Advertisment

53ஆவது வயதில் ராகுல் காந்தி: காங்கிரஸில் இணைவதற்கு முன்பு என்ன செய்தார்?

ராகுல் காந்தி 2004ல் காங்கிரஸில் இணைந்தார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi turns 53 What the Congress leader was doing before joining politics

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

ராகுல் காந்தி இன்று தனது 53ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். 2004ல் அரசியலுக்கு வருகிறேன் என அவர் அறிவித்த நாளில் இருந்து இடைவிடாத வெளிச்சத்தில் காணப்படுகிறார். 2014 மக்களவை தேர்தல் தோல்வி அவரது அதிருஷ்டம் குறித்து கேள்வியெழுப்பியது.

Advertisment

இருப்பினும், 2004 க்கு முந்தைய அவரது வாழ்க்கையின் விவரங்கள் குறைவாகவே அறியப்படுகின்றன, மேலும் அவரது குடியுரிமை பற்றிய வதந்திகள் மற்றும் ஊகங்கள், கல்வி தொடர்பான சர்ச்சைகள் இன்றவுளம் தொடர்கின்றன.

இதற்கிடையில், இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, பாதுகாப்புக் காரணங்களுக்காக ராகுலும் அவரது சகோதரி பிரியங்காவும் வேண்டுமென்றே பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் அடிக்கடி கூறி வருகின்றன.

ராகுல் காந்தி தனது 34வது வயதில் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றிய சுருக்கமான தகவல்கள் இங்கே உள்ளன.

ராகுல் காந்தி கல்வி தகுதி

ராகுல் காந்தி புதுதில்லியில் உள்ள செயின்ட் கொலம்பாஸ் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். 1981 இல் டெஹ்ராடூனில் உள்ள தி டூன் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு. 1984 இல் அவர்களின் பாட்டி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, ராகுலும் பிரியங்காவும் பாதுகாப்பு பயத்தின் காரணமாக வீட்டிலேயே படிக்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தனது கல்லூரி படிப்பை டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் முடித்தார். அப்போது ராகுலின் சேர்க்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

ராகுல் விரைவில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இருப்பினும், 1991 இல் அவரது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், அவரால் அங்கிருந்து பட்டம் பெற முடியவில்லை.

பாதுகாப்புக் கவலைகள் மீண்டும் அதிகரித்ததால், ராகுல் காந்தி புளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரிக்குச் சென்றார், அங்கிருந்து 1994 இல் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ராகுல், அங்கிருந்து எம்ஃபில் முடித்தார். 2009 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவரது பட்டங்கள் பற்றிய சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் டிரினிட்டி கல்லூரியின் மாணவர் என்றும், 1995 ஆம் ஆண்டு வளர்ச்சிப் படிப்பில் எம்ஃபில் பட்டம் பெற்றார் என்றும் கூறியது.

அப்போது துணைவேந்தர் பேராசிரியர் அலிசன் ரிச்சர்ட், ராகுலின் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் அவரது நடத்தை "முன்மாதிரியாக இருந்தது, அவர் முழுவதும் நல்ல நிலையில் இருந்தார்" என்றார்.

கல்லூரி படிப்புக்கு பின்பு

“ராகுல் தனது தொழில் வாழ்க்கையை லண்டனில் இருந்து இயங்கும் மானிட்டர் குழுமத்தில் தொடங்கினார். அவர் அரசியலில் சேருவதற்கு முன்பு ஒரு தொழில்முறை வாழ்க்கையை உருவாக்குவதில் பிடிவாதமாக இருந்தார்.

அவர் விரைவில் இந்தியா திரும்பினார் மற்றும் மும்பையில் தனது சொந்த தொழில்நுட்ப ஆலோசனையை நிறுவினார், அங்கு அவர் தனது குழுவை இயக்குனராக வழிநடத்தினார்” என்று ராகுல் காந்தி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

2002 இல் நிறுவப்பட்ட நிறுவனம், Backops Services Private Ltd என்று அழைக்கப்பட்டது. மேலும் அவர் BackOps UK என்ற மற்றொரு நிறுவனத்தையும் நிறுவினார். இந்த நிறுவனத்தின் பதிவுகள் பின்னர் சர்ச்சைக்கு வழிவகுத்தன.

ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகனாக பட்டியலிடப்பட்டதாக கூறப்பட்டது. 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய கோரி, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராகுல் காந்தியை பிரிட்டிஷ் குடிமகன் என்று சில நிறுவனங்களில் குறிப்பிட்டுள்ளதால், அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றாரா? என்ற கேள்வி எழுந்தது.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், '“மனுதாரர்களுக்கான வழக்கறிஞரைக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட விஷயங்களைப் படித்தேன். ரிட் மனுவை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. அதன்படி, தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றார்.

2004 இல், ராகுல் காந்தி அரசியலில் சேரப் போவதாக அறிவித்தார், மேலும் அமேதியில் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment