ஆல்பட்ராஸ் மத்தியில் “விவாகரத்தை” ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் – ஆராய்ச்சி முடிவுகள்

இதன் விளைவாக ஒருமண தார வாழ்வு முறையில் விவாகரத்து என்ற முடிவை அப்பறவைகள் எட்டுகின்றன என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர்.

climate change causes divorce among albatrosses

climate change causes divorce among albatrosses : ராயல் சொசைட்டி B-இன் ப்ரோசிடிங்கில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் சுற்றுச்சூழல் நிலைமைகளால் ஆல்பட்ராஸ் பறவைகள் மத்தியில் இருக்கும் நீண்ட கால உறவு பாதிப்பு அடைந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் நிலைமைகள் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள ப்ளாக்-ப்ரவ்டு ஆல்பட்ராஸின் உறவுகளில் விரிசல்கள் ஏற்படுத்துகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பொதுவாக மோனோகமஸ் எனப்படும் ஒற்றைத் துணை உறவு முறைகளை கொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த பறவைகளின் உறவுகளை காலநிலை மாறுபாடுகள் பாதிக்கின்றன? ஆராய்ச்சியாளர்கள், இனப்பெருக்க தோல்விகளால் இந்த பறவைகள் மத்தியில் விவாகரத்து தூண்டப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனாலும் இது புதிய இனப்பெருக்க பயன்களையும் வழங்குகிறது. வெற்றிகரமான இனப்பெருக்கத்திற்காக பெண் பறவைகள் புதிய துணையை தேடிச் செல்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக ஒருமண தார வாழ்வு முறையில் விவாகரத்து என்ற முடிவை அப்பறவைகள் எட்டுகின்றன என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளார்கள் தென் அமெரிக்காவின் தெற்கே483 கி.மீ அப்பால் அமைந்திருக்கும் தெற்கு அட்லாண்டிக் பகுதிகளில் உள்ள ஃபால்க்லாண்ட் தீவுகளில் உள்ள ப்ளாக் – ப்ரோவ்ட் ஆல்பட்ராஸ்களின் நீண்ட கால தரவு தொகுப்புகளை ஆராய்ச்சியாளார்கள் ஆய்வு செய்தனர். பல ஆண்டுகள் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாறுபாடுகள் காரணமாக இந்த பறவையினங்கள் மத்தியில் விவாகரத்து ஏற்பட்டுள்ளாதா என்பதை ஆராய்ச்சி செய்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 15,500 ஜோடி அல்பட்ரோஸ்கள் வசிக்கும் ஃபாக்லாண்ட்ஸின் நியூ தீவில் இருந்து 2003 ஆம் ஆண்டு தொடங்கி அவற்றின் இனப்பெருக்க நடத்தை பற்றிய தரவுகளை அவர்கள் சேகரித்தனர்.

பல ஆண்டுகளாக விவாகரத்து விகிதம் மாறுபட்டு வந்தது. ஆனால் தற்போது அவை, நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றனர். குறைந்த தரம் கொண்ட ஆண்டுகளில் பதிவான விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

“விவாகரத்து” என்பது இனப்பெருக்கத் தோல்வியால் தூண்டப்படுகிறது என்பதைத் தொடர்ந்து பின்பற்றப்பட்ட அனைத்து மாடலிங் நுட்பங்களும் காட்டுகின்றன. ஆனாலும் இது சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிக அளவில் உருவாகியுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே, தற்போதைய காலநிலை மாற்றங்களின் வியத்தகு அளவின் வெளிச்சத்தில், சமூக ரீதியாக ஒற்றைத் தன்மை கொண்ட பறவைகள் எண்ணிக்கையின் இனப்பெருக்க செயல்முறைகளின் சுற்றுச்சூழல் உந்துதல் இடையூறுகள் கவனிக்கப்படாத விளைவுகளின் மூலம் உருவாகியிருக்கலாம் என்று கட்டுரை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New research how climate change causes divorce among albatrosses

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express