Advertisment

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது: 'ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல்' என்றால் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல்' விருது நேற்று வழங்கப்பட்டது.

author-image
sangavi ramasamy
New Update
russia awar

அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செவ்வாய்க்கிழமை)  ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் விருது வழங்கப்பட்டது.

Advertisment

ரஷ்யா- இந்தியாவிற்கு இடையிலான சிறப்பான சேவை மற்றும் இருநாடுகள் இடையே நட்பு உறவுகளை மேம்படுத்துதலின் காரணமாக இந்த விருது 2019-ம் ஆண்டு மோடிக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விருது என்ன, யாருக்கு வழங்கப்படும்?

ரஷ்யாவிற்கு செய்யப்பட்ட சிறப்பு  சேவைகளுக்காக அரசு மற்றும் பொது நபர்கள், இராணுவத் தலைவர்கள் மற்றும் அறிவியல், கலாச்சாரம், கலை மற்றும் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் சிறந்த பிரதிநிதிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அதோடு ரஷ்ய கூட்டமைப்பிற்கான சிறந்த சேவைகளுக்காக வெளிநாட்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இது வழங்கப்படும். 

இந்த விருது செயிண்ட் ஆண்ட்ரூவின் பெயரால் வழங்கப்படுகிறது. அவர் அப்போஸ்தலர்களில் ஒருவராக அல்லது இயேசுவின் 12 உண்மையான சீடர்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது.

இயேசு கிறிஸ்து  சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அப்போஸ்தலர்கள் அவருடைய நற்செய்திகளைப் பரப்புவதற்காக அதிக தூரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது. செயிண்ட் ஆண்ட்ரூ ரஷ்யா, கிரீஸ் மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பிற இடங்களுக்குச் சென்று, கான்ஸ்டான்டினோபிள் தேவாலயத்தை நிறுவினார், இது பின்னர் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தை நிறுவ வழிவகுத்தது.

ரஷ்யாவில் உள்ள 140 மில்லியன் மக்கள்தொகையில், 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தேவாலயத்தைப் பின்பற்றுகிறார்கள். 

செயிண்ட் ஆண்ட்ரூ ரஷ்யா மற்றும் ஸ்காட்லாந்தின் துறவியாகக் கருதப்படுகிறார். ஸ்காட்லாந்தின் கொடியில் உள்ள ‘எக்ஸ்’ சின்னம் ‘சால்டைர்’ எனப்படும் புனிதரின் சின்னத்தில் இருந்து வந்தது. இதேபோன்ற வடிவத்தின் சிலுவையில் தான் அவர் அறையப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஜார் பீட்டர் தி கிரேட் (1672-1725) 1698-ல் செயின்ட் ஆண்ட்ரூவின் ஆர்டரை நிறுவினார். இந்த விருதுக்காக வழங்கப்படும் சங்கிலி 17  இணைப்புகளைக் கொண்டுள்ளது, மேலும் ரஷ்ய கூட்டமைப்பின் மாநிலச் சின்னமான இரட்டைத் தலை கழுகின் கில்டட் படத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு பேட்ஜ், ஒரு நட்சத்திரம் மற்றும் ஒரு வெளிர் நீல பட்டு மோயர் ரிப்பன் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த விருதை பெறும் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு, அந்த பேட்ஜ் மற்றும் நட்சத்திரம், வாள்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 

இந்த விருது பெற்றவர்கள் யார் யார்? 

ராணுவப் பொறியியலாளர் மற்றும் துப்பாக்கி வடிவமைப்பாளர் (gun designer) மிகைல் கலாஷ்னிகோவ், எழுத்தாளர் செர்ஜி மிகல்கோவ், சோவியத் யூனியனின் கடைசித் தலைவர் மிகைல் கோர்பச்சேவ், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர் பேட்ரியார்ச் அலெக்ஸி II மற்றும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தற்போதைய தலைவர் கிரில் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  கடந்தகாலம் விருது கொடுக்கப்பட்டது பெரும்பாலும் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபர்களாக உள்ளனர்.  

ஆங்கிலத்தில் படிக்க:  What is Order of Saint Andrew the Apostle, conferred upon PM Modi?

வெளிநாட்டு தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டவர்களில் 2017 -ல் சீனஅதிபர் ஜி ஜின்பிங் மற்றும் கஜகஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி நர்சுல்தான் நசர்பயேவ் ஆகியோர் கடந்த காலங்களில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment