ளது (விளக்கப்படம் 6).
15-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் கிட்டத்தட்ட 40% பேர் பள்ளிக்கு வருவதில்லை. இதில், கிட்டத்தட்ட 65% பேர் ஊதியம் பெறாமல் பணி செய்து வருகின்றனர் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தான், திருமண வயதை மாற்றியமைக்கும் முடிவு ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடிய முடிவாக அமையும் என்று பலர் கருத்து தெரிவிகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil